சரி சரி... குறைச்சுட்டேன்... சொல்லு...

     அந்த நிலவின் நடுவில் வலது இடது புறத்தில் வானவில்லாய் இரண்டு வளைவுகளை கற்பனை செய்... அதுவும் அடர்ந்த கரு நிறத்தில்...

    ம் சரிடா என்றாள் சிரித்துக் கொண்டே...

     அந்த வளைவுகளின் கீழ் அந்த நிலவினை விட அதிகமான பிரகாசத்தில் கூரிய வேலாய் இரு கண்களை நினைத்துக் கொள்.

     கண் மட்டும் ஏன்டா பிரகாசம் அதிகமா??

      அதுவா... யாராலையும் உன்னுடைய அந்தக் கண்களை பார்க்க முடியாது டி... அந்த அளவிற்கு அது பவர்வுல். அதான்...

    ஓ...அப்போ அந்த கூரிய வேல்..?

   உன்னுடைய பார்வை... பார்த்தமாத்திரத்தில் இதயத்தை சட்டெனத் துளைத்துவிடும்... அதனால் தான்..

     செம்ம இமேஜினேஷன் டா உனக்கு.

    ஏய் லூசு...  இமேஜினேஷன் இல்லடி. உன்னை என் கண்ணால் பார்க்கும் பொழுது இப்படித்தான் தெரிகின்றாய்.

     ஓகே... கன்டினியூ... சீக்கிரம் முடி டா.. நான் இவ்வளவு நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தால் உறங்குகிறேன் என நினைத்து டீம் மேனேஜரே வந்துவிடுவார்.

   சீக்கிரமா?? அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லி விட முடியாதும்மா.. இன்னும் எவ்வளவு இருக்கிறது...

     அப்படியானால் இதுவே போதும். என்னால் உன் பார்வையின் ரசனையை புரிந்து கொள்ள முடிகிறது.

     ம்... புரிந்தால் சரிதான்...

    சரிடா... உன் வொர்க் முடிந்ததா?

   இன்னும் கொஞ்சம் இருக்கின்றது... ஆனால் அதை மதியத்திற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அவசரமில்லை. நான் இப்பொழுது வரவா? உனக்கு ஏதோ சந்தேகம் என்றாயே..?

     சரி வா... அப்படியே சாப்பிடவும் போகலாம்.

      சாப்பிடவா?? என்னை விட்டுவிட்டு சாப்பிடப் போறியா மட்சியா என வேகமாய் திரும்பினாள் அவள் அருகில் இருந்த மதனா.

    உன்னை விட்டுட்டு நான் எப்படிடி போவேன். நான் சிவ்கிட்ட டவுட் சொன்னேன்ல அதைத்தான் பார்க்க வருகிறேன் என்றான். நானும் சரிவா அப்படியே சாப்பிடவும் போவோம் என்றேன். வொர்க் முடிந்த பிறகு நீ, நான், சிவ் மூனு பேரும் தான் போவோம்...

   அப்படினா சரி.... என சிரித்துவிட்டு திரும்பினாள்.

   அதற்குள் சிவ்னேஷும் வந்துவிட இருவரும் வேலையில் ஆழ்ந்தனர். வேலைகளின் நடுவில் மட்சிய அவ்வப்போது சிவ்னேஷை ரசித்துக் கொண்டே இருந்தாள். உன் பார்வையில் மட்டுமல்ல என்னுடைய பார்வையிலும் நீயும் அழகுதான் டா...ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப அழகு, தெரியுமா உனக்கு.. என மனதினுள் அவனை ரசித்தவாறே பேசிக் கொண்டாள்.
என்னுடைய பார்வையாது அம்பு மாதிரி தைக்கச் செய்கிறது... ஆனால் உன் பார்வை... வன்முறையே இல்லாமல் காந்தம் போல் அல்லவா இழுத்துவிட்டது.. அடர்த்தியான கேசம்...காற்றில் அலை அலையாய் பரவும் பொழுது என் மனதிலும் அல்லவா அலைகளை ஏற்படுத்துகிறது... உன் கம்பீரச் சிரிப்போ என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றனவே..மற்றவர்களுக்கு உதவும் உன்னுடைய குணமோ... என்னை உன்னிடம் மயங்கச் சொல்லுகிறதே...

     ம்.. அவ்வளவு தான் மட்சியா... முடிந்தது. உனக்கும் புரிந்துவிட்டது அல்லவா??

     அவன் குரலில் திடுக்கிட்டவள் ஒருவாறு தலையினை ஆட்டிச் சமாளித்தாள். புரிந்ததா?? நாம் எங்கே கவனித்தோம்....இப்படியாடி இருப்பாய் என தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

   சரி கிளம்புவோம்... மதனா வாபோகலாம் என்று அவனே அழைத்தான்.

      மட்சியாவோ எங்கே என்பது போல் விழித்தாள்.

    என்னடி முழிக்கிற.. சாப்பிட வரலையா என்றாள் மதனா.

    ச்சே...  என்று மெதுவாய் சொல்லிவிட்டு...நான் எங்கடி முழிக்கிறேன்..பென்டிங் வொர்க் என்ன இருக்குனு தான் யோசித்தேன் என்று சமாளித்தாள்.

     ஆமா..மா... நீ முழிச்சதுலயே தெரிந்தது என்று மதனா பதிலுக்கு கேலி செய்ய.. சிவ்னேஷும் சிரித்தான்.

  அமைதியா வரீங்களா இல்லை நான் மட்டும் போகவா என்று செல்லக் கோபத்தினைக் காட்ட... இருவரும் வாய் மீது ஒற்றை விரலை வைத்தவாறு உடன் சென்றனர்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now