கலாட்டா 3

Start from the beginning
                                    

கடகடவென சமயலறை நோக்கி நடந்தாள் பரிமளம். பலகாரங்களை சிறு சிறு தட்டுகளில் நிரப்பி, பெரிய தாம்புல தட்டில் அனைத்தையும் வைத்து வந்திருந்தவர்களுக்கு வழங்கினாள். அனைவரும் அதனை எடுத்து உண்ண, " நல்லா தேவையானதை கேட்டு சாப்பிடுங்க, இங்க எல்லாம் கேட்டா தான் கிடைக்கும்" என சாடமாடையாக பரிமளத்தை வம்பிற்கு இழுத்தாள் சக்தி.

"சக்தி கொஞ்ச நேரம் வாய மூடுறயா?" என அவள் பக்கத்தில் இருந்து அவளின் கணவன் அதட்ட, "அட எப்போ பார்த்தாலும் என் வாய அடைக்கிறதே உங்க வேலையா போச்சி " என முனுமுனுத்துக் கொண்டு இருந்தாள் சக்தி.

"எம்மா தாயே, இந்த பங்ஷன் முடியும் வரை நீ மௌன விரதம் இருந்தா கூட நல்லாத்தான் இருக்கும், ஆனா உன்னால அது முடியாது, கொஞ்சம் அடுத்தவங்க மனதை கங்கடப்படுத்தாமலாச்சும் பேசு சக்தி" என சக்தியின் கணவர் அவளின் காதில் கெஞ்ச, திரும்பி அவரை முரைத்துவிட்டு மாப்பிள்ளை அமர்திருந்த இடத்தின் பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்துக்கொண்டு நின்றாள்.

சக்தியின் பேச்சி சரியில்லை, பார்வதியையும் அவளின் குடும்பத்தையும் குரை கூறுவதே வேலையாக செய்கிறார் என பல வகை எண்ணங்கள் சிவாவின் மனதில் அந்த ஒரு மணி நேரத்தில் பதிந்தது.

"இப்போ என்ன நம்ம பக்கம் வந்திருக்காங்க? உசாரா இருந்துக்கோடா சிவா" என தனக்குத்தானே கூறிக்கொண்டே நிமிர்ந்து சக்தியின் முகத்தைப் பார்த்து அசடு வழிய ஒரு சிரிப்பு சிரித்தான்.

"என்னப்பா தம்பி, எங்க பார்வதிய பிடிச்சிருக்கா??" என கேட்க, "எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆன்ட்டி" என கூறினான் சிவா.

"அதானே உன் பேச்சில தெரியுதே, இப்ப எல்லாம் நல்லா தான் இருக்கும், போகப்போக தான் தெரியும் என்று அவனையே வம்புக்கிழுக்க "அய்யய்யோ எஸ்கேப்" என அங்கிருந்து நகர்ந்தான் சிவா.

"மதியத்திற்கான சமையல் வேலை  ஆகுது, எல்லாரும் சாப்பிடனும் இது எங்கள் வேண்டுகோள் " என மரியாதையுடன் சுப்பையா கூற, "அப்படியே ஆகட்டும் அண்ணே" என சரசு கூறினாள்.

"ஜாலி, இன்னும் ஒரு மூன்று மணி நேரம் டைம் இருக்கு, எப்படியாவது பார்வதிய பேச வைக்கனும், சிவா உனக்கு நல்ல நேரம் டா சரியா யூஸ் பண்ணிக்கோ" என தனக்குத்தானே கூறிக்கொண்டான் சிவா.

வீடெங்கும் அரட்டையும் சிரிப்புச் சத்தமும் பரவி இருக்க, பார்வதியோ அதனுடன் ஈடுபடாமல் சற்று ஆழ்ந்த யோசனையிலேயே இருந்தாள்.

வீட்டெங்கும் வலை வீசி தேடி, பார்வதி இருக்கும் இடத்தை கண்டறிந்தான் சிவா.

சாமியறையின் சுவற்றில் சாய்ந்தவலாய் நின்றுக்கொண்டிருந்தாள் பார்வதி.

"ஹேய் பார்வதி, உன்னைத்தான் தேடினேன், இங்க தனியா என்ன பண்ணுர??" என கேட்டவனாய் அவள் அருகில் சென்று நின்றான்.

"என்னங்க இப்படி தனியா வந்து என்கூட பேசுவதை பெரியவர்கள் யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க, இங்க இருந்து போங்க" என தழுதழுத்த குரலில் கூற, "என்ன பார்வதி இப்படி பயப்படுற, நமக்கு நிச்சயம் ஆகிடுச்சி, நிச்சயம் பாதி திருமணத்திற்கு சமம்னு உனக்கு தெரியாதா???" என சிவா கேட்ட, "அதெல்லாம் தெரியும் ஆனா, இங்க அதெல்லாம் செல்லுபடியாகாது, கல்யாணம் முடிஞ்சா தான் சுதந்திரமா பேச முடியும், புரிஞ்சிக்கோங்க" என குனிந்த தலை நிமிராமல் பதில் கூறினாள்.

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)Where stories live. Discover now