***2***

7.2K 179 22
                                    

அம்மா... சீக்கிரம் ரெடி பண்ணும்மா... அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. இருடா இரண்டு நிமிடத்தில் வேலை முடிந்துவிடும். நீ சாப்பிடுவதற்குள் நான் மதிய உணவிற்கு கட்டி வைத்து விடுவேன்.

ஏம்மா மட்சியா.... ஏதோ ஒரு புக் வாங்கனும்னு சொன்னியே அது என்ன புக்னு நேம் சொன்னா நான் வாங்கி வைப்பேனல்லவா?

அது... இல்லை வேண்டாம் நானே வாங்கிக் கொள்கிறேன். ஆன்லைனில் புக் செய்தால் வீட்டிற்கே வந்துவிடப் போகிறது... ஏன்ப்பா நீங்க போகனும்...

அதுவும் சரிதான். சரிம்மா என்ன புக்னு சொன்னா நானும் படிப்பேனல்லவா?

அப்புறமாக சொல்கிறேன், இப்போ முதலில் நான் ரெடி ஆக வேண்டும்.

நான் வேண்டுமானால் வந்து ட்ராப் பண்ணவா டா?

இல்லப்பா பரவாயில்லை... மதனா வருவாள் அவளுடனே சென்றுவிடுகிறேன். இல்லையென்றால் அவள் வேறு கத்துவாள்.

சரிம்மா... நீ சாப்பிடு முதலில்.

காலை உணவை முடித்துவிட்டு மதிய உணவையும் வாங்கிக் கொண்டு புறப்பட்டாள்.

பேருந்து நிறுத்தத்திற்கு மட்சியா வரவும் மதனாவும் வந்து சேர்ந்தாள்.

என்ன மட்சியா நேரத்தில் வந்துவிட்டாயா?

இல்ல மதனா இப்போதான் வந்தேன் நீயும் வந்துவிட்டாய்.

சாப்பிட்டாயா மட்சியா? நான் இன்னும் சாப்பிடவில்லை. ஆபிஸ்ல எனக்கு கம்பெனி கொடுடி..

ம் நான் சாப்பிட்டுதான் கிளம்பினேன். பட் கம்பெனி கொடுக்றேன். டோன்ட் வொரி. ஆமா.. என்னதான் டி பண்ணுவ தினமும் லேட்... லேட் ...லேட்...

இல்லமா... வீட்ல நானே சமைக்றேன்ல அதான் லேட். உனக்கென்ன அம்மா சமைச்சிடுறாங்க, டிபன் போட்டு வைக்றது, நீ கிளம்புவதற்கு உதவி செய்வது என உன் வேலையையும் செய்யுறாங்க... ஆனால் எங்க வீட்ல அப்படி இல்லையேடி... இங்க செஞ்சாதான் நாளைக்கு புகுந்த வீட்லயும் வேலை செய்வனு எங்கம்மா ஒரே ஸ்ட்ரிக்டா இருங்காங்க டி... தொல்லை தாங்க முடியலை...

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now