அறிமுகம்

211 13 16
                                    

நான்கு நாட்களாக மழை பெய்து இன்று தான் சூரியன் தெரிகிறான்.
இன்னமும் வானத்தில் மழையின் அறிகுறிகள். மேகங்கள் கர்பம் தரித்து இப்பவோ அப்பவோ என்று இருந்தன.
காற்றில் ஈரம் இருந்தது. மரத்தின் அடியில் ஹரீஷ் புத்தகத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.

அவனை காண தேவதை தோற்றுபோகும் அளவிற்கு அழகினையுடைய சவிதா அன்ன நடையில் அவன் அருகில் வந்தாள்.

எப்போதும் சல சல வென்று சத்தத்துடன் இருக்கக்கூடிய அந்த நகரம் அமைதியின் உச்சத்தில் இருந்தது. 
ஒருநிமிடம் புயல் போல் காற்று வீசியது மரத்தில் உள்ள பூக்கள் எல்லாம் அவளை வரவேற்றன. ஆனால் ஹரீஷ் அவளைக் கண்டுகொள்ளாமல் உறைந்து போய் இருந்தான்.

சவிதா மெல்லிய குரலில் ஹரீஷ் என்ன யோசிக்கிற டா என்று கேட்டாள். அவன் காதில் எதுவும் கேட்கல. மீண்டும் ஒரு முறை டேய் ஹரீஷ் உன்னதான்டா என்ன யோசனை என்றாள்.

சாரி அம்மு(செல்ல பெயர்) நீ வந்ததை கவனிக்கல.
அதான் தெரியுதேடா எதைபத்தி யோசனை. வேற எதைபத்தி யோசிப்பேன் எல்லாம் நம்மல பத்திதான். எவ்வளவு அழகான வாழ்க்கை அத வாழவிடாம பண்ணிட்டாங்களே 😢 டி அத நினைக்கும் போது தான்
என்னையே மறந்து சோகத்துக்குள்ள போயிடுறேன்.

டே லூசு நீ அதபத்தி இனி பேசுன அப்புறம் நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது என்று செல்லமாக கோபித்து கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டால்.

ஏ அம்மு....

போடா நா கோபமா இருக்கேன்😏

அடியே கள்ளி உனக்கு கோப பட தெரியல டி. உன் உதட்டு ஒரத்துல அந்த சிரிப்பு எனக்கு காட்டிகொடுத்துட்டு அம்மு.

புன்னகையுடன் திரும்பி இந்த ஹரீஷை  வர வைக்க தான் இந்த கோப நாடகம். சரி வா போலாம் னு கையை பிடித்து இழுத்தாள்.

எங்க அம்மு கூப்பிடுற

ம்ம்ம்ம் பேசாம வா என்று கூறி அந்த இடத்தைவிட்டு ஹரீஷைக்
கூட்டி சென்றாள் ........


இருவர் உலகம்Where stories live. Discover now