♥6♥

6.2K 168 56
                                    


                 அவனின் மிருகத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவள்... சுவற்றோடு சாய்ந்து அமர்ந்து கதறி அழுதாள்... மூச்சுத்தினற அழுதவள் அப்படியே மயங்கி சரிந்தாள்....

                சில நிமடங்கள் சென்று உள்ளே வந்த கிருபாகரன் கண்டது மயங்கிய நிலையில் தரையில் கிடந்த அகல்யாவைதான்....

               ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்து இப்படி பண்ணிவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் இருந்தவன் ஓடி சென்று அவளை கைகளில் தூக்கினான்....

               தன் ரூமிற்கு அருகில் இருந்த தான் ரெஸ்ட் எடுக்கும் ரூமில் கொண்டு சென்று படுக்க வைத்தவன்.. அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்தான்...

              மெல்ல கண் திறந்தவள்... அவனை கண்டதும் கிருபா என்ன நம்பு... ப்ளீஸ் கிருபா... ஐ லவ் யூ.. என்று உளறியபடி மீண்டும் மயங்கினாள்....  அவளை தன் மடியில் தாங்கி உறங்க வைத்தவன்... அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.... அவனுக்கு கடந்த காலம் முழுவதும் பூதாகரமாக பேய் ஆட்டம் ஆடியது...

              அவளை பெட்டில் படுக்க வைத்து வெளியே சென்றவன் அனைவரும் தங்கள் வேலையை செய்கிறார்களா என்று பார்த்துவிட்டு எல்லா தளத்தில் இருந்த மேனேஜரையும் அழைத்து தன்னை இன்று டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று உதரவிட்டுவிட்டு தன் அறைக்கு திரும்பி வந்தவன்... அகல்யாவை தேடி விரைந்தான்.... அவன் எப்படி விட்டு சென்றானோ அந்த நிலையிலேயே படுத்திருந்த அவளை தன் மடிதாங்கி தன் பழைய நினைவிற்கு சென்றான்...

             ஏய் ப்ளீஸ் டி... அந்த நாய் குட்டி கத்திட்டே இருக்கு பாரேன்... அதுக்கு பால் மட்டும் வாங்கி குடுத்துட்டு வந்துறேன் டி... என்று சத்யாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் அகல்யா...

            அடியே கொன்றுவேன்... ஒழுங்கா வந்து சேரு... முதல் நாளே கிளாஸ்க்கு லேட்டா போக கூடாது வா... என்று அவளை தர தர வென்று இழுத்து சென்றாள் சத்யா...

            சத்யாவுடன் நடந்தவள் திரும்பி தரும்பி அந்த நாய்க்குட்டியை பார்த்தபடியே சென்ற அகல்யாவை தான் முதன் முதலில் கிருபா கண்டது... அந்த கல்லூரியில் அவன் மூன்றாம் ஆண்டு மாணவன்... இறுதி வருடம் என்பதால் ஆட்டமும் துள்ளலாக இருந்தது...

                அன்று முதல் வருட மாணவர்களுக்கு முதல் நாள் என்பதால் கிருபாவின் கேங்க கேன்டினில் சென்று ஜுனியரை ரேகிங் என்ற பெயரில் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்....

               மச்சி அந்த பொண்ணு யாரு டா??

             எந்த பொண்ணு மச்சி???

             அகல்யாவை பார்த்து கையை காட்டினான் கிருபா...

             ஓ அவளா.. தெரில மச்சி... இன்னைக்குள்ள விசாருச்சு சொல்றேன்... என்றான் ராஜிவ்... கிருபாவின் உயிர் தோழன்....

           மற்ற நண்பர்கள் அனைவரும் கிருபாவை ஓட்ட ஆரம்பித்தனர்...

          அவர்கள் கிண்டலை சிரிப்பால் சமாளித்தவன் கண்ணுக்குள் அவள் திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்ற முகம் ஆழமாக பதிந்து போனது...

         அவள் பார்த்த திசையில் திரும்பி பார்த்தவன் அங்கு நாய்க்குட்டியை கண்டுவிட்டு ஒரு பாலை வாங்கி அதற்கு ஊற்றிவிட்டு... தன் பட்டாளத்தை அழைத்துக் கொண்டு தன் வகுப்பறையை நோக்கி சென்றான்...

         அகல்யாவும் சத்யாவும் கல்லூரியில் சேர்ந்து ஒரு வாரம் சென்றிருக்கும் போது... ப்ரஷ்ஷர்ஸ் பார்ட்டி நடத்தினார்கள்....

         கிருபா அவளுக்கு சீனியர் என்பதால் அவன் செட்தான் அதை நடத்தியது....

        கிருபாவும் ராஜிவ்வும் மேடையில் நின்று ஒவ்வொரு பேராக அழைத்துக் கொண்டுருக்க.. கீழே அமர்ந்திருந்த அகிக்கு உதறல் தொடங்கியது....

       அவளின் சுபாவமே அப்படி
என்பதால் முடிந்த அளவு சத்யா அவளை தேற்றியிருந்தாள்.. ஆனால் விதி யாரை விட்டது...

       அகியின் பேரை கிருபா அழைத்த போது நடுங்கிக் கொண்டே போனவள்... அவன் அவளை பாட சொன்னதும் தலை சுற்றி கீழே சரிந்தாள்.....

      அவளையே பார்த்திருந்தவன் அவளை கீழே விழாமல் தாங்கி தன் தோள் சாய்த்தான்....

      அதை ஊரே வேடிக்கை பார்த்தது...

      அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்.....

அகல்யாWhere stories live. Discover now