பாலைவனத்து முல்லை❣️
பகுதி-3
'எல்லாம் காதல் பண்ணும் பாடு' என்று கதிர்வேலனின் மாற்றதுக்கு உண்டான விடையாக சொன்னாள் ரோஜா.
'என்ன ரோஜா சொல்லுற? காதலா!? ஓ... அப்போ மாமா சார் மீனாவை காதலிக்கிறாரா?'என முல்லை கேட்டாள்.
'இப்போ உனக்கு ஏன் வாத்தியோட கதை,சரி நீ சொல்லு, உன் அப்பாவுக்கு உன் காதல் விவகாரம் தெரிந்தால் அவரு உன்னை இந்த வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைப்பாரா?'என ரோஜா கேட்டதும், 'மாட்டாரு தான்' என்றாள் முல்லை.
'அப்போ என்ன பண்றதா உத்தேசம்!?' என ரோஜா கேட்டதும்,' மாமா தான் சொல்லணும்'என்ற முல்லைக்கு ஜீவானந்தத்தின் சொல்லே வேதவாக்கு.
'மாமானா! எந்த மாமா? உனக்கு தான் நாலு மாமா இருக்காங்களே' என ரோஜா சொல்ல,
'ஜீவானந்தம் மாமாவை தான் சொன்னேன்' என முல்லை காதல் மிளிரும் விழிகளில் சொன்னாள்.
'பெரிய அண்ணன் வாய் மட்டும் தான் பேசும், உன் அப்பாவுக்கு வாத்தி ரைடு தான் சரி, அதனால நீ உன் மாமா சாரை அழைச்சிட்டு போய் உன் அப்பாகிட்ட பேசு' என்றாள் ரோஜா இலைமறை காயாக.
'ஹையோ... அவுகளுக்கு தான் என்னை பிடிக்கவே பிடிக்காதே, அதனால மாமா சார் எனக்காக எல்லாம் பேச மாட்டாரு' என முல்லை சொன்னதும்,
'ஆமா ஆமா இப்போ உன்னை வாத்திக்கு பிடிக்காது தான்' என்றாள் ரோஜா.
அடுப்பணையில் நின்றப்படியே ரோஜாவும் முல்லையும் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் கதிர்வேலனின் அறையில் இருந்து குறட்டை சத்தம் கேட்டது.
'இதோ வாத்தி வண்டியை ஸ்டார்ட் பண்ணிடுது. நீ வா முல்லை நம்ம சாப்பிடலாம்' என ரோஜா வெள்ளி தட்டில் சாப்பாட்டை வைத்து முல்லைக்கு கொடுத்தாள்.
'எனக்கு இப்போ சாப்பாடு வேண்டாம் ரோஜா, மாமா வந்ததும் நான் அவுக கூட சாப்பிடுறேன்' என முல்லை சொன்னதும்,
'ஆம்பளைங்க வெளிய போனால் நம்மள மறந்துடுவாங்க முல்ல, நீ வா நம்ம சாப்பிடலாம்'என ரோஜா வம்படியாக முல்லையை மதிய வேளை உணவை சாப்பிட வைத்தாள்.
YOU ARE READING
🌹 பாலைவனத்து முல்லை 🌹
Fanfictionதூக்கம் வராத போது படியுங்கள். இந்த கதையின் ஆசிரியர் நான் இல்லை 🙆
