முற்றுப்புள்ளி

14 2 0
                                    

தனித்திருந்தாலும் நீ இல்லை
என்ற ஏக்கம் - கூடி இருந்தும்
இன்பம் இல்லாத் துயரம்
வாழ்க்கை என்பது இதுதானா?
போராடிய போராட்டங்களுக்கு
புகழ் ஒன்றும் அவசியமில்லை!
வெறும் படிப்பினை போதும்.
எனினும் இந்நிலையில்
படிப்பினைகளும்
பிரயோஜனம் இல்லை!
வாழ்வு என்பது ஒரு
சோதனைக் குழிதான்
வாழ்க்கை என்றாவது
முற்றுப் பெறட்டும்....

உன் பிரிவினால் அறிகிறேள்.
உயிர்ப் போகும் வலியினை !
பிரிந்த போது உணர்கிறேன்,
தான் செய்த தவறினை!
மனம் விட்டுப் பேச
ஏனோ உன்னை நாடினேன்!
மனமின்றி பேசுவாய் என அறியாமல்!
மௌன வார்த்தைகளுடன்
காலத்தை கழித்தேன்
மொத்தத்தில் மௌன மொழிகளுக்கு அர்த்தம் தேடுவதில்
தோற்றுவிட்டேன்!
உன் பிரிவிற்கு காரணம் என்னவோ?
எனினும் உன் பிரிவிற்கு
முற்றுப்புள்ளி •

மனம் விட்டு பேச
எண்ணுகையில் ஏனோ - மனம்
திடுக்குகிறது
கலங்கிக் கிடக்கும் கண்களில்
கண்ணீர் கூட வருவதில்லை...
பல விருப்பங்கள் அடி மனதில்
பலவாறு விதைத்திருந்தாலும்
முனளக்கால் வேரூன்றிக் கிடக்கிறன...
என் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடுவதை விட - என் காகிதத்தில்
வைக்க நாடுகிறேன் - வாழ்வு
என்றாவது முற்றும் பெறட்டும்!

உன் பிரிவுWhere stories live. Discover now