பாகம் 11

Start from the beginning
                                    

கதிரின் அந்த முகம் அவளுக்கு எப்போதும் பயத்தை தருவதைப் போல் அன்றும்.. அதை சற்று அதிகமாகவே தந்தது.

கையை நீட்டினால் தொட்டுவிடும் தூரத்தில் நின்ற அவர், இப்பொழுது அதையும் குறைக்கும் விதமாக தன்னை நோக்கி வர.. அந்த தூரத்தை மீட்ட அவள் பின்னே செல்ல எடுத்த முயற்சியை தவிர்க்கும் விதமாக, தன் கையை அவர் அவள் பின்னே செலுத்தி முல்லையை தன் மீது சரித்து தன் பிடியில் நிறுத்தினார்.

அதை எதிர்பார்க்காத அவள்,  தன் எதிரில் நிற்கும் அவர் முகத்தை சிறிதான பயத்தில் நேராக பார்க்க, தன் பிடியை இன்னும் அழுத்தி அவள் முகம் பார்க்க... அவர் வாசம் அவள்ளுள் நுழைய தொடங்கி... அவள் இமை மூடி அங்கே இருள் சூழ இனக்கம் முற்றி அவள் இதழ் பற்றி அவர் இதழ் இனைத்தார்.

நேரம் சென்றதும். நொடியில நிமிடங்களா என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அதற்கு மேல் அவளால் தாக்குப் பிடிக்க முடியாதென அவள் திணறலில் அறிந்து கொண்டவர், முல்லையை தன் பிடியிலிருந்து விடுவித்தார்.

அவள் அவர் முகம் பார்க்கவில்லை. அவர் அவள் முகத்தை மட்டும் முழுதாய் ஆக்கிரமித்தார்.

come closer! I'll give all my love... என்றார் கதிர்.

அவள் எதுவும் பேசாது தள்ளிச் சென்றாள்.

அவரை எதிர்கொள்ள முடியாமல், அவள் உள்ளிருக்கும் அறைக்குள் ஓடிவிட, அவரும் பின் தொடர்ந்தார்.

கதிர் அங்கு வருவார் என்பதை முல்லை எதிர்பார்க்கவில்லை. படுக்கையில் உட்கார்ந்து இருந்த அவள், அவரைக் கண்டதும் எழுந்தாள்.

உட்காரு... என்றார்.

தானும் அமர்ந்து, ஒரு முத்தத்துக்கே ஓடி வந்துட்டா என்ன பண்றது என்றார்.

அவள் பேசவில்லை.

எனக்கு எப்படி சொல்லணும் தெரியல ..என்னால உன்ன சரி செய்திட முடியும் என்று நம்புனேன் முடியாது போல, நீ பேசுறத எல்லாம் கேட்க எனக்கு பயமா இருக்கு.come let's consult psychologist... என்றார் கதிர்.

🌈என் தூரிகா நீயடா 🌈Where stories live. Discover now