பாகம் 10

Start from the beginning
                                    

ம்ம்... போலாம்

பானி பூரி சாப்பிடுவோமா என்றால் முல்லை.

பசிக்கு மேடம் பானிபூரி தான் சாப்பிடுவீங்களோ என கேட்டு குரலை அப்படியே உள்வாங்கி விட...

அதைப் புரிந்த முல்லை அவர் அதில் தடுமாறத் தேவையில்லை என்பதை தெரிவிக்க,

ஏங்க pls போலாமா என்றால்...

கதிரின் கண்கள் அவள் கண்களை நேராக சந்தித்தது.

அவள் அதை எதிர் கொள்ள முடியாது குனிந்து கொண்டாள்.

wanna see your man... என்றார் கதிர்...

முழித்த அவளிடம்...

பாக்க முடியுமா? என்றார் கதிர்.

பாக்கலாம்... ங்க.. என்றால்

எப்போ?? என்றதுக்கு

நாளைக்கு மார்னிங் வரிங்களா... அவன் ஆபீஸ்க்கு போறதுக்கு முன்ன???

you stay together? என்றவருக்கு ஆம் என பதில் அளித்தால் சரி நாளைக்கு வரீங்களா என்றதும்,

sure! என எந்த உணர்வும் இன்றி கூறினார்...

but ... அவன ஏன் பாக்கணும்னு தோணுது??? என்றாள்..

என்னால சமாளிக்க முடியாத ஒருத்தியை வைத்து சமாளிக்கிறானே அதான் என்றார் தன்னுள் இருந்த கவலைகள் எல்லாம் புதைத்து.

என்ன??? என்ன முறைத்தாள்

இதுவெல்லாம் பொய் என அவள் கூறி அவரை தோளோடு அணைத்துக் கொண்டு முத்தமிட வேண்டும் என்ற உணர்வு அவரை இம்சித்தது.

தன்னை அவள் அந்த அளவுக்கு பாதிக்கவில்லை என,, என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என நினைத்த அவருக்கு அவளிடம் மொத்தமாய் காதலில் தான் விழுந்து கிடப்பதை அந்த நொடி உணர்த்தியது.

இருவரும் பேசிக்கொண்டே, தங்கள் வாகனத்தை அடைந்தனர்.

அவளிடம் தற்போதைய தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு காலை வருவதாக கூறி விடை பெற்று சென்றார்.

எப்போது விடியும் என காத்திருந்தது.. தன் முதல் வேலையாக அவள் தங்கி இருக்கும் பிளாட்டின் முன் அவர்.

🌈என் தூரிகா நீயடா 🌈Where stories live. Discover now