பாகம் 9

Start from the beginning
                                    

அப்பா... அவள தேடணும் இது முக்கியம் இல்ல என கிளம்ப கதிர் முயற்சிக்க

கதிரின் வீட்டிற்குள் இருவர் நுழைந்தனர்.

முல்லையின் அப்பாவையும் அண்ணனையும் கதிர் பாக்க..

அவர்.. கதிரிடம் கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோமா தம்பி என்றார். கதிரின் அவசரத்தை தெரியாமலும் புரியாமலும்.. கதிர் செய்வதறியாது தடுமாறினாலும்...

வந்து உட்காருங்க மாப்ள என கைபிடித்து அவரை முல்லையின் அப்பா அமரச் செய்ய.. அவருக்கு ஆச்சரியம் தான் என்றாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அவர் இல்லை

என்ன தம்பி... மாப்பிள்ளை என்று சொல்றேன்னு பாக்குறீங்களா?? யோசிச்சேன் பெத்த பிள்ளையை விட என்ன முக்கியம் சொல்லுங்க.. ஆமா.. காதல் தப்பு தான். இவர் கூட போனா நம்ம பிள்ள வாழ்க்கை நல்லா இருக்காதுன்னு தெரிஞ்சா தடுக்கலாம். ஆனா அவ நல்லா இருப்பான்னு தெரிஞ்சா அப்புறம் வேற ஒன்னும் பெருசா தெரியல தம்பி

அதுவும் என் பொண்ணு உங்க கூட துணிஞ்சு வந்தப்ப தான் புரியுது.. அவளுக்கு என் மேல இருக்க பயத்தை விட ,,நீங்க அவளுக்கு கொடுத்த நம்பிக்கை பெருசுன்னு.

நீங்களே முல்லை கல்யாணம் பண்ணிக்கோங்க.. என்ன சந்தோஷம் தானே என தன் முன்னிருந்த கதிரிடம் அவர் கூறி முடிக்க... கதிர் அமைதியாய் விஷயத்தை மனதில் குழப்பிய படி அமர்ந்திருந்தார்.

முல்லையின் அப்பா கூறுவதில் இருந்து அவள் வீட்டிற்கு செல்லவில்லை என்பது மட்டும் அவருக்கு தெரிய, அவர் மனதில் எங்கோ ஒரு ஓரமாய் இருந்த அந்த நம்பிக்கையும் உடைக்கப்பட்டது.

முல்லையின் அப்பா சரி... அவள கூப்பிடுங்க உள்ள இருக்காளா என முல்லை என்று குரல் விட...

கதிர் அவர் முகம் பார்த்து வார்த்தை இல்லாமல் தவித்தார்..

கதிரின் அப்பா குறிக்கிட்டு...

நான் சொல்றத பொறுமையா கேளுங்க... உங்க பொண்ணு தேடி நாங்களே உங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தோம் என்றார்

🌈என் தூரிகா நீயடா 🌈Where stories live. Discover now