முல்லையை நோக்கி இருந்த கதிர், நகண்டு கொஞ்சம் திரும்பி நேராக அமர்ந்து கொண்டார். அவர் இப்போது தன்னை பார்க்க வில்லை எனத் தெரிந்ததும்.. அவள் பார்வை அவரை நோக்கியது.. சற்றே திரும்பி தலையை கோதினார். கதிருக்கு இனி இந்த அருகாமை நல்லதல்ல என்பதை உணர்த்த ஏதோ யோசித்து அவளை பார்க்கிறார் .நேர்கொண்டு பார்க்க முடியாமல் தவித்த அவளிடம்.. சரி அழுது முடிச்சிட்டா கிளம்பு, லஞ்ச் வெளிய போலாம் என்று சலனமின்றி பேசி எழுந்து சென்ற கதிரை புரியாமல் பார்த்தால் முல்லை.

வெளி செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த அவரை, வெறுப்புடன் முல்லை பார்த்துக் கொண்டிருக்க. அவர் தெரிந்தும் ஏதும் பொறுப்பெடுத்தவில்லை. அவரின் இந்தச் செயல் மேலும் அவளுக்கு கோபத்தை தந்தது. நான் என்னோட உள் மனசுல இருந்தது எல்லாம் மறைக்காம சொல்லி இருக்கேன்.. எனக்கு எவ்வளவு கஷ்டமா ,பயமா இருக்குன்னு சொன்னேன். எப்படி ஒரு ஆள் இப்படி அத கண்டுக்காம இருக்க முடியும் என மனதில் நினைத்துக் குழம்பி கொண்டிருந்த கணம் சரி போகலாமா என்ற.. அவரிடம் ஏதோ கோபமாய் கத்த முயன்ற நொடி, அவர் கைபேசி முந்திக்கொண்டு கத்த.. அமைதியாக இருக்குமாறு அவளிடம் செய்கை செய்து சொல்லுங்கப்பா என்று அங்கு பேச்சை தொடர்ந்தார்.

அவர் ஏதோ சொல்வதை கேட்டு ..தலையாட்டிக்கொண்டே வந்துருவேன் வெயிட் பண்ணுங்க என்று பேசியவாறு அவளிடம் வாசலை நோக்கி தலையசைத்தார் .அதற்கான அர்த்தம் வெளியில் சென்றாக வேண்டும் என்பதை புரிந்து அவள் அதன்படியே நடந்தால் வேறு வழியின்றி.

அவரும் வெளிவந்து கதவை அடைத்து. சரி பா bye என்று பேசி முடிக்க.. சரி போலாமா என்று கூறி அவள் முகம் பாராது முன்ன நடந்த கதிரை பின்தொடர்ந்தால் முல்லை

ஒரு two minutes பக்கத்திலேயே ஒரு ஹோட்டல் இருக்கு என்றதன் மூலம் அவர்களுக்குள் ஒரு ஐந்து நிமிடம் நீடித்த மவுனத்தை கலைத்தார் கதிர்.

இல்ல வரல என்று அவரிடத்தில் கோபத்திலும் ,அதே சமயம் அழுகை வராமலும் சொல்ல வேண்டும் என முயற்சித்து கொண்டிருக்க.. அவளுக்கான நேரத்தை கொடுக்காமல் அவர் சொன்ன இடம் வரவே கதிர் உள் நுழைந்தார்.

🌈என் தூரிகா நீயடா 🌈जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें