பாகம் 6

Start from the beginning
                                    

அவளது நினைவை மாற்ற ஒலித்தது அண்ணனின் குரல்... ஹே முல்ல
சூப்பர் டி ..இந்த டிரஸ் 👗இந்த  மாடல் டிரஸ் நான் உனக்கு எத்தனை நாளா தேடுறேன்.. பாரு உன்னோட பிரண்டு மூலமா தான் உனக்கு பிடிச்சது கிடைக்கும்னு இருக்கு என்று கூறிக்கொண்டு அவள் கையில் அந்த உடையை திணித்துவிட்டு சென்றிருந்தனர்.

முல்லை வீட்டிற்கு வந்து விட்டதால்.. அவளின் வீட்டின் கட்டுப்பாடுகளை மீறி கதிருடன் ஏதும் பெரிதாய் பேசிட முடியவில்லை. அவள் பிறந்தநாள் மூலமாக அவரிடம் இருந்து ஏதேனும் ஒரு நல்ல பதில் வரும் என்று காத்திருந்தாள்.. ஆனால் அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது. இவர்களது உறவு ஒரு ரயில் பயண சினேகம் போல் முடிந்து விடுமோ என்றெல்லாம் இப்போது அதிகமாக முல்லைக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது .இந்த நான்கு வருடத்தில் அவள் எவ்வளவு குழம்பி இருந்தாலும் கதிர் அவளை தெளிவுபடுத்தி விடுவார் ..சில நேரங்களில் இருவரும் ஒரு வாரம் வரை கூட பேசாமல் இருந்தது உண்டு. ஆனாலும் அது அவர்களுக்கு பிரிவை தந்ததே இல்லை மாறாக ஒவ்வொன்றிலும் ஏதோ ஓர் புரிதலே முல்லைக்கு கிடைத்திருந்தது .ஆனால் இப்போது ஏதோ ஒன்றை அவள் முழுவதுமாக இழந்து விடப் போவதாய் மட்டுமே முல்லைக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.

இரண்டு நாள் கடந்து விட கதிரிடமிருந்து மெசேஜ் வந்தது..

கதிர்📱

வீசா confirm ஆயிருச்சுடா...NXT month foreign கிளம்பனும் என்று அனுப்பி இருந்தார்...

அந்த மெசேஜை பார்த்தவுடன் அடுத்த நொடியே கால் செய்ய... அவளது அழைப்புகள் எல்லாம் தவறிய அழைப்பாய் மட்டுமே அவளது போனில் save ஆனது. இந்த நான்கு வருடத்தில்.. இதேபோன்.. அவ்வளவு சந்தோஷத்தையும் ,அன்பையும் ,ஆச்சரியத்தையும் அள்ளிக் கொடுத்திருந்தது இதே போன் தான்..முல்லையோ இதுவரை யாரிடமும் காட்டாத வெறுப்பை அந்த ஃபோனின் மீது காட்டி.. இன்று தூக்கித் தூர எறிந்து இருந்தால் .மனிதர்களின் மனமே இதுதானே ஒரு நொடியில் எதையும் மாற்றி விடும்.

🌈என் தூரிகா நீயடா 🌈Where stories live. Discover now