பாகம் 3

Start from the beginning
                                    

கதிர்....

அது இருக்கும். பட் நீங்க சொல்லணும்னு நினைக்கிறத சொல்லிரனும் எல்லா இடத்திலும் நீங்க போங்க மெசேஜ் பண்றேன்னு சொல்லுவீகளா🤭 என்றார் நக்கலாக

முல்லையோ.. அவரிடத்தில் அடுத்து என்ன பேச என்று தெரியாது ...சரி விடுங்க அந்த விஷயத்தை என்று  சொல்ல

கதிர்....

எத🤔 ஓ உங்க கல்யாண விஷயமா?? என்று மீண்டும் அவரது முகத்தில் புன்னகையுடனும் சிறு குறும்புடனே கேள்விகளை கேட்க...

முல்லைக்கோ இந்த நிமிடம் அப்படியே மறைந்து விடக்கூடாதா என்றெல்லாம் தோன்றியது. ஒரு வழியாக இருவரும் விடை பெற்று வீடு வந்து சேர்ந்தனர்.

கதிர் :📱

   text me once you reached home என மெசேஜ் வர

முல்லை அதனை எடுத்து படித்தவரே... சிறிய புன்னகையுடன் வீட்டிற்குள் வர

முல்லை :📱
 
         Reached 🤗

என்று பதிலளித்துவிட்டு.. வீட்டை அடைந்ததும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தும் கொண்டு வந்திருந்த குழப்பத்தை போக்க கிச்சனுக்குள் நுழைந்து... டீயை கொதிக்க வைத்து ஒரு கப்பில் ஊற்றி வெளிவந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள். சோபாவில் சாய்ந்த தருணம் அவர் ஏன் அப்படி கூறினார்.. நம் மேல் கோபம் வந்திருக்குமோ?? தான் ஏதும் தவறு செய்து விட்டோமோ... அன்று அதுபோல சொல்லி இருக்கக் கூடாதோ.. அவர் இனி என்னிடத்தில் முன்பு போல் பேச மாட்டாரா?? என்பது போன்று சிந்தனைகளுக்குள்... அவளும் சிக்கித் தவிக்க முல்லைக்கு தூக்கம் என்ற மருந்து அந்த தவிப்பில் இருந்து சிறிய இடைவேளையை கொடுத்தது...

கதிருக்கு, முல்லையின்  முதல் சந்திப்பில் சந்தித்த அவளது குறும்பும் புன்னகையும் நிறைந்திருந்த பேச்சு‌‌.. இன்று அவளது முகத்தில் இல்லை முழுவதும் குழப்பமும் பயமும் நிறைந்திருந்தது வெளிப்படையாக தெரிந்தது...

கதிர் :📱

you might have fallen asleep.text me back once you got up என்ற மெசேஜை அனுப்பிவிட்டு... பின் அவர் வேலையை தொடர்ந்தார்

🌈என் தூரிகா நீயடா 🌈Where stories live. Discover now