டிங் டாங் - 22

Start from the beginning
                                    

வெளியில் இன்னும் சற்று நேரத்தில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் கலைக்கட்டிக்கொண்டிருக்க, உடுத்தியிருந்த சேலையை சீர் செய்துகொண்டிருந்த பியூடிசியன் பெண்ணை செய்தது வரை போதுமென அனுப்பிவைத்து கதவை திறந்து தலையை வெளியில் விட்டு அன்னையை தேடினாள். 

அழைத்தால் கேட்கும் தூரத்தில் தான் நிற்க, "ம்மா... மாதாஜி. மஹேஸ்வரி... மஹேசு" பல விதமாக அழைத்தும் மேள தாளங்களின் சத்தத்தில் கேட்காமல் போக குரலை சற்று உயர்த்தி, 

"சுந்தரம் பொண்டாட்டி" என அழைக்க அங்கு அமர்ந்திருந்த சில கண்கள் தவறாமல் வைஷ்ணவியை பார்த்து சிரித்தது, அன்னைக்கு ஏதாவது உதவி வேண்டுமா என தயாராகி கேட்க வந்த கார்த்தி காதிலும் கேட்டது. 

மஹேஸ்வரியோ இயலாமையில் மகளை நெருங்கி வந்து, "கொஞ்சமாவது பொண்ணா நடந்துக்கோ வைஷ்ணவி மா" கெஞ்சினார். 

"ம்மா பசிக்கிது ம்மா" முகமே வாடிக்கிடந்தது மணப்பெண்ணுக்கு. ஏழு மணி முகுர்த்தம் என்பதால் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுப்பி மேக்அப் போட தயாராகிவிட்டாள். 

அது புரிந்தாலும் வேலை தலைக்கு மேல் கிடந்ததே, மகளின் நாடி பிடித்து, "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ வைஷ்ணவி. கல்யாணம் ஆனதும் ஒடனே உன்னக்கு ஏதாவது கொண்டு வர சொல்றேன்" 

"ம்மா அது வர என் வயிறு தாங்காது ம்மா" மகள் அப்பாவியாய் அன்னையிடம் போராட, "மஹேஸ்வரி" என கணவனின் குரல் கேட்டு, 

"வரேன் டா. அண்ணனை கலர் வாங்கிட்டு வர சொல்றேன்" என சென்றுவிட்டார். 

சோர்ந்த முகத்துடன் உள்ளே வந்து பார்க்க, அங்கு தன்னுடைய கட்டிலில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள் ஷெர்லின். வந்த ஆத்திரத்தில் எதையாவது அவள் மண்டையில் போட்டு உடைக்க தோன்றியது, "ஷெர்லின்.... ஷெரூ பேபி" அவள் கையை சுரண்ட, வைஷ்ணவி கையை உதறி உறக்கத்தை தொடர்ந்தாள். 

பின்னே, வைஷ்ணவிக்கு முன்பே எழுந்தது அவள் தானே. இல்லம் சென்று வருகிறேன் என கூறியவளை பிடித்து தன்னுடனே வைத்துக்கொண்டாள் வைஷ்ணவி. 

டிங் டாங் காதல்Where stories live. Discover now