டிங் டாங் - 21

Start from the beginning
                                    

அவளும் பார்த்தவள், "அட ஆமா..." அதிர்ந்த்தாள். 

"இப்போ எனக்கு என்ன பதில் சொல்ல போற வைஷ்ணவி? உன்ன இத்தநோண்டுல இருந்தே லவ் பண்ணிட்டு இருக்கேன்" தன்னுடைய இடுப்பின் அளவினை சுட்டிக்காட்டினான் வெள்ளைச்சாமி. 

"உன்னோட லவ் பத்தி எனக்கு தெரியாதா வைட்டு... வீட்டுல பேசுனேன், மகேஷ்கிட்ட கூட சொன்னேன், என்னையே நம்பி ஒருத்தன் இருக்கான், இந்த பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வச்சா அவன நான் ஏமாத்துற மாதிரி இருக்கும்-னு சொன்னேன் வைட்டு" அவளது சோகத்தில் இருந்த நடிப்பை கவனிக்க தவறவில்லை அவன். 

"அப்றம் ஏன் வைஷ்ணவி இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொல்லணும்? இப்போவே பேசுறேன் உன் அம்மா அப்பாகிட்ட நான் பேசுறேன்" அவள் எதுவரை போகிறாள் என்பதை பார்க்க அவனுக்கும் ஆர்வம் தான் வந்தது. 

"அங்க தான் பிரச்சனையே... பையன் யாருனு தெரியும்ல நம்ம எடுத்த வீட்டு சமையல் மாஸ்டர் தான்" கார்த்தியின் அறையை காட்டினாள், 

"அந்த ரூம் தெரியுது பாரு, அங்க இருந்து தான் தினமும் என்ன சைட் அடிச்சிருக்கார். என்னோட சமையல் அவரோட சமையலை விட நல்லா இருக்குதுனு சொல்லி ஒரே பீலிங்ஸ் தானாம். ஒரு நாள் வந்து ப்ரபோஸ் பண்ணிட்டாரு. அந்த இடத்துலயே முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்றம் எங்க ரெண்டு பேரோட அப்பா அம்மாகிட்ட பேசி கெஞ்சி கல்யாணம் பண்ணா இந்த பொண்ண தான் பண்ணுவேன் இல்லனா சூசைட் பண்ணிக்குவேன்னு ஒரே பிடிவாதம்..." 

நிறுத்தாமல் கூறியவளுக்கு மூச்சே அடைத்தது. தேவையான காற்றை எடுத்துக்கொண்டவள், "நீயே சொல்லு நம்மளால ஒரு உயிர் போகுதுன்னா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? அதான் வாழ்க்கையை குடுத்துடலாம்னு முடிவு பண்ணிப்போட்டேன்" பெருந்தன்மையாக பேசினாள். 

"நானும் தான் வாழ்க்கைல பல நூறு பேர பாத்துட்டேன், உன்ன மாதிரி அண்ட புளுகுணிய பாத்ததில்ல அம்மாடி..." ஆசிரியப்பட்டவன் மேலும், "நான் தான் உன்ன ரொம்ப நாளா வாட்ச் பண்ணிட்டே இருக்கேனே... அந்த வீட்டுக்கு நீ விடுற நூல் எல்லாம் பாத்திலையே அந்து விழுகுறத"

டிங் டாங் காதல்Where stories live. Discover now