டிங் டாங் - 13

Beginne am Anfang
                                    

"ஆறு மாசம் தான் இருந்தாலும் கைக்குள்ளயே வச்சுட்டு இப்போ விட மனசு வர மாட்டிக்கிது. அதையும் மீறி உனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்க நேரம் நீ இப்டி போறது தான் அப்பா யோசிக்கிறாங்க" 

"அதுக்கெல்லாம் அவசரம் இல்ல ம்மா. சுபி-கு பாருங்க" 

"உன் தங்கச்சிக்கு இப்போ தான் இருபத்தி மூணு ஆகுது. ஒரு வருஷம் எங்க கூட அவ இருக்கட்டும்ன்னு அப்பா சொல்லிட்டாங்க. ரெண்டு மாசத்துல நீ 28 வயசு தொட்டுடுவ. இன்னமும் உனக்கு யோசிச்சிட்டே இருக்கணுமா? எங்களுக்கும் உன்ன குடும்பமா பாக்கணும்னு ஆசை இருக்கு கார்த்தி" 

மகன் அமைதியாய் இருக்கவும் அவன் அருந்தாமல் பிடித்திருந்த டம்ளரை அவன் வாயருகே கை பிடித்து கொண்டு சென்றவர் மகன் டீயை அருந்தவும் இந்த நேரத்திற்காக காத்திருந்தவர், "கார்த்தி அம்மா ஒன்னு கேப்பேன் உண்மைய மறைக்காம பதில் சொல்லணும்" 

அவனோ மெல்லிய சிரிப்போடு, "கேளுங்க ம்மா" என்றான். 

"நம்ம அஸ்வினியை பத்தி நீ என்ன நினைக்கிற?" 

"நல்ல பொண்ணு" 

யாரை பற்றி கேட்டாலும் இவன் பதில் இதுவாக தானே இருக்கும், மற்ற நேரமாக இருந்தால் சாதாரணம், இப்பொழுது வைஷ்ணவி என்னும் ஒரு புது அத்தியாயம் வந்த பின் இந்த சாதாரண பதில் கூட அவருக்கு பயத்தை தந்தது. 

"நல்ல பொண்ணு தான் ப்பா. உன்னோட முறைப்பொண்ணும் கூட... அந்த விதத்துல நீ என்ன..." 

உடனே குறுக்கிட்டவன், "ம்மா... நல்ல பொண்ணு தான். அதுக்குன்னு கல்யாணம் குடும்பம்-னு எங்களுக்குள்ள செட் ஆகும்னு தோணல" 

காலை அஸ்வினி தன்னுடைய கையை பிடித்தது நினைவு வர, "அஸ்வினி தவற யாரா இருந்தாலும் பரவால்ல" தலையை உலுக்கி மகன் கூறியதை கேட்ட அன்னைக்கு எல்லையற்ற சந்தோசம். 

அவர் சந்தேகம் அவனுக்கே ஆச்சிரியமாக இருந்தது 'அண்ணனின் மகளை வேண்டாம் என்றதில் என்ன இவருக்கு மகிழ்ச்சி' என்று. 

"எனக்கும் அதே தான் கார்த்தி தோணுச்சு. சரி நான் போறேன். அப்பா ப்ரன்ட் ஒருத்தரோட சம்மந்தி டைல்ஸ் ஷோரூம் வச்சிருக்காங்களாம். அத பத்தி ஏதோ பேசணுமாம் கீழ வேகமா வா" சமையலறை சென்றவர் இந்த செய்தியை வைஷ்ணவிக்கு தெரிவிக்க அவள் இதழில் விஷம புன்னகை. 

டிங் டாங் காதல்Wo Geschichten leben. Entdecke jetzt