டிங் டாங் - 11

Start from the beginning
                                    

வருத்தமாய் கார்த்திக் வினவ, "என்ன தம்பி இது திடீர்னு முடிவு? பெத்தவுக என்ன யோசிக்கிறாங்க, இது சரியா வருமா... என்ன ஏது-னு ஒரு வார்த்தை கூட கேக்காம நீயா பேசுற" மகன் மீது கோவத்தை காட்டினார் சுப்பிரமணி. 

"கேக்கலாம்னு தான் ப்பா நெனச்சேன். ஆனா போனா நல்லா இருக்கும். கைக்கு கொஞ்சம் காசு பாத்த மாதிரியும் இருக்கும்" 

"ஓ அப்ப அந்த ஊர்ல ஆறு மாசத்துக்கு வேலை தருவங்களா என்ன?" தன் பங்கிற்கு சகோதரி சகோதரனுக்கு உதவினாள். 

மகள் வார்த்தையை கேட்டு சுப்பிரமணி மகனை கேள்வியாய் பார்க்க, "இது ஒரு ஈவென்ட் ஒர்க் ப்பா. நாலு மாசம் பெரிய புட் பால் ஒர்க்க்கு வர்ற ஆளுங்களுக்கு குக் பண்றது. மிச்சம் ரெண்டு மாசம் ஒரு கிரெடிட் மாதிரி செவென் ஸ்டார் ஹோட்டல்ல ஸ்பெஷல் ட்ரைனிங். ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் செஃப் சொன்னாங்க. தமிழ்நாடுல இருந்து மூணு பேர் தான் செலக்ட் ஆகிருக்கோம். பெரிய ஆபர்ச்சுனிட்டி ப்பா" சொல்ல வேண்டியது ஆகியது, இனி தாங்களே ஒரு முடிவை கூறுங்கள் என்று நின்றான். 

"தாராளமா போகலாம் கார்த்தி. ஆனா நீ போறேன்னு சொல்றது இந்த நேரத்துல சரியில்ல. உன் பொறுப்புல மொத்த கட்டடத்தொட வேலைய வச்சிட்டு இப்டி போறேன்னு சொல்றது சுத்தமா என் மனசுக்கு ஒப்பல தம்பி" 

"இந்த வேலை இல்லனா அவன் போகணுமா?" மகன் செல்வதை ஸ்ரீகரிக்க இயலாதவராய் அன்னை கணவனிடம் வாதாடினார். 

"ம்மா இது என்ன மா பிடிவாதம்?" - கார்த்தி 

"யாருக்கு ப்பா பிடிவாதம் உனக்கா இல்ல எனக்கா? என்ன அங்க போனா மாசம் ஒரு லட்சம் சம்பளம் வருமா? சென்னை போ. அதே சம்பளம் அங்கையும் உன் திறமைக்கு வரும்" என்ன சொல்லி அன்னைக்கு புரிய வைக்க என்று தெரியவில்லை. 

"நான் வர்றேன்னு சொல்லிட்டேன் ம்மா. இனி மாட்டேன்னு சொல்ல முடியாது. இங்க இருக்குற வேலைய என் ப்ரன்ட்ஸ் வந்து பாத்துக்குறேன்னு சொல்லிருக்காங்க. ஆறே மாசம் தான்" தந்தையிடம் திரும்பி, 

டிங் டாங் காதல்Where stories live. Discover now