டிங் டாங் - 8

Mulai dari awal
                                    

"வேலை தெரியாமயா ஷெரூ இவ்ளோ பெரிய ரிசார்ட்ட கட்ட கார்த்திக் ஓகே சொல்லுவாரு?" - வைஷ்ணவி 

"இவன் பேசி பேசியே ஏமாத்திருப்பான்டி... அந்த அண்ணே நல்லவரு அது தான் சரி பொழப்பே இல்லாம ஒருத்தன் கெஞ்சுறான்னு ப்ராஜெக்ட்ட குடுத்துருப்பாங்க. இவன ஒழுங்கா ஒரு குட்டி ரூம அளந்து காட்ட சொல்லு பாப்போம்... நாக்கு மட்டும் பாம்பு ஒடம்பு மாதிரி நீளமா இருக்கு ஆனா செயல்ல பூஜ்யம்" - ஷெர்லின் 

"ச்சீ ச்சீ அப்டி எல்லாம் பேசாதடி ஆளு கறார் தான் ஆனா நல்ல மனுஷன் தான்" - வைஷ்ணவி 

"ஆமா ரொம்ப நல்லவன். சரியான கஞ்சன். கணக்கு பாக்கணும்னா ஒரு ஆள போடணும். செங்கலை எண்ணு, ஜல்லிய எண்ணு-னு என்ன வேலை வாங்குறான்... கஞ்ச தீவெட்டி. இவன் பொண்டாட்டி இவன் சொத்து எல்லாத்தையும் லவட்டிட்டு போக போறா பாரு..." 

"ஷெர்லினு..." வைஷ்ணவி ஷெர்லின் தோளை சுரண்ட அவள் கையை தட்டிவிட்டு, 

"அவன் மேல இருக்குற கோவத்தை உன் மேல காட்டிட போறேன். சனிக்கிழமை காலேஜ்கே போகாதவள வேளைக்கு வர வக்கிறான்... நீ என்னடி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு அந்த ரப்பர் வாயனுக்கு" தோழியை திரும்பி பார்த்தவள் பற்கள் மொத்தமும் தந்தியடித்தது.

பவ்யமாக வைஷ்ணவி ஷெர்லின் அருகில் வந்து நிற்க தனக்கு முன்னாள் இறுகிய முகத்துடன் நின்ற சுந்தரின் தோரணையே ஷெர்லினை அச்சுறுத்தியது. 

"பேச்சா பேசுன கொஞ்ச நஞ்ச பேச்சாடி பேசுன..." ஒன்றும் தெரியாதது போல் ஷெர்லின் கையில் இருந்த அளக்கும் டேப்பை வாங்கிக்கொண்டு செல்ல இருந்தவளை ஷெர்லின் பிடித்து நிறுத்தினாள் துணைக்கு ஆனால் பார்வையோ சுந்தர் மேல். 

"அப்டி பாத்தா பயந்துடணுமா நாங்க?" சுந்தரை முறைத்தாள் ஷெர்லின். 

"எப்படி பாத்தாங்க?" அவனும் ஏதோ ஒரு முடிவோடு தான் நின்றிருந்தான். 

"என்னமோ நீங்க எந்த தப்புமே பண்ணாத மாதிரியும் நாங்க தான் எல்லா தப்பையும் பண்ணிட்டு சுத்துற மாதிரி தான் இருக்கே" - ஷெர்லின் 

டிங் டாங் காதல்Tempat cerita menjadi hidup. Temukan sekarang