உயிரின் தாகம் காதல் தானே 💔 28

Start from the beginning
                                    

அம்மா ஒரு ஏழை.. அதுலையும் யாரும் இல்லாத ஒரு அனாதை அவங்க .
ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. அவங்க உயிரோடு இருக்கும் வரை நானும் அந்த வீட்டுல ராணி தான்.. அப்பா இறந்ததுக்கு அப்புறம் தான் எல்லோரும் சுயரூபத்தை காட்ட ஆரம்பிச்சாங்க ..என் கண் முன்னாடியே என் அம்மாவை கீழே தள்ளிவிட்டு கொலை வேற பண்ணாங்க.." என்றவள் கண்களில் வடிந்த கண்ணீரை மெல்ல தட்டிவிட்டாள்.

அவனும் அவள் கூறுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
" எதுவும் பேசாதே.. அமைதியாகவே இரு.. உனக்கு குடும்ப முக்கியம், நீ என்னை போல யாரும் இல்லாதவளா வளரவே கூடாதுன்னு சொல்லி சொல்லியே என்னை வளர்த்தாங்க
என்னோட அம்மா ..

எந்த இடத்திலயும் அந்த குடும்பத்துக்கு எதிரா என்னை அவங்க பேசவிடவேயில்லை.. அவங்க ரெண்டு பேருமே இல்லாத அப்புறம் நான் அனுபவிச்ச வேதனையை என்னால சொல்லவே முடியல ..ஆறுதலுக்கு கனகா அக்காவை தவிர வேறு யாரும் என்கூட இருக்கவே இல்லை..

அப்புறம் தான் பெரியப்பா என்னை உங்ககிட்ட பைலை திருட சொல்லி அனுப்பி வச்சார். அப்போ கூட கனகா அக்காவை கொலை பண்ணிடுவேன்னு சொல்லித்தான் மிரட்டினார். எனக்கும் வேற வழியே தெரியல. அதனாலதான் இங்க வந்தேன்.. ஆனா நீங்களும் என்னை ரொம்பவே கஷ்டப் படுத்திட்டீங்க.. இப்போ நான் முன்னாடி இருந்த மதியழகி இல்லை ..குழந்தைகளுக்காக குடும்பத்துக்காகன்னு எல்லாம் நான் உங்க கூட சேர்ந்து நடிக்க கூட தயாரா இல்லை.." என்று கூறி முடித்தாள்.

அவனுக்கு தெரியாத சில விடயங்களையும் அவள் கூறினாள். அது அவனுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்தது. அவளுடைய அன்னையை அவர்கள் கொலை செய்த விடயம் அவனுக்கு புதிது அல்லவா .
மேலும் அன்பு செல்வன் அவளை பயமுறுத்தி இங்கு அனுப்பி இருப்பார் என அவன் நினைக்கவே இல்லை..

ஒருவேளை பணத்திற்கு ஆசைப்பட்டு அவளே வந்து இருப்பாள் என்று தான் அவன் எண்ணியிருந்தான்.
இன்று அவனது கணிப்பு பொய்யாய் போனதில் ஏனோ ஒரு கோபம் அவனுக்கு.. ஆனால் இப்போது இந்த கோபம் அவளிடம் இல்லை ..அவன் மேலே அவனுக்கு கோபம்.. இப்படி இதுவரை அவன் கணிப்பு பொய்யாய் போனதே இல்லை என்பதால் வந்த கோபமே அது.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now