உயிரின் தாகம் காதல் தானே..💔18

Start bij het begin
                                    

ஆனால் மறு நொடியே சாத்விக்கின் நினைவு வந்து அந்த யோசனையை அடியோடு அழித்து விடும் .
அவள் தனக்குள்ளேயே சிந்திப்பதை கண்ட ராகவ்
" அக்கா அவ யோசிச்சு நல்ல முடிவா சொல்லுவா.. நீ இப்படி தினமும் சொல்லிக்கிட்டே இருக்காத.. போ போய் சமையல் ஆச்சான்னு பாரு.." என மீனாவை அங்கிருந்து அப்புறப் படுத்தினார்.

மீனாவும் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு சமையலறை நோக்கி சென்று விட அவரது தலை மறைந்ததும் வருணிகா புறம் திரும்பிய ராகவ்
" வரு  நீ என்ன நினைச்சுட்டு கல்யாணம் வேண்டாம்னு சொல்றேனு எனக்கு தெரியாது. ஆனால் அம்மாவும் பாவம். அவங்களுக்கும் தன்னோட பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு குழந்தைகளோடு வாழ்வதை பார்க்க ஆசையா இருக்கும்.. இதுக்கு மேல உன் இஷ்டம்.." எனக் கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

அவர் கூறியதில் இருந்த உண்மை புரிந்தாலும் அவளால் சாத்விக்கை  விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ளவே முடியாது என்பது தான் நிதர்சனம்.
அவனை  பற்றிய யோசனையிலேயே அமர்ந்து இருந்தாள் அவள்.

*********************

தனது அலுவலக அறையில் அமர்ந்து தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார் ஷியாம் சுந்தரை
கதவு தட்டும் ஓசை கலைத்தது.
" எஸ் கம் இன் .."
எனக் கூறியவன் மீண்டும்  வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.

அவனது அனுமதி கிடைத்ததும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தீபக்
"சார் .."
என அழைத்தான் தயக்கமாக. வேலை செய்து கொண்டிருக்கும் போது பேசினால் ஷியாம் சுந்தருக்கு கோபம் வரும் என்பதாலேயே இந்த தயக்கம்.

அவனது குரலில் நிமிர்ந்து பார்த்த ஷியாம் சுந்தர்
"என்ன?"
என்றான் ஒற்றை கேள்வியாக .
"சார் நீங்க சொன்ன மாதிரி புதுசா சென்னைல ஓபன் பண்ணி இருக்க கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளோட  டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன்."
என்று கூறியபடி கையில் இருந்த கோப்பை அவனிடம் கொடுத்தான்.

  இதுவரை பெரிய பெரிய ப்ராஜெக்ட் மட்டுமே எடுத்து அதை திறம்பட செய்து கொண்டு இருந்த ஷியாம்  சுந்தர் இப்போது சின்ன சின்ன ப்ராஜெக்ட்களையும் எடுத்து அதை புதிதாக தொடங்கி இருக்கும் அல்லது சிறிய அளவில் பிராஜெக்ட் செய்து வரும் கம்பெனிகளுக்கு கொடுத்து அதிலும் இலாபம் பெற எண்ணினான்.
அதற்காகத் தான் இந்த தகவல்களை சேகரிக்க கூடியிருந்தான் அவன்.

உயிரின் தாகம் காதல் தானே...Waar verhalen tot leven komen. Ontdek het nu