சங்கீதம்🎼16🎼

Start from the beginning
                                    

மூச்சை உள் இழுத்து காற்றை ஊதி வெளியேற்றிய முத்து "சரி... சரி... இப்போ என்ன பண்ண போற?" என்று அவன் அருகில் அமர்ந்தான்.

"தெரியல மாப்ள இந்த விஷயத்துக்கு அப்புறம் மனோஜ் சும்மா இருப்பான்னு எனக்கு தோணலை... எப்பவும் பைரவிக்கு நிழலா இருக்கனும்னு மட்டும் தான் தோணுது" என்றவன் குரலில் தீவிரம் கூடியிருந்தது.

….

"சே… எப்படி ஏமாத்தி இருக்கான்… இவனை போய் நல்லவன்னு நினைச்சேனே!!" என்று தனது அறைக்குள் வந்து புத்தகத்தை வைத்தவள் சர்வேஷை கருவிக் கொண்டிருந்தாள்.

'இனி அவன் மூஞ்சிலக் கூட முழிக்கக் கூடாது" என்று தீர்மானித்துக் கொண்டாள். விஷ்வநாதனை ஒரிரண்டு முறை பார்த்திருக்ககறாள். அவர் கண்களில் தெரியும் அலட்சியமும் கீழான பார்வையும் அவளுக்கு புரிந்து தான் இருந்தது. தாரணியின் திருமண விஷயத்தில் அதை கண்கூடாகவே பார்த்தவள் ஆயிற்றே! அதனாலையே அவரை சுத்தமாக பிடிக்காமல் போயிற்று உனக்கு எந்த விதத்திலும் நான் குறைந்தவள் இல்லை என்ற எண்ணத்தில் இருந்தாள்.

"ஏய் காபிய கூட குடிக்காம இங்க என்னடி செய்ற? பிரெஷ் ஆகிட்டு வா காபிய தறேன்" என்று துளசி கூறியதோ "அக்கா இந்தா கா... அப்பா உனக்கு இந்த பேனா அனுப்பி இருக்கார்" என்று அர்ஜூன் குதுகளித்து கூறியதையோ அவள் கவனிக்கவில்லை 'அந்த பொறுக்கியை அடிச்சதோட விட்டே வந்து இருக்கக் கூடாது கம்பளைன்ட் பண்ணி இருக்கனும் இனி ஏதாவது தப்பா பேசட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு…' என்று மனோஜை திட்டி தீர்த்தவளின் எண்ணம் மறுபடி சுழற்சி முறையில் சர்வேஷ்வரனிடம் தாவியது…

கிட்டதட்ட ஒருவாரம் கடந்திருந்தது இந்நிகழ்வின் பின் சர்வேஷ் பைரவியை அவளறியாமல் பின் தொடர்ந்தான். மனோஜின் செய்கைகளையும் அவ்வப்போது கண்காணித்து வந்தான். அடிப்பட பாம்பு அமைதியாய் இருக்காது என்பது அவ்வளவு உண்மையோ அதே போல  பைரவிடம் அடியை வாங்கிய மனோஜூம் பழியுணர்ச்சியுடன் இருந்தான் என்பதும்.

காதலின் சங்கீதமே!!! (முழு தொகுப்பு)Where stories live. Discover now