உயிரை கொல்லுதே காதல் ❤️ எபிலாக்

Start from the beginning
                                    

      ஆகவே அவள் எதுவும் சொல்லாமல் அவன் தலைமுடியை கோதி அவனுடைய நெற்றியில் முத்தமிட்டு "ஐ லவ் யூ.." என்றாள். அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தானே தவிர அவன் பதில் கூறவில்லை.. ஆனால் அவனது கண்களில் அத்தனை காதல் இருந்தது.. அதை பெண் அவளும் கண்டு கொண்டாள்..

   "ஹனி இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க டி.." என்று கூறியவன் அவளது பாதங்களை எடுத்து அதில் முத்தமிட்டான்..

      இப்படியே தாய் வீட்டிற்கு கூட அவன் அவளை அனுப்பவில்லை.. அவனது கவனிப்பில் தாயும் சேயும் நலமாக இருந்தனர்.. அவனே தான்  எல்லாவற்றையும் செய்தான். அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு காலை வேளையில் அவர்களது இளவரசன் பூமிக்கு வந்தான்.

      ஆனால் தாயை ஒரு வழியாக்கி விட்டுத் தான் அவன் பிறந்தான். அதில் பயந்து போனது என்னவோ சாய் கிருஷ்ணா தான் . அவள் பட்ட வேதனையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவனால்..

      அவன் அழுவதை பார்த்த ஹரிக்கு ஆச்சரியம் தான் ..சிறு வயதில் கூட கண்ணீர் சிந்தாத தனது அண்ணன் அவன் மனைவிக்காக கண்ணீர் வடிக்கிறானே என்று வியப்பாக அவனைப் பார்த்தான்...

      குழந்தையைக் கைகளில் ஏந்தியவனின் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அத்தனை மகிழ்ச்சி அவனது கண்களில்.. தர்ஷினி குட்டியை தான் அவன் அவனுடைய கைகளில் ஏந்தவில்லை.. அது அவனது மடத்தனத்தினால் ஆன செயல்....ஆனால் இப்போது இந்த தருணத்தை அணுவணுவாக அவன் அனுபவித்தான்..

    அவனைப் பார்த்த நிரோஷனி
"ஐ லவ் யூ கிருஷ்..உங்களுக்கு நீங்க கேட்ட மாதிரியே இன்னொரு குழந்தை பெற்று தந்துட்டேன்.. ஓகே தானே.. இன்னும் வேணும்னாலும் கூட பெற்று தருவேன்.." என்று கேட்க அவளது நெற்றியில் இதழ் பதித்துவன்


"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ..என்னோட வாழ்க்கையில இதெல்லாம் நடக்கவே நடக்காது என்று நினைச்சேன்.. ஆனா என்னை முழுசா மாத்திட்ட.
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டி.. அது உனக்கு தெரியும் தானே. ஆனா இந்த இரண்டு குழந்தைகளே நமக்குப் போதும்.
நீ கஷ்டப் படுத்திருந்தா என்னால பாக்க முடியல டி.."
என்று அவன் தவிப்பாக பேச ஆமாம் என்று தலையசைத்தாள் அவள்.

அவர்களது இளவரசனுக்கு அர்ஜுன் கிருஷ்ணா என்று ஒரு நன்னாளில் பெயர் சூட்டினர்.. நிரோஷினி எதிர்பார்த்தது போல அன்பான கணவன் ,அழகான வாழ்க்கை, ஆசைக்கென்று இரண்டு குழந்தைகள் என்று அவளது வாழ்க்கை மாறியது..

      ஆனால் சாய் கிருஷ்ணா எதிர்பார்க்காமலேயே அவனுடைய வாழ்க்கை இனிமையாக அழகாக மாற்றினாள் சாய் கிருஷ்ணாவின் ஹனி ..அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்தி விடை பெறுவோம்..

********சுபம்********

உயிரை கொல்லுதே காதல்....Where stories live. Discover now