என் டார்லிங் முல்லை💞
என்று எழுதப்பட்டு  அடுத்தடுத்த வரிகளில்.. வீட்டு விலாசம் மிக சரியாக இருந்தது..

அனுப்புனர் பெயர் விலாசம் எதுவும் இல்லை...

கடிதத்தை எடுத்து பிரித்து படித்தாள்...

முல்லை💞 Dear...

உன் நினைவுகளால் தவிக்கும் நான் எழுதும் கடிதம்... இதை எழுதும் போது என் உடல் முழுக்க வெப்பம்.. உன் நினைவுகள் தருகிற வெப்பம்...

ஒவ்வொரு நாளும் டிவி யில உன்னை பார்க்கும் போதெல்லாம் பல மடங்கு இந்த வெப்பம் அதிகமாகிறது... Crushing Machine ல வைக்கிற கரும்பு மாதிரி என்னோட தலையணை படும் அவஸ்தை உனக்கு தெரியுமா???...

உன்னோட Program வரும் போதெல்லாம்  Volume Mute ல போட்டுட்டு...உன்னை மட்டுமே இமைக்காமல் பார்ப்பேன்..

இந்த technology உலகத்துல
எவ்வளவு சௌகரியம் பார்... என் பிரியமானவளை... என் படுக்கை அறையில் பகல், இரவு என்று எப்போது நினைத்தாலும்
பார்க்க முடிகிறது...
புரியலையா???.. என் pendrive முழுக்க உன்னோட Program தான்....

நீ எத்தனை விதமான Hair Style பண்ணி இருக்கனு உன் கிட்ட கணக்கு இருக்கா... என்கிட்ட இருக்கு..

முல்ல💞 டார்லிங் நான் உனக்கு அடிமை ஆகி விட்டேன்.... I love U....
I love So much..எந்த அளவுக்கு உன்ன காதலிக்கிறேன்னு சொல்ல தெரியல...

நீ கண்ணசை உன் காலில் விழ தயார்..
நீ விரலசை உனக்காக நூறு பேரை வெட்டத்தயார்..
நீ இதழசை... என்னையே மாய்த்து கொள்ள தயார்...

உன்னை தவிர வேறு எதையும் நினைக்காமல் ஒரு காதல் பித்தன் ஒரு நல்ல சந்தர்ப்பதுக்காக காத்திருக்கிறான் என்று உனக்கு இக்கடிதம் உணர்த்தினாலே போதும்...

உன் இதயத்தில் இடம் தர தயாராக இரு.

மற்றவை அடுத்த கடிதத்தில்...

ஈர முத்தங்களுடன்...
                             முல்லை💞 தாசன்..

முல்லை படித்து விட்டு.... அப்பா நீங்க இத படிச்சீங்களா??... ரொம்ப
intresting -a எழுதி இருக்கான் இல்ல...

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now