ஒரு நிஜமான சந்தோச பரிமாற்றல்.... சிந்தனையில் தெளிவு.....
அதை சொல்வதிலும் தெளிவு....
அவரின் ரசிப்பு தன்மை மிக அழகு.

நான் என்ன அப்படி பழகிட்டேன்... கடையில் பரிசு பொருளை பார்த்ததும் எனக்கு வாங்கி தர தோன்றி இருக்கிறது....

எனில் என் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கி Impress ஆகியிருக்க வேண்டும்... இல்லையென்றால் நான் சாதாரணமாக சொன்னதை நினைவில் வைத்து வீடு தேடி பொறுப்பாக சொல்லி இருப்பாரா!!?...

ஜீவா சொன்ன மாதிரி கதிர் உண்மையிலேயே GentleMan தான்...

குளியலறை கதவு தட்டலில் நினைவிலிருந்து கலைந்தாள்..

ஹேய்!!!முல்ல என்னாச்சு??...

குளிச்சிட்டு இருக்கேன் ம்மா...

எவ்ளோ நேரமா குளிக்கிற.. முக்கால் மணி நேரமாச்சு... எப்போ பாரு Program பத்தி ஏதாச்சும் யோசிக்கிறது...குளிச்சது போதும்
சீக்கிரம் வா...

முக்கால் மணி நேரமாக.....
கதிரை பற்றியே நினைத்து கொண்டிருந்தேனா!!
என்ன? இது நிஜமாவா!!...
இவ்வளவு நேரமாவா!! ...

முல்லை💞க்கு  ஆச்சரியமாகவும் இருந்தது...கொஞ்சம் குறுகுறுப்பாகவும் இருந்தது...

குளித்து முடித்து நைட்டி அணிந்து வந்து சாப்பிட தொடங்கியவள்...
அப்பா இந்த தடவ Tour எங்கே என்றாள்...

டெல்லி, சிம்லா,குலுமனாலின்னு
3-4 இடம் மொத்தம் பத்து நாள்..ம்மா

இந்த ஊர் சுத்துற வேலைய விட்டு ஒரு இடமா உக்காந்து பாக்குற வேலைய தேடிக்கோங்கனு சொன்னா கேக்குறதே இல்ல...

இன்னும் 4 மாசத்துல வேலைய மாத்திக்கிறேன் பார்வதி..

பாக்குறேன் பாக்குறேன்... இன்னும் எத்தனை 4 மாசம் போகுதுனு...

சரி பேசிட்டே இருக்காத...
முல்லை💞க்கு கொஞ்சம் சட்னி வை..

அப்புறம் அப்பா.....
ஒரு விஷயம்.. என் Friend கதிர்னு ஒருத்தர் கிட்ட திருவான்மியூர்ல வீடு வேணும்னு சொல்லி இருந்தேன்... அட்ரஸ் கொடுத்து இருக்கார் sunday வந்து பாக்குறேன்னு சொல்லி இருக்கேன்.. நீங்க வர பத்து நாளு ஆகும்னு சொல்றிங்களே...என்ன செய்யிறது...

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now