காதலை 💞தேடி....

Start from the beginning
                                    

உங்க வீடு திருவான்மியூர்ல..
அம்மா அப்பா தங்கையோட இருக்கீங்க...

உங்களுக்கு ஒரு அக்கா அவங்கள....ஈரோடுல கட்டி கொடுத்து இருக்கீங்க....

என்ன பத்தி இவ்வளவு தெரிஞ்சி வச்சி இருக்கீங்களா????

இன்னும் கூட Personal -aha... தெரியும்...
Dailyum.... உங்க தாடிய Trim பண்ணுவீங்க...
Bullet ல Office.... எப்பவாச்சும் திருட்டு தம் என்ன ஓகே வா எல்லாம் கரெக்டா!!????

எப்படி இதெல்லாம் உங்களுக்கு தெரியும்...

என்னோட லவ்வர பத்தி எனக்கு தெரியாதா!!???

என்ன???து லவ்வரா??????

ம்ம்ம்
சரி சொல்லுங்க...

நீங்களும் என்ன லவ் பண்றீங்களா???

இப்படி திடீர்னு கேட்டா நான் என்ன சொல்றது..

ஏன்??? நான் அழகா இல்லையா???

உங்கள அழகில்லனு சொன்னா.. நாக்கு பொசுங்கிடும்....

நான் நாகரிகமா இல்லையா.??..

இருக்கீங்க..

நல்லா கலகலப்பா பேசலையா???

பேசுறீங்க...

உங்க காதலி இப்படி தானே இருக்கணும்னு நீங்க ஆச படறீங்க...

ஆமா... ஆனா..
இன்னும் கூட எதிர்பார்ப்பு இருக்கு...

என்ன?? அது..

அவ படிச்சவளா இருக்கணும்...

நான் M. Com...
வேற...

அவ வேலைக்கு போறவளா இருக்கணும்..

நான் 5 Star Hotel-a Receptionist...
Come on சொல்லுங்க..

என்ன சொல்லணும்..

ஐ லவ் யூ தான்

அவன் அந்த குளிரான Climate லயும்... முழுவதும் வேர்த்தான்...

அவள் அவனை நெருங்கினாள்...

ம்ம்ம்
சொல்லுங்க ப்ளீஸ்..

அவன் பின் புறம் மெதுவாக நகர்ந்தவன்.. திடீரென விலகி ஓட ஆரம்பித்தான்....

நில்லுங்க கதிர்...
நில்லுங்க...
என்று அவனை தூரத்தினாள்..

அவன் மழையில்.. வாகனங்களுக்கு இடையில் ஓடினான்....

பின் புறம் அவளின் குரலும்...
கால் கொலுசு ஓசையும் அவனுக்கு விடாமல் கேட்டது...

நிற்காமல் ஓடியவன்...
உயரமான மலைப் பாதையை அடைந்து திரும்பி பார்த்தான்...

தொலைதூரத்தில்.... தேங்கிய மழை நீரை சிதறி அடித்து ஓடி வந்து கொண்டிருந்தாள்...

மீண்டும் ஓடியவன்.. மலை உச்சிக்கு வந்து மூச்சிரைத்தான்...
விளிம்பில் நின்று எட்டிப்பார்க்க... ஒரே கும்மிருட்டு...
பெரிய பாதாளம்..

அவள் தொடர்ந்து நெருங்கி வர..

இவன் சிறிதும் யோசிக்காமல்... குதித்து விட்டான்..

ஐயோ இப்படி குதித்து விட்டோமே... எதிலோ மோத போகிறோம்... தலை சிதற போகிறது...
நம் கதை முடிய போகிறது... என்று இதயம் அடைத்த போது...

எப்போதும் போல
இப்போதும் விழிப்பு ஏற்பட்டு கண்களை திறந்தான்...
அவன் படுக்கையிலிருந்து..கதிர்.

தொடரும் 💞...

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now