21

204 13 10
                                    

21 காதன்!

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத கிருஷ்ணா கண்களை மூடி உட்கார்ந்தான்.

அவனது ருத்ர தோற்றம் கண்டு அந்த புரோக்கர் பயந்து நின்றவர்.

'கடுவுளே என்னை எப்படியாவது இன்னைக்கு காப்பாத்தி விட்டுடு திருப்பதிக்கு நடந்தே வரேன்' அவன் வேண்டிய கடவுள் தூரம் இருந்ததால் காது கேட்கவில்லை போல, அந்த புரோக்கர் பக்கத்து தெரு புள்ளையாரை ஒழுங்கா வேண்டி இருக்கலாம் லட்டுக்கு அசைப்பட்டு சுண்டல் போச்சா.

உள்ளே இங்கு நடக்கும் கலவரம் தெரியாமல்.

ராதா கையில் ஒரு பையோடு அமர்ந்து இருந்தாள்.

அதில் அடங்கிய பொருள் அனைத்தும் இரண்டு வருடம் முன் கண்ணன் கொடுத்தது.

ஒரு நோக்கியா போன், சிம்மின் நெம்பரின் கடைசி நெம்பர், அவளது பிறந்த தேதி, மாதம் வருடம் மற்றும் பிறந்த மணியில் முடிந்திருக்கும்.

***2602958, அவளிடம் மட்டுமில்லை அவனிடத்திலும் இதே போல ஒரு சிம் உண்டு முன் நெம்பர் மட்டும் மாற்றி இருக்கும்.

பழைய நினைவுகளுக்கு பயணம் செய்யத் துவங்கினாள்.

அவளது பிறந்த நாளுக்கு ஒரு பெரிய பார்சல் வந்தது.

ஆசையாக பிரிக்கும் போது மாதவன் அழைத்தான்.

"என்ன பார்சல் வந்திடுச்சா?"

"இல்லையே... என்ன பார்சல்"

"ஏய் நடிக்காதடி உன் குரலின் வேறுபாட்டை என்னால் கண்டுபிடிக்க முடியும்"

"சரி சரி அறிவாளின்னு ஒத்துக்குறேன்" என்றவள், கிப்டை பிரிக்கத் துவங்க.

"ஏய் ராதை பிரிக்காத"

"ஏன்டா கையில் இவ்வளவு பெருசா கொடுத்துட்டு பிரிக்காதன்னு சொல்லிட்டு இருக்க"

"இன்னைக்கு நான் மட்டும்தான் பேசுவேன், பாப்பா அமைதியா இருக்குமாம்"

"சரிங்க சார்"

"முதல்ல விடியோ கால் வா"

"ஐயோ வீடியோ கால் ஆ!"

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now