1. தர்ஷினிசிம்பா

1K 106 97
                                    


"நான் சொல்றேன் சார்" என்றான் கோபமாக இளங்கதிர்.

"இல்ல சார்! நான் சொல்றேன். கதையை இவனுக்கு ஏற்ற மாதிரி மாற்றி சொல்வான்" என்றாள் எழிலழகி எதிரிலிருப்பவனை முறைத்து.

"இல்ல சார்! நான் தான் கரெக்ட்டா சொல்வேன். இவ பிராடு" என்று முறைத்தான் இளங்கதிர்.

"இப்போ யாராவது ஒருத்தர் சொல்ல போறீங்களா இல்லையா?" என்று அதட்டினார் பூத் விற்பனையாளர்.

"சார்! நான் வந்து டவெண்ட்டி மினிட்ஸா வெய்ட் பண்றேன். இவ வந்து ரெண்டு நிமிஷம் கூட ஆகலை. அதுக்குள்ள பத்து பேருக்கு முன்னாடி போய் நிக்குறா?" என்றான் கதிர் குறை கூறும் குழந்தைபோல்.

"யாரை அவ இவன்ற? மிளகாப்பொடிய காப்பில் கலந்துருவேன் ஜாக்கிரதை. சார் நான் ஏற்கனவே அந்த அங்கிள்கிட்ட சொல்லிட்டு தான் போனேன். இந்த முருங்கைக்காய்க்கு கை கால் முளைச்சது தான் வீணா வம்பு பண்ணுது" என்று முறைத்தாள் முடிந்தால் எரித்துவிடும் முடிவில்.

"ஆமா இவ என் பொண்டாட்டி பாரு... கப்பில கலக்குறேன் காப்பில கலக்குறேன்னுகிட்டு போடி" என்றான் அவனும் விடாமல்.

"காட்க்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும். சோ, என் பக்கம் தான் இருப்பார். பாரு உனக்கு பொண்டாட்டியா வரப்போராவளுக்கு நிச்சயமா கடலமாவுக்கும் கார்ன்பிளோர் மாவுக்கும் வித்யாசம் தெரியாத மந்தியா தான் வரப்போகுது. ஏன்னா நீயும் மந்தி தான?" என்றாள் நக்கலாக சிரித்து.

இவர்கள் காரசாரமாக சண்டையிட்டு கொண்டிருக்க, தலையில் கைவைத்து உட்கார்ந்துகொண்டார் கடைக்காரர்.

"உனக்கு எவ்ளோ திமிர் இருக்கும் என்னையும் எனக்கு வரபோறவளையும் குரங்குன்னு சொல்வ?"  என்றான்.

"நிறுத்துங்க" என்று கத்திய பால் கடைக்காரர்.

"ஏன்டா ஒரே ஒரு பால் பாக்கெட் வாங்கவா  இவ்ளோ அக்கப்போர் பண்றிங்க? உங்களையெல்லாம் உங்க வீட்ல வச்சு எப்படி தான் மேய்கிறங்களோ?" என்று முறைத்தவர்.

கதிரழகிWhere stories live. Discover now