🌹முதல் சந்திப்பு....🌹ஓவியம் 1

Start from the beginning
                                    

பின்பக்கம் திரும்பி நின்றவாறு இருந்த இரண்டு பெண்களை சுற்றி நான்கைந்து பெண்கள் திட்டும் சத்தம் கேட்டு தன் தியான நிலையை கலைத்த கதிரோவியன் அங்கு என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க....

ஷாம்லி : இங்க பாருங்க ஏதோ தெரியாம மோதியதற்கு ஏன் இப்படி scene போடுறீங்க......

பெண்மணி : என்ன scene போடுரோம்மா...ஏம்மா பாக்க படிச்ச பசங்க மாதிரி இருக்கீங்க கோவிலுக்கு வந்தா அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு தெரியாதா....

ஷாம்லி : இப்ப அடக்க ஓடக்கமா இல்லாம நாங்க என்ன டன்ஸா ஆடிகிட்டு இருக்கோம்....

பெண்மணி : இங்க பாருமா நீ ரொம்ப பேசுற.....

ஷாம்லி : ஆமா அப்படி தான் பேசுவேன்....ஏதோ என் தங்கச்சி தெரியாம இடிசிட்டா அதுக்கு தான மன்னிப்பு கேட்டா அப்புறம் என்ன..

பெண்மணி : மன்னிப்பு கேட்டால் போதுமா.....நல்ல காரியம் தொடங்கும் முன் இப்படி அபசகுணம் ஆகிடுதே...
ச்சே..... எல்லாம் இதோ நிக்குதே இந்த பொண்ண சொல்லனும்....document எல்லாம் நாசம் ஆகிடுது....

ஷாம்லி : இங்க பாருங்க மறுபடியும் மறுபடியும் என் தங்கச்சியை குறை சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும்

பெண்மணி : அதெல்லாம் எனக்குத் தெரியாது இந்த பொண்ணு செஞ்ச தப்புக்கு இவதான் தண்டனையை அனுபவிக்கனும்....

ஷாமிலி : அதான் அவ தெரியாம மோதிடேன்னு சொன்னா இல்ல இன்னும் எதுக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்கீங்க..எய் வாடி நம்ம போகலாம்...

என்று சொன்னபடி ஷம்மிலி தன் தங்கை முல்லையோவியத்தை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயல...

பெண்மணி : எய் இரும்மா நான் பேசிகிட்டு இருக்கும் போது எங்க போற உன் தங்கச்சிக்கு அறிவில்ல ஆள் இப்படி வளர்ந்து இருக்கா இல்ல.... ஏன் இவ கண்ணு என்ன புரடைல்லா வச்சு இருக்கா.... இல்ல இவளுக்கு என்ன கண்ணு தான் தெரியாதா....

( நவின்) ஐயர் : ஆமா மா இந்தப் பொண்ணுக்கு கண்ணுதான் தெரியாது ... எய் ஷாமிலி  ...நீ முல்லையோவியத்தை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போ ...

என்று நவின் (ஐயர்)
சொல்ல ...ஷாமிலியும் அவளின் தங்கை முல்லையோவியமும் கதிரோவியன் இருக்கும் பக்கம் திரும்ப....

தியான நிலையில் இருந்து கண் விழித்த கதிரோவியன்  விழிகளில் தெரிந்தது ..........நம் அழகிய தேவதை முல்லையோவியத்தின் விழிகள் மட்டுமே........

முல்லை தட்டு தடுமாறி நடந்து வருபவளை பார்த்தவாறு தன்னை மறந்த கதிர் எழுந்து நிற்க.....

ஒருவன் : சார் உங்க சைக்கிலா வெளியே நிக்குறது...

கதிரோவியன் : ( சைகை ) ஆமா ஏன்....???

ஒருவன் : உங்க சைக்களை ஒரு கார் மோதி உங்க drawing things எல்லாம் கீழே விழுந்திடுதுண்ணு பூக்கார ஆயா சொல்ல சொன்னாங்க...

என்று ஒருவன் சொல்ல.... கதிர் பதறி அடித்து வெளியே போக..... முல்லயும் அவளின் அக்கா ஷாமிலியும் கோவிலை விட்டு வெளியே வர.....

காரில் வந்து தன் சைக்கிளை இடித்த பணக்கார பெண்ணை...அறிவில்லை உங்களுக்கு  என்று சைகை காட்டி திட்டிக் கொண்டு இருந்த கதிரை பார்த்து ஷாமிலி...

ஷாமிலி : பாவம் வாய் பேச முடியாமல் இருக்கும் ஒருவர் ஓவியம் வரைந்து தன் திறமையை வெளிப்படுத்த ஆசை படும் பொழுது கூட இந்த உலகம் அவரை மதிப்பது இல்லை.....

முல்லையோவியம் : என்ன அக்கா யாருக்கு என்னாச்சு....யாரை பாவம்ன்னு சொல்ற.....

ஷாமிலி : அங்க ஒருவர் வாய் பேச முடியாதவர பார்த்து தான்....

முல்லையோவியம் : ஏன் அக்கா..... உன் தங்கச்சி எனக்கே கண்ணு தெரியாது.... என்னை பார்த்தே ஒருத்தவங்க பாவபடுற நிலைமையில் தான் நம்ம இருக்கிறோம் .... நீ ஏன் அவரை பார்த்து பாவப்படுற என்று முல்லைசொல்ல....

💕 இனி வார இறுதியில் ....கதிரோவியம் மற்றும் முல்லையோவியத்தை மையமாக வைத்து ......நான் தீட்டும் என் ஓவிய கிறுக்கல் உங்களுக்காக..💕

🙏......நான் உங்கள் சக்தி....🔱

🔱யின் ❤காதல் ஓவியம்❤km💛kc Story Where stories live. Discover now