"தேங்க்ஸ் சார்" எனப் புன்னகைத்தான் ராஜீவ்.

"ஸோ, உன் செக்ரட்டரியை இன்னிக்கு ஒருநாள் நான் கடன்வாங்கிக்கறேன். உங்கம்மாவுக்கு ஷாப்பிங் போகணும். எனக்கும் சில முக்கியமான இடங்களுக்குப் போகணும்"

ராஜீவை ஆதித் திரும்பிப்பார்த்துக் கண்களால் வினவ, அவனும் சம்மதித்தான்.

அவர்கள் கிளம்ப, பாட்டி சிறிதுநேரம் மேலாளர்களிடம் பேசிவிட்டுத் திரும்பிவந்தார்.

சுவரிலிருந்த கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஆதித்திடம் திரும்பினார் அவர்.

"சாப்பாட்டு நேரம் ஆச்சுல்ல? தாராவுக்கும் காலேஜ் முடிஞ்சிருக்கும் இந்நேரம்.. அவ எப்படி வருவா வீட்டுக்கு?"

"ட்ரைவர் பிக்கப் பண்ணிக்குவார் அவளை. நீங்க வாங்க, உங்களை வீட்ல ட்ராப் பண்றேன் நான்."

"ஏன்? வந்த எனக்கு வழி தெரியாதா திரும்பிப் போக? நான் போயிக்குவேன், நீ போய் தாராவை கூட்டிட்டு வீட்டுக்கு வா, போ கண்ணா!"

மறுத்துக்கூற வாயெடுத்தாலும், உள்ளூர சற்றே ஆர்வமாகத்தான் இருந்தது, தாராவைக் கல்லூரியில் காண. எனவே தலையசைத்துவிட்டு தாஸுடன் அவனும் கிளம்பினான்.

**

"நேத்து இங்கதான் வெய்ட் பண்ணிட்டிருந்தாங்க.. காலைலயும் இங்கதான் சார் இறக்கி விட்டேன்.."

தாராவை அங்குமிங்கும் தேடியவாறு ஆதித்திடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஓட்டுநர் தாஸ்.

பத்து நிமிடத்திற்குப் பின்னர் வேறொரு கார் வந்து சாலையில் எதிர்ப்புறம் நிற்க, தாரா அதிலிருந்து இறங்கிக் கையசைக்க, ஆதித் அதைக் கவனித்துவிட்டு வியப்பானான்.

அதற்குள் தாராவும் அவனைப் பார்த்துவிட, தாழ்ந்த பார்வையுடன் அவனைநோக்கி நடந்துவந்தாள் அவள்.

"அ.. அது.. யாருன்னா.."

"சேச்சே.. வேணாம்.. எங்கிட்ட எந்த விளக்கமும் தரவேணாம். உன் சுதந்திரத்துல தலையிட எனக்கு உரிமை கிடையாது. ஜஸ்ட் பீ கேர்ஃபுல். என்ன செஞ்சாலும் கவனமா இரு, அதுபோதும்."

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now