அத்தியாயம் 23

Start from the beginning
                                    

கார்த்தி "கருணா அண்ணாவும் சுகுணா அண்ணிவும் சேர்த்து இவன் தான் கடத்தி இருப்பானா இல்ல அவங்க மிஸ்ஸிங் வேற யார் மூலமாக வா" என்று கேட்டான்.

தீரன் "இல்ல எல்லாரையும் கடத்தி இருக்கிறது அஜய் தான் அதே மாதிரி எல்லாரையும் ஒரே இடத்தில்தான் வச்சிருக்கான் ஆனா எங்க வச்சு இருக்கான்னு தெரியல எனக்கு தெரிஞ்சவங்க யாரும் இன்னும் கண்ணு முளைக்கவில்லை எல்லாரும் மயக்கத்தோட இருப்பாங்கன்னு நினைக்கிறேன் கண்ணு முழிச்சு இருந்தா கண்டிப்பா இவ்வளவு நேரத்துக்கு நமக்குக் கிடைத்திருக்கும்" என்று கூறினான்.

அதன் பிறகு அனைவரும் பொறுமையாக யோசிக்க ஆரம்பித்தனர். சிறிது நேரம் எதுவோ யோசித்த ஆகாஷ் தன்னுடைய அலைபேசியை எடுத்து யாரோ ஒருவருக்கு தொடர்பு கொண்டு பேசினான் பின்பு அனைவரையும் பார்த்து அவங்க எல்லாரும் இருக்கிற இடம் தெரிஞ்சிச்சி வாங்க போலாம்" என்று கூறி அனைவரையும் அழைத்து சென்றான்.

அதே நேரம் பெண்கள் அடைக்கப்பட்டு இருந்த இடத்தில் முதலில் கண்விழித்த அனன்யா தாம் இருந்த இடத்தை பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு தன் பக்கத்தில் இருந்த அதிதியை ஓங்கி மிதித்தாள் அவள் மிதித்ததால் எடுத்த வலியில் மயக்கத்திலிருந்து வெளியே வந்தாள் முழுதாக தெளிந்த அதிதி தன் பக்கத்தில் இருந்த நிலா மற்றும் வினோதினி இருவரையும் மாறி மாறி அறைந்தாள். அதில் அவர்களும் சுயநினைவு வந்தனர்.

யாருக்கும் கை கால்கள் கட்டப் படாமல் இருந்ததால் ஒருத்தரை ஒருத்தர் எழுப்புவதற்கு ஏதுவாக இருந்தது. அனைவரும் தாங்கள் இருந்த அறையை சுற்றி பார்வையிட்டனர். அதில் ஒரு மூலையில் வைஷ்ணவி மட்டும் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்த பெண்கள் நால்வரும் ஓடி சென்று அவளை விடுவித்தனர்.

அவர்கள் கைது செய்ததில் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவு வந்த வைஷ்ணவி அனைவரையும் பார்த்தவள் அவர்களை கட்டிக்கொண்டே கண்ணீர் விட்டாள். பின்பு நினைவு வந்தவளாக அவசரமாக தன் கையிலிருந்த மோதிரத்தில் இருந்த பட்டணை அமுக்கி விட்டாள்.

நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )Where stories live. Discover now