"என்ன பாஸ்.. இப்படி நடுவுலயே எந்திரிச்சு வந்துட்டீங்க? நெக்ஸ்ட் வேற கேட்டகரி எல்லாம் நெறய இருக்கே.. அதையும் கேட்டுட்டு அப்பறமா கிளம்பலாமே..?"

"ஆயிரம் கேட்டகரி இருந்தாலும், நம்ம எதிர்பார்த்தது கிடைக்காதபோது வேறெதுவும் பிடிக்காது ராஜீவ். டிரைவரை கூப்பிடு, கிளம்பலாம்."

"சார் ... பங்ஷன் நடந்துட்டு இருந்தப்போ மூணு கால் வந்தது. ஒண்ணு அமெரிக்காவுல இருந்து உங்க அப்பா, மீதி ரெண்டும் உங்க பாட்டி, கோயம்புத்தூர்ல இருந்து. உங்களை எப்போ ஊருக்கு வருவீங்கனு கேட்டு சொல்லச் சொன்னாங்க."

பாட்டியை நினைத்ததும் இதழோரம் சிறு புன்னகை அரும்பியது ஆதித்தின் முகத்தில்.

"நான் நைட் அவங்ககிட்ட பேசிக்கறேன். டாடி என்ன சொன்னாரு?"

"அவரும் அம்மாவும் காலைல ஏர்லி மார்னிங் ஃப்ளைட்ல கிளம்பறாங்களாம் சார். நேரா சென்னைக்கே போயி இறங்கிட்டு, அங்கிருந்து கோயம்புத்தூர் போயிடறாங்களாம். பாட்டிகிட்ட இன்னும் சொல்லலியாம்.. They're planning it as a surprise."

"Great. அப்போ நானும் நாளைக்கு சாயங்காலமா ஃப்ளைட் ஏறினா, நைட் வீட்டுக்குப் போயிடலாம்ல?"

"எஸ் சார். ஏற்கனவே நான் ஃப்ளைட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டேன் சார். கல்கத்தா டூ சென்னை, நாலு ஃப்ளைட்ஸ் இருக்கு சார். அப்பறம் சென்னை டூ கோயம்புத்தூர்: ஏழு ஃப்ளைட்ஸ் இருக்கு. ஈவ்னிங் போறதா இருந்தா, ஜெட் ஏர்வேஸ்ல புக் பண்ணிடலாமா சார்?"

"தேங்க்ஸ் ராஜீவ். அதையே புக் பண்ணிடு. இப்ப ட்ரைவரை வரச் சொல்லு."

ராஜீவ் மறுப்பேதும் சொல்லாமல் ஓட்டுநரை அழைத்தான் கைபேசியில். வெள்ளி நிற பென்ஸ் கார் தங்கள் முன்னால் வந்து நின்றதும், ஆதித்துக்கு பின்கதவைத் திறந்துவிட்டுவிட்டு, அவன் ஏறியதும் கதவை மென்மையாகத் தள்ளி சாத்திவிட்டு, ஒட்டுநரின் அருகிலுள்ள இருக்கையில் ஏறியமர்ந்துகொண்டான் ராஜீவ்.

கல்கத்தாவின் சாலைகளில் கார் வழுக்கிக்கொண்டு செல்ல, குளிர்சாதன வசதி செய்திருந்ததால் நகரின் இரைச்சல் எதுவும் அதனுள் விழாமல் நிசப்தமாகவே தொடர்ந்தது பயணம். தனது மடிக்கணினியில் கம்பெனியின் சில விபரங்களைப் பார்த்தவண்ணம் வந்த ஆதித்தின் முகத்தில், இன்னும் அந்த ஏமாற்றத்தின் சோகம் சிறிதளவு தெரிந்தது. ராஜீவ் மெல்லமாகப் பெருமூச்சு விட்டான் அவனைக் கவனித்து.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now