நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

49.6K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-2-
-3-
-4-
-5-
-6-
-7-
-8-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-47-

784 40 0
By safrisha

நள்ளிரவு கடந்து களைத்துப்போய் இல்லம் திரும்பிய ரய்யான் அறையில் விளக்கு ஒளிர்வதைகண்டு யோசனையுடன் உள்ளே நுழைந்தான்.

அத்தனை பெரிய கட்டிலை விடுத்து சோபாவில் தூங்கும் மனைவியை ஆச்சரியமாக பார்த்தான். நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்த துணிகளை கண்டு இன்னும் ஆச்சரியம் கூடிற்று.

தாமதியாமல் உடைமாற்றி தூய்மையாகிவந்து ஹிக்மாவை கட்டிலில் கிடத்துவதற்காக கைகளில் ஏந்தினான்.

அவன் தொட்டுத் தூக்கியதில் உறக்கம் நடுவில் குழம்பிட கனவிலிருந்து மீளாமல் கண்கள் மூடிய நிலையில் மனதில் ஒட்டியிருந்த கோபத்தில் ஏதேதோ பேசினாள். ஆனால் அனைத்தும் தெளிவற்ற உளறல்களாகவே வெளிவர அள்ளிக்கொண்டு போய் கட்டிலில் வளர்த்தினான். சிறிதுநேரம் சிரித்தபடி அவளது உளறல்களை ரசித்தான். பின்

"சரி சரி தூங்குங்க. காலைல பேசலாம்.." என்று தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான்.

அவள் பேச்சு ஓய்ந்ததும் நெற்றியில் இதழ்பதித்துவிட்டு
தன்னிடத்தில் வந்துபடுத்தான்.

காலையில் எப்போதும் போல ரய்யானுக்கு முன்பாக துயிலெழுந்தாள் ஹிக்மா. வழமைபோல குளியலறைக்கு போக முற்பட பக்கத்தில் படுத்திருந்தவன் பார்த்ததும் முந்தைய நாளின் நிகழ்வுகள் கோர்வையாக நினைவில் உதித்தன.

பலதையும் சிந்தித்தவாரே காலைக் கடன்களை முடித்துவந்து தஹஜ்ஜுத் தொழுகை நிறைவு செய்தாள். இப்போது ஒவ்வொரு தஹஜ்ஜுத்திலும் இருவருக்கும் சேர்த்தே துஆ செய்தாள்.

பஜ்ருக்கு பாங்கு சொல்லியும் ரய்யான் எழாமல் தூங்குவதை வைத்து இரவு நன்றாகவே தாமதித்து வந்திருப்பது புரிந்தது. பாவமென்று சிறிதுநேரம் தூங்கவிட்டாள்.

சூரிய உதயத்திற்கு நாற்பது நிமிடங்கள் மீதம் இருக்கையில் ரய்யானை தொழ எழுப்பினாள்.

"எழும்புங்க.."

"டைம் ஆகிடுச்சி.. எழும்பி தொழுங்க. இல்லாட்டி கலா ஆகிடும்"

அவனுக்கு தூக்கத்திலிருந்து விழிப்பு வந்துவிட்டது. ஆனாலும் களைப்பில் உடல் ஒத்துழைக்க மறுத்தது. கண்களை திறக்க முடியாமல் படுத்திருந்தான்.

"ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க. நைட் லேட்டாத்தான் தூங்கினன்.."

"ஜாமம் முழுக்க ஊரு சுத்தினா இப்படித்தான் தொழ எழும்புறது கஷ்டமாத்தான் இருக்கும்" நேற்றைய கோபம் இன்னும் மனதில் இருந்தது. அது அவனை எழுப்புவதில் வெளிப்பட்டது.

"இப்ப எழும்ப போறிங்கலா? இல்லையா?"

"எழும்புறன்னு தானே சொல்றன். எதுக்கு கத்துறீங்க?"

"தொழாம இப்படி கவுந்தடிச்சு தூங்குறதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்கமுடியாது"

"சரி அப்ப கொஞ்ச நேரத்துக்கு அந்த பக்கமா திரும்பி இருங்க" என்று மனைவிக்கு பதில் கொடுத்தபடியே களைப்பை உதறிவிட்டு எழுந்து அமர்ந்தான்.

அவன் பதிலில் கடுப்பான ஹிக்மா அவன் எழுந்ததை பார்க்காமலே

"பாவம்னு கலாவாகிடுமேன்னு எழுப்பினேனே என்னை சொல்லனும். நீங்க அப்படியே ஷைத்தானை கட்டிப்புடிச்சிட்டு தூங்குங்க. எனக்கென்ன வந்திச்சி" என்று பொறிந்து தள்ளிவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.

மாமனார் தொழுகை முடித்து பள்ளியிலிருந்து வந்ததும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்டவர்

"நைட் ரெண்டுமணி பிந்தித்தான் ரய்யான் வந்தான். டயர்ட்ல தொழாம தூங்கிருவான். கொஞ்சம் எழுப்பி விட்ருங்க மகள்"

"சரி மாமா" என்றவாறு மீண்டும் மாடி ஏறினாள். ரய்யான் தொழுது முடித்த அடையாளமாக தொழுகை விரிப்பை மடித்து வைப்பதை பார்த்ததும் திருப்தியானாள். ஹிக்மா நிற்பதை கண்டவன்

"நீங்களா ட்ரெஸ்ஸெல்லாம் மடிச்சு வச்சீங்க?" என்றான் லேசாக ஆச்சரியம் கலந்த தொனியில்

"ஆமாம்.. ஏன்?"

"இல்ல நீங்க எப்பவும்போல சும்மா வெச்சிருக்கலாம். நானே மடிச்சிருப்பேன்" என்றதும்

விடுவிடுவென மேசையருகில் சென்றவள்

"சரி நீங்களே மடிச்சி வெச்சிக்கோங்க" என்று மடித்து வைத்த ஆடைகளை கலைந்து விட முனைய

"ம்ப்ச்... ஐயோ விடுங்க. இப்ப எதுக்கு மடிச்சதை கலைக்கிறீங்க"

"உங்களுக்கு நான் மடிச்சது விருப்பம் இல்லையே"

"விருப்பம் இல்லைனு நான் சொன்னேனா? பாவம் சிரமப்பட வேணாம்னு நினைச்சி சொன்னா அதுக்குள்ள அவசரப்பட்டு... அதுசரி நைட் ஏன் சோபால தூங்கினீங்க?" என பட்டென கதையை மாற்றினான்.

அவனுக்காக காத்திருந்த கதையை சொல்ல முடியாமல்

"அது.. அது நான் போன் பார்த்துட்டு இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன்"

"அதை பெட்ல இருந்தே பார்த்துட்டு தூங்கியிருக்கலாமே"

"நான் எங்க தூங்கினா உங்களுக்கென்ன? அதைப்பத்தி நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க" கடுப்பானாள் ஹிக்மா.

"நான் கவலைப்படாம யார் கவலைபடுவா? எழுபத்தஞ்சி கிலோ. அதை நான்தானே தூக்கி சுமந்து பெட்ல வளர்த்தனும்"

"ஹெலோ நானொன்னும் அவ்வளவு வெயிட் இல்ல சரியா. அம்பது கிலோதான்"

"அப்படியா? நேத்து சரியா பார்க்க தவறிட்டேன். வேணும்னா இன்னொரு முறை தூக்கிப்பார்த்து கன்போர்ம் பண்ணிக்கவா?" என்று ரய்யான் கண்களில் குறும்பு மின்ன வினவியதும் மறுநொடி அவளது முகம் ரோசாப்பூ வண்ணமாய் மாறியது.

"உங்களோட வெட்டிப் பேச்சுப்பேச நேரமில்லை. இடியாப்பம் செய்யனும். நான் போறேன்" முகத்தை மறைத்தபடி அவனிடமிருந்து நழுவினாள்.

"நான் தூங்கபோறன். என்னை மறக்காம எட்டரை மணிக்கு எழுப்பி விடுங்க" அவள் வாசல் தாண்டும் முன்பே ரய்யான் சொல்லிவிட பதில் சொல்லாமலே வெளியேறினாள்.

ரய்யானுக்கு மனைவியின் செயற்பாடுகளில் உள்ள மாறுதல் புரிவது போலிருந்தது. அதை விரிவாக ஆராய முன்பே தூக்கத்தில் விழுந்தான்.

காலையில் ஒன்பது மணிக்கு ரய்யான் கடைக்கு கிளம்பினான். விடுமுறை என்பதால் ஹிக்மாவே பகல் சமையலையும் செய்தாள்.

அன்றைய பொழுது ஹிக்மாவுக்கு ரீஹாவுடன் சுவாரசியமாக கரைந்தது.

இரவில் வீடுவந்த ரய்யான் என்றைக்கும் இல்லாமல் சற்று தயக்கத்துடன் நடமாடுவதாக உணர்ந்தாள் ஹிக்மா.

'என்னவென்று கேட்கலாமா? வேண்டாமா?' என்ற போராட்டத்தின் பிறகு தூங்க ஆயத்தமாகும் போது கேட்டாள்.

"என்ன சரி பிரச்சினையா? கொஞ்சம் ஒருமாதிரி இருக்கிங்க"

"ம்ம்ம்..." என பெரிதாக யோசிப்பது போல் இழுத்து பின் 'பிரச்சினைதான்..' என்று முடித்தான்.

'என்ன?' என்று கேள்வியாகப் பார்த்தவளை

"நீங்க நினைக்கிறது போல தலைபோற பிரச்சினை ஒன்னுமில்லை"

"அப்ப ?"

"நெக்ஸ் வீக்கெண்ட்ல ப்ரெண்ட்ஸ் கெட்டுகெதர் ப்ளான் பண்ணிருக்காங்க. அதான் போறதா வேணாமான்னு.."

"வாஹ்..! கெட்டுகெதர் போறதுக்கா இவ்வளவு யோசிக்கிறிங்க. நானா இருந்தா என்ன வேலையிருந்தாலும் எல்லாத்தையும் போட்டுட்டு போயிடுவன். ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேருறது எவ்வளவு ஜோலியா இருக்கும்"

"போறதுக்கு எனக்கும் விருப்பந்தான். ஆனால்.. கொழும்புக்கு போகணும்"

"அதுக்கென்ன. ஒரு நாள்தானே. போயிட்டு வாங்கலேன். எத்தன வருஷம் கழிச்சு ப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்க்க போறிங்க. கொழும்பு என்ன பெரிய தூரமா? ஜஸ்ட் பைவ் அவர்ஸ் தூரம்"

"தூரம் ஒரு பிரச்சினையே இல்லை"

"அப்போ வேறென்ன?"

"எல்லாரும் கட்டாயம் பெமிலிய கூட்டிட்டுத்தான் வரணுமாம். அதான்.."

"அதுக்கென்ன? கூட்டிட்டு போகவேண்டிய---" என சாதாரணமாக சொல்ல வாயெடுத்தவள் பின் புரிந்துகொண்டு

"நான் எதுக்கு? எனக்கு யாரைத் தெரியும்? உங்க ப்ரெண்ட்ஸ். நீங்க போயிட்டு வாங்க"

"நீங்க வர விருப்பப்பட மாட்டிங்கனு தெரியும். திடீர்னு நடந்ததால கலியாணத்து யாரையும் இன்வெய்ட் பண்ணல. அதனால கண்டிப்பா உங்களை கூட்டி வந்தே ஆகணும்னுட்டாங்க. தனியாப்போறதா இல்ல போகாமலே இருந்துடலாமான்னு யோசிக்கிறன்"

'ஆஹா பாவம் பார்த்து கேட்கப்போய் கடைசில நம்ம தலையிலயே வந்து விழுந்திடிச்சே' என்றபடி சத்தமில்லாமல் இருந்தாள் ஹிக்மா.

"சரி நீங்க யோசிக்காம தூங்குங்க. நாளைக்கு ஸ்கூல் போகணுமில்ல"

"ம்ம்.." என்றபடி மறுபுறம் திரும்பி படுத்தாள். ஆனால் தூக்கம் வர நீண்டநேரம் எடுத்தது.

மறுநாள் பாடசாலை புறப்பட்டு சென்ற பின்பும் இரவு அவன் பேசியது மனதை பிசைந்தது. ஒரு முடிவுக்கு வந்தவளாக

'கெட்டுகெதருக்கு நானும் வாரேன். இன்ஷாள்ளாஹ்!' என குறுஞ்செய்தி அனுப்பினாள்.

உடனே ஒரு ஸ்மைலியுடன் 'ஜஸாக்கள்ளாஹ்!' என அவனிடமிருந்து பதில்வந்தது.

அதன்பிறகு மனதில் இறுக்கம் தளர்ந்து வழமைக்கு திரும்பினாள்.

ஆனால் அங்கே ரய்யானோ இந்த பயணத்தை இன்னும் என்னென்ன செய்து பிரயோசமாக்கலாம் என திட்டமிட ஆரம்பித்தான். இருந்தும் 'இதற்கெல்லாம் உடன்படுவாளா?' என்ற சிறுதயக்கமும் இருந்தது.

ஆனால் ரய்யான் அவனுடைய பயணத்திட்டத்தை சொன்னதும் 'ஒருநாள் பாடசாலைக்கு விடுப்பு போட வேண்டுமே' என்று சிறிது தயங்கினாளே தவிர பெரிதாக மறுக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை தான் ஒன்றுகூடல். இருவரும் வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை நகரை சுற்றிப்பார்த்து விட்டு மறுநாள் ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்ற பிறகு திங்கட்கிழமை திரும்பி வருவது. இதுதான் ரய்யான் அவளிடம் சொன்னது.

ஆனால் அவளிடம் சொல்லாத சில ரகசிய திட்டங்களும் அவனுள் இருந்தன. நேரம் வரும்போது சொல்லலாம் என்று ஒழித்து வைத்தான்.

வெள்ளிக்கிழமை ஜும்மா முடித்து வந்து பகலுணவு உண்ட உடனே கிளம்பினார்கள்.

Thanks for reading!
If u like this story pls support me with ur votes n comments

Continue Reading

You'll Also Like

23.1K 909 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
425K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
112K 7.9K 35
Hai thangangala..............mature content.....core story partially based on few true incidents.....dont get more attached to the reel charecters...