நேற்று இல்லாத மாற்றம் |Comple...

Autorstwa safrisha

49.6K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... Więcej

-1-
-2-
-3-
-4-
-5-
-6-
-7-
-8-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-42-

754 37 5
Autorstwa safrisha

அதன்பின்பே ரய்யானுக்கு நிம்மதியாக மூச்சுவந்தது. ஆனால் அவள் குழந்தையை கையாள்வதை ஆர்வமுடன் பார்த்திருந்தான்.

சில நிமிடங்கள்தான் கடந்திருக்கும்

"இங்க பாருங்க.. இங்க பாருங்க.." என குதூகலிக்க ஆரம்பித்த ஹிக்மாவை விசித்திரமாகப் பார்த்தான் ரய்யான்.

"ம்ப்ச்.. என்னைப் பார்க்க சொல்லல. இவளைப் பாருங்க. தூக்கத்தில சிரிச்சாள். எவ்வளவு அழகா இருந்திச்சு தெரியுமா. மிஸ் பண்ணிடிங்க" என்கையில் அவன் கண்களுக்கு ஹிக்மாவும் ஒரு குழந்தையாகத் தெரிந்தாள்.

'இப்படி ஊரார் குழந்தையை கையில் ஏந்தியதற்கே இவள் இத்தனை ஆனந்தமும், ஆர்ப்பரிப்பும் காட்டுகிறாள். நமக்கே நமக்கென்று ஒரு குழந்தை பிறந்தால் எப்படி மகிழ்வாள், கொண்டாடுவாள்'

கற்பனை பண்ணி பார்த்தவனுக்கு நிஜத்தில் நடந்தால் எவ்வளவு இன்பமாக இருக்குமென்ற ஆவலில் உள்ளம் குதூகலித்தது. ஆனால் கற்பனைக்கும் நிஜத்திற்கும் ரொம்ப தூரம். நினைப்பதோடு நிறுத்திக் கொண்டான்.

மறுபடியும்

"ஆஹ்.. இப்ப பாருங்க சிரிக்கிறா.. பாருங்க" இம்முறை அவனுமே பார்த்தான்.

அவள் சொன்னதில் பொய்யில்லை. அவ்வளவு அழகா இருந்தாள் அந்த குட்டி தேவதை. அவள் சிரிப்பதை பார்த்து அவனது இதழ்களும் கவலை மறந்து புன்னகைத்தது.

"அப்படியென்ன ரெண்டு பேரும் சிரிச்சி பார்த்திட்டு இருக்கிங்க?"
என்றபடி நாசிர் ஒரு ட்ரேயுடன் வந்தான்.

"நாநா! உங்கட மகள் தூக்கத்தில் அழகா சிரிக்கிறா"

"ஆமா.. அவ பகல்ல நல்லா சிரிச்சு சிரிச்சு தூங்குவா. நைட் ஆனால் அழுதழுது எங்க யாரையுமே தூங்க விடாம பண்ணிருவா"

"உண்மையாவா?"

"நம்பலைன்னா நைட் பன்னண்டு மணிக்குமேல இந்த ரோட்ல வந்துபாருங்க தெரியும்"

இன்னொரு ட்ரேயுடன் வந்த நாசிரின் தாயார்

"நீயும் பொறந்து மூனுமாசம் ஓயாம அழுதவன்தான். நீ அழுத அழுகை ஊருக்கே தெரியும். இப்ப என் பேத்திய குறைசொல்ல வந்துட்டான்" என நாசிரின் காலை வார இருவருமே சிரித்து விட்டார்கள்.

"உம்மா..!" என சினுங்கினான் நாசிர்.

அவரும் சிரித்தபடியே ரய்யானின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிவிட்டு சாப்பிடச்சொல்லி உபசரித்தார்.

அவர்கள் இரண்டே பேர்தான். ஆனால் அங்கே ஒரு கடையே பரப்பியிருந்தார்கள்.

"ஐயோ எதுக்கு ஆன்ட்டி இவ்வளவெல்லாம் எடுத்திட்டு வந்தீங்க?" ரய்யான் நாகரிகத்துடன் வினவ

"கலியாணம் முடிஞ்சதுக்கே இப்பத்தான் முதல்முறை ஹிக்மாவ கூட்டிட்டு வந்திருக்க. ஒன்னும் சொல்லாமல் சாப்பிடு" என குறை பட்டுக்கொண்டார்.

அங்கிருந்து விடைபெறும் போது 'இனி ஹிக்மாவ அடிக்கடி கூட்டிட்டு வரனும்' என்றே வழியனுப்பி வைத்தார் அவர்.

நாசிரின் வீட்டிலிருந்து திரும்பிவரும் வழிநெடுகிலும் ஹிக்மா குழந்தையை பற்றி சிலாகித்து கூறிக்கொண்டே வந்தாள்.

ரய்யானும் ஒரு குறுநகையுடன் மனைவி ஆர்ப்பரிப்பதை ரசித்தபடி அனைத்திற்கும் "ம்ம்ம்.." கொட்டியபடி வண்டியை செலுத்திக் கொண்டு வர

"என்ன நீங்க எல்லாத்துக்குமே 'ம்ம்' னே சொல்றிங்க?"

"ம்ம்ம்.."

"இதுக்கும் 'ம்ம்' தானா?" என்றாள் விரக்தியோடு

"உங்களுக்கு அந்த புள்ளைய அவ்வளவு விருப்பமா?"

"இல்லாம.. எவ்வளவு க்யூட்டா சிரிச்சுது. ரோஸ்கலர். எனக்கு கிஸ் பண்ணனும் போலயே இருந்திச்சு"

"ஏன்? கிஸ் பண்ணலயா?"

"இல்ல"

"ஏன்? ரஸூலுள்ளா சொல்லிருக்காங்க குழந்தையை முத்தமிடாத உள்ளத்தில் அன்பிருக்காதாம்"

"இன்னும் ஏழுநாள் கூட ஆகலையே. அப்படி வெளியாட்கள் கிஸ் பண்றதை விரும்ப மாட்டாங்க. இன்பெக்ஷன் ஆகும்னு பயப்படுவாங்க. அதான் பண்ணல"

"நீங்க பண்ணியிருந்தாலும் அவங்க கிஸ்பண்ண வேணாம் தடுத்திருக்க மாட்டாங்க"

"அவங்க வாயால அப்படி சொல்லிருக்க மாட்டாங்க. ஆனால் மனசுக்குள்ள இருக்கும்ல"

"என்ன இருக்கும்?"

"எங்க புள்ளையா இருந்தா எப்படியும் நாங்களும் அந்த மாதிரி கிஸ்பண்றதை விரும்ப மாட்டம்தானே. அவங்க எங்கெல்லாம் போய்ட்டு வர்றாங்களோ? இன்பெக்ஷன் ஆகிடுமோன்னு ஒருபயம இருக்குந்தானே. அவங்கள்ட்ட வேண்டாம்னு சொல்லிக்கவும் முடியாம ஒருமாதிரி இருக்கும்" என்று சொன்னதும்

"எனக்கு சரியா விளங்கலயே.. " நீளமான விளக்கத்திற்கு பிறகு மறுபடியும் விளங்கவில்லை என்றதும்

"ஐயோ! இப்ப எங்களுக்கும் புள்ள பொறந்ததுன்னு வைங்க. அப்ப வெளியிலிருந்து வர்றவங்க புள்ளைய கிஸ் பண்ணும் போது நாங்களும் அப்படித்தான் பீல் பண்ணுவம். இப்பயும் விளங்கலன்னு சொன்னிங்க.." என்றாள் மிரட்டலோடு

அவளது விளக்கத்தில் ஒரு விடயம் தெளிவாகியது.

'அவள்மனம் நமது உறவை ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நான் ஏற்படுத்திய சேதம்தான் சரிசெய்யப் படாமல் இன்னும் அப்படியே இருக்கிறது'

அவள் சொன்னதற்கு ரய்யான் ஒரு 'ம்ம்ம்...' ஏனும் சொல்லாமல் இருக்கவும் அவனை ஏறிட வேண்டுமென்றே அவளிடம்

"உண்மையாவா? எங்களுக்கு புள்ள பொறக்குமா?" என்றான்.

அவன் கேட்ட கேள்வியில் ஹிக்மாவின் முகத்தின் நிறம் அவளது கட்டுப்பாடின்றியே மாறிப்போனது. அவன் பார்த்திடக்கூடாதென ஜன்னல்பக்கம் திரும்பி முகத்தை மறைத்தாள். உதட்டிலும் வெட்கப்புன்னகை ஒன்று வெளிவரத் துடித்தது. உதட்டை கடித்து அதையும் மூடி மறைக்க போராடினாள்.

ரய்யான் யாரு. அத்தனையையும் தெளிவாகக் கண்டுகொண்டான். இந்த இனிய காட்சி ஏற்படுத்திய தித்திப்பில் முறுவலித்தபடியே வண்டியை செலுத்தினான்.

அவளை சீண்டிவிட்டு சண்டையிட வைத்து ரசிப்பதை காட்டிலும் இப்படி வெட்கச் சிவப்பில் மூழ்க வைப்பது இன்னும் சுவாரசியமாக இருப்பதை முதல்முறையாக உணர்ந்தான்.

***

ஹிஜாஸுக்கு இரண்டாம் ஆண்டின் இறுதி செமெஸ்டர் பரீட்சைக்கு படிப்பதற்காக விடுமுறை வழங்கப்பட்டது. மறுநாளே பாடக்குறிப்புகளை அள்ளிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

படிப்பதற்கும், மீட்டுவதற்கும் நிறைய இருந்தாலும் தங்கையிடம் வம்பு வளர்ப்பதையும் கூடவே விடாமல் செய்தான்.

அண்ணனையும் தங்கையையும் கட்டி மேய்ப்பதில் சுலைஹாவின் பாடுதான் கொண்டிருந்தது.

"உனக்கு படிக்கிறதுக்கு தானே லீவு விட்டிருக்காங்க? அங்க இருந்தே அழகாப் படிக்கலாமே. இங்க இவளோட சண்டை பிடிக்கவே முழுநாளும் சரியாப்போகுது"

"உம்மா! அங்க சாப்பாடு சரியில்லைமா. ஒழுங்கா சாப்பிடாட்டி எப்படி நான் ஒழுங்கா படிக்கிறது?" தாயின் பலவீனம் தெரிந்து அந்த இடத்தில் குறிவைத்து அடித்தான்.

"வந்ததுக்கு நான் ஒன்னும் சொல்லலைப்பா. இவளுக்கு படிப்பைப் பத்தி சொட்டும் அக்கறையில்ல. இவளோட எதுக்கு கொழுவிக்கினு உன்னோட நேரத்தை வீணடிக்கனும் "

"உம்மா! அவன் படிக்காட்டி அது அவனோட பிழை. அவனுக்கு மட்டும் ஏசுங்க. என்னை எதுக்கு இழுக்குறீங்க. நல்லா திண்னுட்டு தூங்கத்தான் ஸ்டடி லீவுன்னு பொய் சொல்லிட்டு வந்திருக்கான். சோத்துமாடு" ஹிம்னா இடையில் குறுக்கிட

"நீ பொத்து வாய. எந்த நேரமுமே வாயத் தொறந்தா மாடு.. எரும.. கிடா.. கொனான்னுட்டு. வயசில மூத்தவன்னு ஒரு மரியாதையில்ல"

ரய்யான் தாயின் பின்னாலிருந்து தங்கைக்கு பழிப்புக் காட்டினான்.

"நீங்க எப்பயும் எனக்கு மட்டுந்தான் எல்லாம் சொல்லுவிங்க. அவன் சும்மா இருந்தா நான் ஏன் அவனோட சண்டைக்கி போறன். அவன்தான் அதையிதை  சொல்லி என்னை சண்டைக்கு இழுக்குறான். அவன் சொல்லும்போது நான் மட்டும் பார்த்திட்டு இருக்கனுமோ? எனக்கேலாது. முதல்ல உங்க செல்லப் புள்ளைட்ட சும்மா இருக்க சொல்லுங்க"

மூவரிலும் ஒற்றை ஆண்பிள்ளை என்பதால் சுலைஹாவுக்கு எப்போதும் ஹிஜாஸிடம் பாசம் சற்று அதிகம்தான்.

ஹாலித்திற்கு மூன்று பிள்ளைகளும் ஒரே மாதிரிதான். யாரையும் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டார். அதிகநேரம் கடையிலே இருப்பதால் அவர் பிள்ளைகளின் குளறுபடிகளை பெரிய விடயமாக கருதுவதில்லை.

சுலைஹாவின் பெரிய குற்றச்சாட்டே 'எல்லாம் நீங்க குடுக்குற செல்லந்தான்'

ஹிம்னா வீட்டுக்கு கடைக்குட்டி என்பதால் எல்லோருக்கும் எவ்வளவு செல்லமோ அந்தளவிற்கு வாங்கிக் கட்டவும் செய்வாள். அதற்கு காரணமும் அவளது குறும்பும், குழப்படியும் தான்.

ஹிக்மாவுக்கு தங்கை என்றால் எப்பவும் செல்லம்தான். ஆனால் படிப்பில் கவனமில்லை என்றால் மட்டும் கண்டிப்பாள். மற்றபடி அன்னையிடம் திட்டுவாங்கி அழும்போதெல்லாம் தேற்றுவது அவள்தான்.

ஹிஜாஸுக்கும் தங்கையிடம் அளவிலா பாசமுண்டு. கேட்பதை செய்துகொடுப்பான், வாங்கிக்கொடுப்பான். அவளும் பெரிதாக ஒன்றும் கேட்டுவிட மாட்டாள். ஒரு யோகட் அல்லது டிப்டிப், சன்கிகொக் அந்தமாதிரித்தான் கேட்பாள்.

என்றாலும் அவளிடம் சண்டையும் போடுவான். சீண்டி விளையாடுவான். அடிக்கடி தாயிடம் மாட்டிவிட்டு திட்டுவாங்க வைப்பான்.

ஹிம்னா அமைதியாக இருந்தாலும் அவளிடம் பேசாமல், வம்பிழுக்காமல் பார்த்துக்கொண்டு இருப்பது ஹிஜாஸுக்கும் கொஞ்சம் கடினம்தான்.

சிலசமயம் அவனது துணிமணிகளை அயர்ன் பண்ணி தருமாறு கெஞ்சுவான். நோட்ஸ், அஸைமென்ட்ஸ் எழுதி தரச்சொல்லி வற்புறுத்துவான். அவளும் செய்து கொடுப்பாள். கொஞ்சநேரம் ஒற்றுமையாக இருப்பார்கள். பாசமழையில் நனைவார்கள். எல்லாம் அடுத்த சண்டை வரும்வரைதான்.

வீட்டில் அண்ணனும் தங்கையும் ஒரேநேரத்தில் இருந்தால் தெள்ளத்தெளிவாக தெரிந்துவிடும். ஏனெனில் வீடு அவ்வளவு அமர்க்களப்படும். சுலைஹாவிடம் திட்டுவாங்கி ஹிம்னா அழும்வரை அது ஓயாது.

ஹிம்னா பாடசாலை விட்டு வரும்வரை ஒழுங்காக படிப்பான். அவள் வந்து மறுபடியும் மாலை வகுப்புக்கு செல்லும்வரை அவளை  சும்மாவே இருக்க விடமாட்டான்.

மறுபடியும் வகுப்பு முடிந்து வரும்மட்டும் படிப்பான். வந்து விட்டாள் போர்க்களம் ஆரம்பித்து விடும். சுலைஹாவின் நிம்மதியும் பறிபோய்விடும். இப்படித்தான் அவனது ஸ்டடி லீவு போய்க்கொண்டு இருந்தது.

Czytaj Dalej

To Też Polubisz

79.8K 2.5K 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற...
2.6K 416 33
இதுவும் சொல்றதுக்கு இல்ல
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
112K 7.9K 35
Hai thangangala..............mature content.....core story partially based on few true incidents.....dont get more attached to the reel charecters...