நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

52.1K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-2-
-3-
-4-
-5-
-6-
-7-
-8-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-36-

760 40 0
By safrisha

ஹிக்மா கீழேசென்று ஆகாரங்களை சூடு பண்ணிக் கொண்டிருக்கையில் ரிஸ்னாவும் வந்துசேர்ந்தாள்.

"நானும் என்னடா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுதே. இது மழைக்காலமும் இல்லையேனு குழம்பிப் போயிருந்தன். இப்பத்தானே விளங்குது சில அதிர்ச்சிகளை தாங்குற சக்தி வானிலைக்குமே இல்லைனு"  ரிஸ்னாவின் கூற்றிலுள்ள கிண்டலை உணர்த்து

"போங்க datha.. நீங்க ஹிம்னாவ விட மோசம்" பொய்யாக கோபித்தாள்.

"ஹ.. ஹ்ஹா.. ஹிம்னா அப்படியென்ன சொன்னாள்? எங்களுக்கும் சொன்னா நாங்களும் கொஞ்சம் எங்க பங்குக்கு முடிஞ்சதை செய்வம்தானே "

"ஐயோ! அள்ளாஹ்வுக்காக வேணாம்"

சகோதரிகள் தங்களது பேச்சின் நடுவிலும் ரியாஸும், இஸ்மாயிலும் வருவதற்குள் உணவை சாப்பாட்டு மேசையில் வைத்து ஒழுங்குபடுத்தி முடித்தவிட்டனர்.

அன்று ஹிக்மா எழுந்து வந்தபிறகே மற்றவர்கள் வந்தார்கள். ரய்யானைத் தவிர. வந்ததும் எல்லோரது முதல் கேள்வியும் ரய்யான் உடல்நிலை பற்றித்தான்.

"ரய்யானுக்கு இப்போ எப்படியிருக்கு?"

"நைட்டும் நல்ல காய்ச்சல். மருந்து குடுத்து தூங்க வச்சிருக்கேன்"

"மருந்துக்கும் காய்ச்சல் குறையலயா?"

"பெருசா குறைஞ்ச மாதிரி தெரியலை மாமா"

"காலைல பார்த்துட்டு இன்னொரு மருந்து எடுப்போம்"

"நானும் அதைத்தான் யோசிச்சன்"

அன்று ரய்யானை நோன்பு பிடிக்க எழுப்பவில்லை. அவனும் மருந்தின் வீரியத்தில் நன்றாகத்தூங்கினான்.

வழமைபோல எட்டுமணிக்கு கண்விழித்தாள் ஹிக்மா. அவன் நெற்றியில் கைவைத்து சோதித்தாள். இன்னும் காய்ச்சல் அடித்தது. ஆனால் முன்புபோல கடுமையில்லை. மெல்லிய சூடுதான்.

அவன் விழிப்பதற்குள் அவனுக்காக கஞ்சி காய்ச்சி எடுத்துவர சமயலறை சென்றாள்.

அவள் திரும்பி வருவதற்குள் அவனும் எழுந்து காலைக்கடன்களை முடித்து அமர்ந்திருந்தான். இன்னும் தலைவலி குறையவில்லை போலும் தலையை தாங்கிப் பிடித்திருந்தான்.

அடிக்கடி 'ஹக்ஷ்..அக்ஷ்...' என்று தும்மலும் போனது.

"ப்ரஷ் பண்ணிட்டீங்களா? "

"ம்ம்ம் " என்றான்.

"சரி அப்ப இந்த கஞ்சிய குடிங்க. மருந்து குடிக்கனும்ல"

"எனக்கு கஞ்சி வேணாம்"

"ஏன்? வேறேதாவது சாப்பிடுறீங்களா?"

"எனக்கு எதுவும் வேணாம்" அவனது நடவடிக்கை சிறுபிள்ளை அடம்பிடிப்பது போலிருந்தது.

"அப்ப வெறும் வயித்தோட மருந்து குடிக்கப் போறிங்களா?" குரலில் கொஞ்சம் கடுமையை ஏற்றி வினவினாள்.

"ஏன் யாரும் என்னை ஸஹருக்கு நோன்பு பிடிக்க எழுப்பல. நான் நோன்புன்னு நிய்யத்து வச்சிட்டேன். எனக்கு எதுவும் வேணாம்"

"ஓஹோ! ஸஹருக்கு எழுப்பலனு பட்டினி நோன்பு பிடிக்க போறிங்களோ? தாரளமா பிடிங்க. ஏன்னா எனக்குதான் காய்ச்சல். எனக்குத்தான் நேத்து மருந்தெடுதிட்டு வந்தோம். நான்தான் நைட் முழுக்க காய்ச்சல்ல நடுங்கிட்டு இருந்தன். உங்களுக்கு ஒரு வருத்தமும் இல்ல. நல்ல சுகமா இருக்குறீங்க. அப்படித்தானே?" என்றாள் கறாராக.

அவளது கண்டிப்பில் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். எனினும் நோன்பை விட மனமேயில்லை ரய்யானுக்கு.

அவனது மௌனம் ஏதோ செய்ய
"என்ன சத்தமில்ல?"

"அது.. அது இப்ப காய்ச்சல் குறைந்சிட்டு. பிரச்சினையில்ல.."

அவனருகில் சென்று கழுத்தில் கைவைத்தவள்.

"அப்ப இது காய்ச்சல் இல்லாம வேறென்ன? இஸ்லாம் யாரையும் எதுக்கும் சிரமப்படுத்தல. நோயாளிகள் நோன்பு பிடிக்கனும்னு எந்த கட்டாயமும் இல்ல. நீங்களே உங்களை கஷ்டப் படுத்திக்காதிங்க. காய்ச்சல் சரியானதும் அதைக் கலா செய்ங்க. இப்ப சாப்பிட்டு மருந்தை குடிங்க" குரலை சாந்தமாக்கி அவனுக்கு புரியவைக்க முயன்றாள்.

"நேத்தைக்கு இருந்ததுக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்லை. வருத்தம் நல்லா குறைஞ்சிருக்கு அதனா---" .

"அப்ப ஒழுங்கா சொன்னா நீங்க கேட்கமாட்டிங்க. அப்படித்தானே?" இப்போது அவளது கேள்வி மிரட்டலாக மாறியது.

அவளது கண்டிப்பு ஒருவகை கரிசனம்தானே. எனவே அந்த மிரட்டலுக்கு அடங்கிப்போகவே அவன் மனமும் விரும்பியது.

"அது.. " பதில் பேச வாய்வராமல் தயங்கினான்.

"பாவம் மருந்து குடிக்கனுமேன்னு நோன்போட போய் கஞ்சி காய்ச்சி எடுத்திட்டு வந்தா உங்களுக்கு உட்கார்ந்து குடிக்கிறதுக்கு கஷ்டமோ?" என்றதும் பட்டினி நோன்பு நோற்கும் எண்ணமே அடியோடு மறைந்து போனது.

"இல்ல அப்படியில்லை. நான்..நான்ன் குடிக்கிறேன். வைங்க "

ட்ரேயை தேநீர் மேசையில் வைத்துவிட்டு 'இப்போதே உட்கார்' என்பது போல கண்ணால் சோபாவைக் காட்டியதும் மறுபேச்சின்றி சென்று அமர்ந்தான்.

அமர்ந்தவன் மீண்டும் அவளை ஏறிட கஞ்சிக்கோப்பையை கண்ணால் காட்டினாள். அதை கைகளில் ஏந்திக்கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருக்க

"எடுத்து பருக்கி விட்டாத்தான் உள்ள இறங்குமோ?"

'இப்போது ஆமான்னு சொன்னால் மட்டும் வந்து உடனே பருக்கிவிடவா போறீங்க' முகத்தை சுருக்கிக்கொண்டு முனுமுனுத்தபடி கரண்டியால் எடுத்து பருக ஆரம்பித்தான்.

"என்னமோ சொன்னமாதிரி இருந்திச்சி"

"ஹும்ம்.. கஞ்சி நல்ல டேஸ்ட்டா இருக்குன்னு சொன்னன்"

ரய்யானின் முகம் போக்கிற்கும், அவன் சொன்ன பதிலுக்கும் சம்பந்தமே இல்லாததை கண்டு சிரிப்பு வந்தது அவளுக்கு. இருந்தும் காட்டிக்கொள்ளாமல் உர்ரென்றே இருந்தாள்.

"மருந்து எடுத்து வெக்கிறேன். சாப்பிட்டு முடிஞ்சதும் குடிங்க"

"நானே எடுத்து குடிச்சிக்கிறேன். நீங்க கஷ்டப்படத் தேவையில்லை" என்றான்.

மீண்டும் ஒரு பார்வை பார்த்ததும்

"சரி எடுத்து வைங்க. குடிக்கிறன்" என்று அடங்கினான்.

மறுநாள் காய்ச்சல் ஓரளவு சீராகிவிட இருமல் மட்டும் மடங்கவில்லை.

ஆனால் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடுத்தநாள் நோன்பு பிடித்தான்.

ரய்யான் சுகையீனமுற்றது கேள்விப்பட்டதில் இருந்து சுலைஹாவின் அழைப்பு அடிக்கடி வந்தது.

"மகனுக்கு இப்ப எப்படியிருக்கு?
ஆவி பிடிக்க வை. நெஞ்சில் படுவெண்ணை தடவிவிடு இருமல் குறையும். பச்சத்தண்ணி குடிக்க விடாத"

தாயார் சொன்னதை எல்லாம் செய்யாவிட்டாலும் அவளால் முடிந்தசெய்து பார்த்துக்கொண்டாள்.

இளையமகனும் மருமகளும் ஒன்றாக இருப்பதை பார்த்து இஸ்மாயில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். ஹிக்மா சொல்வதை மறுப்பின்றி செய்யும் மகனை பார்க்கையில் மனம் நிறைந்து போனார். அதுபோல ஹிக்மாவும் மகனை கூடியவிரைவில் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வேண்டாத நாளில்லை.

அன்று இருபத்தொன்பதாம் நோன்பு. நாளை பெருநாளா இல்லையா என்பதை தீர்மானிக்க பிறைக்குழுவினர் கலந்துரையாடல் வானொலியில் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

பிறைகாணும் நாளில் பெண்களின் பெரும் பிரச்சினையே 'நாளை நோன்பா? ஸஹருணவு சமைப்பதா? இல்லையா?' என்பது. அதற்கு ஹிக்மாவும், ரிஸ்னாவும் கூட விதிவிலக்கல்ல. அவர்களை அதிகம் காக்கவிடாமல் பிறைக்குழு பிறை தென்பட்டதை உறுதிசெய்து நாளை நோன்பு பெருநாள் என்பதையும் அறிவித்தது.

மறுநாள் நோன்புப் பெருநாள்!

முன்தினமே 'ஈத் முபாரக்' வாழ்த்துக்கள் வந்துகுவிந்த வண்ணம் இருந்தன.

ரய்யானின் காய்ச்சல் முழுவதும் குணமாகி விட்டிருந்தது.

பள்ளிவாசலில் ஒலித்த தக்பீர் சத்திற்கே ரய்யான் கண்விழித்தான். இப்போதெல்லாம் தூங்கியெழுந்தாலே அவன் விழிகள் முதலில் மனைவியையே தேடும்.

அவள் நேரமே எழுந்து கீழே சென்றிருக்க பக்கத்துக்கு இடம் காலியாக இருந்ததை பார்த்து பெருமூச்சு விட்டான்.

எழுந்துபோய் வுழு செய்துவந்து பஜ்ர் தொழுதுமுடித்து கீழே சென்றான். இஸ்மாயிலும் ரியாஸும் பள்ளிவாசலில் இருந்துவந்து தேநீர் அருந்தியபடி கதைத்துக் கொண்டிருந்தனர்.

சலாம் சொல்லி அவர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டான். கடந்த நோன்பு பெருநாள் ஆயிஷாவுடன் இருந்ததை சொல்லி கண்கலங்கினார் இஸ்மாயில்.

மூன்று வருடமாக தாயாரின் அருகில் இல்லாமல் போனிலே வாழ்த்துசொல்லி தனிமையில் கழித்த பெருநாட்களை நினைத்து ரய்யானின் உள்ளமும் வருந்தியது.

"ரய்யான் ஆறரை மணிக்கு பெருநாள் தொழுவிப்பாங்க. சாப்பிட்டு ரெடியாக இரு "

"சரி நாநா "

அனைவரும் ஆறு மணிக்கு முன்பே குளித்துமுடித்து ஒன்றாக அமர்ந்து காலையுணவு அருந்தினர்.
சாப்பிட்டுமுடிய புத்தாடை அணிந்து பெருநாள் தொழுகைக்குசெல்ல தயாராக ஆரம்பித்தனர்.

"ஆயிஷாவே இல்லாமபோன பிறகு எனக்கென்ன பெருநாள்" என்று மனைவியை இழந்த வருத்தத்தில் இஸ்மாயில் புத்தாடை அணிய மறுத்தார். பின் மகன்களின் வற்புறுத்தலால் அணிந்துகொண்டார்.

ஹிக்மா அவள் வாங்கிய உடையையே உடுத்தினாள். தான் வாங்கிக் கொடுத்ததை அவள் ஏற்காதது ரய்யானுக்கு வருத்தம்தான். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் இருந்தான்.

அபாயாவை போட்டுக்கொண்டு ஷோலை சுற்றி கட்டுவதற்கு ஆயத்தமானாள். அடிக்கடி குனிந்து எடுக்க முடியாததால் வாயிலும் சில குண்டூசிகளை கடித்து பிடித்திருந்தள். இது எப்போதுமே ஷோல் சுற்றும்போது ஹிக்மா கையாளும் ஒரு உத்தியே.

ஷோலை மடித்து சுற்றி நழுவிடாமல் தேவையான இடத்தில் குண்டூசியை குத்தினாள்.

அவள் எதிர்பார்க்கின்ற வடிவில் ஷோலை எடுப்பதற்கு தலையை குனிந்து போராடிக் கொண்டிருக்க ரய்யானும் கண்ணாடி பார்க்கவென இடைநடுவில் வந்துநின்றான்.

அவள் நிமிர்ந்து பார்க்கும்போது பனைமரம்போல முழுக் கண்ணாடியையும் மறைத்து நின்று பட்டன்களை பூட்டி கோலரை மடித்து விட்டுக்கொண்டிருந்தான்.

அவன்மேல் கோபம் வந்தாலும் 'இது அவனுடைய அறை அவனே முதலில் தயாராகி வழிவிடட்டும்' என்று அமைதியாக ஒதுங்கி நின்றாள்.

Thanks for reading!
If u like this story pls help me with ur votes n comments

Continue Reading

You'll Also Like

80.3K 10.1K 52
Peep in peep in , You are already in . This is a general fiction and the protagonists can be of your own choice .
457K 15.1K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...
217K 6.3K 43
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
239K 6.1K 148
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...