நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

49.6K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-2-
-3-
-4-
-5-
-6-
-7-
-8-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-34-

788 36 0
By safrisha

படுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஹிக்மா உறங்கிவிட்டாள். ரய்யானுக்குத்தான் நேரமாறுதலால் தூக்கம் கண்ணைத்தொட மறுத்தது.
ஒவ்வொரு பக்கமாக புரண்டு எப்படியாவது தூங்கிவிட வேண்டுமென போராடிக் கொண்டிருந்தான்.

அப்படி அவன் அவள்புறம் திரும்பி படுத்திருக்க அவளும் எதேச்சையாய் இவன்பக்கமே புரண்டாள். இரவு விளக்கின் மங்கிய வெளிச்சத்திலும் அவள் வதனத்தின் வரிவடிவம் அவனை ஈர்க்க தன்னை மறந்து நெருங்கினான் அவளை.

அவள்மூச்சு சீராக அவன் முகத்தில் மோதியது. ஒழுங்கற்று கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான். சண்டைபோட்டு தூங்கினாலும் இப்போது எவ்வித உணர்வுமில்லாது நிர்மலாக காட்சி தந்தாள்.

அவளை கண்ணெடுக்காமல் ரசித்துக்கொண்டிருக்க தூக்கத்தில் இன்னும் அவனை நெருங்கியவள் கையையும் தூக்கி அவன்மீது போட்டுத் தூங்கினாள்.

அவளின் அருகாமை ஏற்படுத்திய தித்திப்பில் ரய்யானும் மனநிறைவோடு கண்ணயர்ந்தான்.

ஏதேதோ இனிய கனவுகள் அவன் தூக்கத்தை ஆக்கிரமித்திருக்க இடையூறாக  ஸஹர் அலாரம் அடித்து அவனை அதிலிருந்து மீட்டெடுத்தது.

அலாரத்தை நிறுத்த எத்தனிக்கும் போது அவனது வலதுகையில் சுமையேறியதாக உணர்ந்து. விழிதிறந்து பார்க்க அவன் கையில் தலைவைத்து படுத்திருந்தள் ஹிக்மா.

மெதுவாக தலையிலிருந்து கையை எடுத்துவிட முற்பட தூக்கத்தில் முனகிக்கொண்டே அவனை அசையவிடாமல் பிடித்துக்கொண்டாள். சிறிது நேரம் அவள் பிடியிலே படுத்திருந்தான். விடியும்வரை அப்படியே இருந்திட அவனுக்கு ஆசைதான். ஆனால் நோன்புநோற்க வேண்டுமே.

ஒருமுறை அடித்து ஓய்ந்த அலாரம் மறுபடியும் அடித்திட அவள் முனகலை பொருட்படுத்தாது மெதுவாக அவளை விலத்திவிட்டு எழுந்து அலாரத்தை நிறுத்தினான்.

ஓரிருமுறை அவளை எழுப்பிப் பார்த்தான். அவளிடமிருந்து 'ஊம்ம்.. ஆஹ்..' முனகல் மட்டும் வந்ததே தவிர கண்ணை திறக்கக் காணோம்.

அவன் எழுந்து போன பின்னாலேயே சுலைஹாவும் வந்து ஹிக்மாவை எழுப்பிச் சென்றார். ஆனாலும் ஹிக்மா எழுந்தபாடில்லை.

ரய்யான் மறுபடியும் வந்து எழுப்பளானான்.

"எழும்பறன்னு சொல்றேன் தானேம்மா.. " தாயென்று நினைத்து உளறினாள்.

"எப்ப?"

"இப்ப "

"அப்ப எழும்புங்க.."

"ஹான்.."

"ஹான்.. ஹான்தான்.. " என்று போர்வையை உருவியெடுத்தான்.

"ஐயோ.."

"ஐயாவுமில்ல.. அக்காவுமில்ல.. எழும்புங்க இனி டைமில்ல"

ஸஹருக்கு ஹிக்மாவை எழுப்பி எடுப்பதற்குள் போதுமென்றானது ரய்யானுக்கு. எப்படியோ இன்று அவளை சீக்கிரமே எழுப்பிவிட்டான்.

ஒருவாறு எழுந்துவந்தாள். ஆனால் சுலைஹாவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள்.

"பொம்பள புள்ள இப்படியா தூங்குறது. மருமகனே எழும்பிட்டாரு. உனக்கு மட்டும் என்ன முடியாத தூக்கம். அவருக்கு என்ன வேணும்னு பார்த்துகேட்டு செஞ்சுகுடுக்கனும்னு ஒரு சிந்தனையே இல்ல"

'ஏன் அவனுக்கு பல்லு வெலக்கி நான்தான் சாப்பாடு ஊட்டி விடனுமா? அவனென்ன கைப்புள்ளையா?' மனதுக்குள் புலம்பினாள்.

சாப்பிட்டு முடிந்ததும் சுலைஹா அனைவருக்கும் தனித்தனி கோப்பைகளில் தயிரும் சீனியும் போட்டுக் கொடுக்க அதை ஹிக்மா ட்ரேயில் வைத்து எல்லோருக்கும் கொண்டுபோய் கொடுத்தாள்.

"உம்மா ஹிம்னா தஹஜ்ஜுத் தொழுதிட்டு இருக்காள். அவளோடது இங்க மேசைல வெச்சிருக்கன். சாப்பிட சொல்லுங்க"

என்று தாயிடம் சொல்லிவிட்டு தனது கப்பில் உள்ளதை சாப்பிட்டு முடித்து நீர் அருந்திய பிறகு அறைக்கு சென்றாள்.

சாப்பிட்ட கப்பை வைக்க வந்த ஹிஜாஸின் கண்களில் மேசையிலிருந்த தயிர்கப் பட்டுவிட மேலதிகமாக இருக்கிறது என்று நினைத்து அதையும் சாப்பிட ஆரம்பித்தான்.

தொழுதுமுடித்த கையோடு ஹிம்னா மேலங்கியைகூட கலட்டாமல் பாங்கு சொல்வதற்குள் தயிரை சுவைக்க பறந்து வந்தாள்.

ஹிஜாஸோ சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"உம்மா! என்னோட தயிர்கப் எங்க...?"

"மேசைல மூடி வெச்சிருக்கு!" தனது அறையில் இருந்தவாரே சுலைஹா குரல் கொடுத்தார்.

அவன் கடைசி ஸ்பூனை சாப்பிடும்போது அங்கே வந்த ஹிம்னா தனக்கானதை தேட

"என்ன தேடுற?"

"உம்மா இங்க தயிர் வெச்சிருக்கன்னு சொன்னாங்க"

"நீ சாப்பிடலயா?"

"நான் தொழுதிட்டு இருந்தன் "

"அப்ப இது உனக்கு வெச்சிருந்ததா? " என்று காலிக் கப்பை காட்ட ஹிம்னா கத்ததொடங்கி விட்டாள்.

"ஏன் என்னோட தயிர சாப்பிட்ட? இப்பவே எனக்கு வேணும்........ தா............"

ஹிஜாஸ் தான் தெரியாமல் சாப்பிட்டு விட்டதாக எவ்வளவு சொல்லியும் ஹிம்னா சமாதானம் ஆகவில்லை. அவன் வேண்டுமென்றே சாப்பிட்டதாக அவனுடன் சண்டை போட்டாள். சண்டை சத்தம் வீடுமுழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது.

"ஒரு தயிரை சாப்பிடுறதுக்கு எத்துனை கலவரம்? இப்ப என்ன சண்டையோ இது ரெண்டுக்கும்?"

சுலைஹா புலம்பிக்கொண்டே அங்கு வந்துசேர்ந்தார்.

"நாநா எனக்கு வெச்ச தயிரை சாப்புட்டான்மா. எனக்கிப்பவே வேணும்"

"அதுக்கெதுக்கு தொண்டை கிழிய கத்துற. ப்ரிட்ஜ்ல இருக்கும் போட்டு சாப்பிட வேண்டியதானே. எங்கட வீட்டைப்பத்தி மருமகன் என்ன நினைப்பார்"

"ப்ரிட்ஜ்ல ஒரு சொட்டு போலத்தான் இருக்கு. எனக்கு அது போதாது "

"போதாட்டி இப்ப ஒன்னும் செய்யேலாது? ரெண்டு நிமிஷத்துல பாங்கு சொல்லப்போகுது. நாளைக்கு வாப்பாட்ட வாங்கிட்டு வர சொல்றேன். இப்ப அவனோட சண்டைபோடாம போ"

"நீங்க எப்பவுமே அவனுக்குத்தான் சப்போர்ட் பண்றீங்க"என்று இதற்குமுன் எப்போதெல்லாம் தாயார் சகோதரனுக்கு ஆதரவாக நடந்து கொண்டாரென ஹிம்னா பட்டியல் போட கடைசியில் சுலைஹாவிடம் கடுமையாக திட்டுவாங்கி அழுத பின்புதான் தயிர் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மழைபெய்ய ஆரம்பித்திருந்ததால் ஆண்களும் வீட்டிலே தொழுது கொண்டார்கள்.

ஹிம்னாவின் அழுகை இன்னும் ஓயவில்லை. ஹிக்மா அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

"இன்னைக்கு மழை நல்லா பெய்யும்போல தெரியிதுல " ரய்யான் ஹிஜாஸிடம் வினவ

"நீங்க எந்த மழைய சொல்றீங்க மச்சான்? வெளியில பெய்யிறதையா? வீட்டுக்குள்ள பெய்யிறதையா?"

ரய்யான் சிரித்துவிட்டு
"ரெண்டுமே இப்போதைக்கு நிற்கிற மாதிரி தெரியல்ல"

"உங்களுக்கு ஆச்சரியமா இருக்குமே ஒரு தயிருக்காக உயிர்போற அளவுக்கு சண்டையான்னு?"

"ஹ ஹாஹ்.."

"ஹிம்னாக்கும், dathaக்கும் இந்த தயிர், யோகட், சீஸ்... டெய்ரி ப்ரொடெக்ட்ஸ்னா---"

"ரொம்ப பிடிக்குமோ? "

"பிடிக்குமாவா...? அதெல்லாம் உசுரு மாதிரி"

"ஓஹ்"

"எவ்வளவு பெரிய சண்டையா இருந்தாலும் ஒரு யோகட் வாங்கிக்குடுத்தா சமாதானம் படுத்திடலாம். நல்லா ஞாபகம் வெச்சிகுங்க மச்சான். பின்னாடி எப்பவாச்சும் யூஸாகும்"

"ஹ..ஹ்ஹா... போயின்ட் நோட்டட்"

"சரி நீங்க தூங்குங்க மச்சான். நைட்டும் தூங்க நல்லா லேட்டாச்சு"

ஹிஜாஸ் சென்றதும் ரய்யானும் அறைக்குள் சென்றான்.

ஹிக்மா ஸஹர் செய்தபின் உடனே தூங்கும் பழக்கமில்லாததால் குர்ஆனோடு அமர்ந்தாள்.

விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பது இடையூறாக இருந்தபோதும் எதுவும் சொல்லாமல் தலையனையில் முகம்புதைத்து படுத்திருந்தான்.

ஓதி முடித்ததும் எதேச்சையாக ரய்யானைப் பார்த்தவளின் பார்வை அவனைவிட்டு அகல மறுத்தது.

நேற்றிலிருந்து அவன் நடந்துகொண்ட விதம், அவன் பேச்சு, சிரிப்பு.. ஒவ்வொன்றாக நினைவில் மீண்டது. மனம் அவனோடு கதைபேச ஆரம்பித்தது.

'ஒருகாலத்தில் உன் அன்புக்கு எவ்வளவு ஏங்கியிருந்தேன். உன்னை எப்படியெல்லாம் நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்த்து திருமணம் செய்தேன். இப்போது என் எதிர்பார்ப்புகளின் மொத்த உருவமாக நீ நடமாடினாலும் எதையும் முழுமனதோடு ஏற்க முடியாமல் பண்ணிவிட்டாயே. ஏன் என்னை காயப்படுத்தினாய்?
இடையில் இந்த ஆறுமாதம் என் வாழ்க்கையிலிருந்து காணமல் போய்விடாதா?'

இன்றும் அவன்மேல் கொண்ட காதலை மனம் உணர்ந்திடவே கண்ணீர் முட்டியது அவளுக்கு. மனதின் கணம் தீரும்வரை அவன் மார்பில் சாய்ந்து அழத்தோன்றியது.

ரமழானின் மகிமையோ, அவள் திருமணமத்திற்கு முன்பு ஆசையோடு கேட்ட பிரார்த்தனைகளோ, திருமணத்திற்கு பிறகு ஆயிஷா கேட்ட பிரார்த்தனையோ அல்லது எல்லாமும் சேர்ந்தோ அவனை அவளிடம் கொண்டுவந்து சேர்த்துவிட்டது.

ஆனாலும் சில காயங்களை காலம்தான் ஆற்றி வைக்கவேண்டும். அந்த சிந்தனை முடிவில் தூங்கிப்போனாள்.

காலையில் மழை நின்றாலும் தூரல் நின்றபாடில்லை. 

மழை மீண்டும் வலுக்க முன்னர் போய்ச்சேர நினைத்து இருவரும் புறப்பட்டனர். மழையில் கிளம்பிப்போவது சுலைஹாவுக்கு ஒருசிறிதும் விருப்பமில்லை.

அவனோடு அவளது முதல் ஈருருளிப் பயணமிது.

ஊரைத்தாண்டும் வரையிலும் மழையில்லை. மெலிசான தூரலும், குளிர்காற்றும் மட்டுமே.

ஆனால் பிரதான வீதிக்கு வந்ததும் மழை கனமாக பொழிய ஆரம்பித்துவிட சிறிய பெட்டிக்கடையின் ஓரம் வண்டியை நிறுத்தி இருவரும் மழைக்காக ஒதுங்கினர்.

இவர்களை போலவே இன்னும் பலரும் அங்கே ஒதுங்கியிருந்தார்கள். நிற்பதற்கான இடம் குறுகியதாகவே காணப்பட்டாலும் மற்றவர்களும் அனுசரித்து இடம்கொடுத்தனர். கிடைத்த இடைவெளியில் நனையாமல் இருவரும் நின்றுகொண்டனர்.

பக்கத்தில் அனைவரும் ஆண்களாக இருக்க வேறுவழியின்றி ஹிக்மா ரய்யானை ஒட்டியே நின்றாள்.

அவனும் புரிந்துகொண்டு அவளுக்கு அசௌகரியம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டான்.

நேரம் செல்லச்செல்ல மழையின் உக்கிரமும் காற்றின் வேகமும் அதிகரிக்க ஒதுங்கி நின்றும் பிரயோசனமில்லை என்பதுபோல சாரலில் நனைந்து கொண்டிருந்தனர். முடிந்தவரை ஹிக்மா நனையாமல் மறைத்துநின்று ரய்யான் முழுவதும் நனைந்து விட்டிருந்தான்.

ஏற்கனவே உடல் வெடவெடுக்கு நின்றிருந்த ஹிக்மா இப்போது மிகவும் பலவீனமாக உணர்ந்தாள்.

தானாகவே ரய்யானின் முதுகை ஒட்டிநின்று இருபுறமும் அவனை இருக்கிப் பிடித்துக்கொண்டாள்.

ஒருமணி நேரம் மழை விடாமல் பொழிந்தது. இப்போது அவனைப் பிடித்துக் கொள்ளவும் உடலில் சக்தியில்லை. நோன்பு வேறு. அவளின் உடல் நடுக்கம் கூடிக்கொண்டே போவதை ரய்யானாலும் உணர முடிந்தது.

திரும்பிநின்று அவளை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். எதிர்ப்பு காட்டவும் அவளிடம் தெம்பில்லை. மார்போடு கைகளை கட்டிக்கொண்டு அவனோடு ஒன்றினாள்.

Continue Reading

You'll Also Like

150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
45.1K 1.1K 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே க...
94.6K 4.5K 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..
49.6K 2.1K 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் ப...