கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)

By ZaRo_Faz

79.7K 2.5K 187

கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள்... More

01-ஹீரோவின் வருகை
02-ஹீரோ ஹீரோயின் சந்திப்பு
03-அவனுடன் ஒர் பயணம்
04-குன்னூரில் சக்தி
06-தாராவுக்கு ட்ரீட்மென்ட்
07-சிவாவும் சக்தியும்
08-சக்தியே தாயாய்
09-தந்தையும் மகளும்
10-அநாதையாய் சில காலம்
11-தமிழின் சக்தி
12-குற்ற உணர்வில்
13-கண்ணீரில் சக்தி
14-காதலுக்காக
15
16-மீண்டும் ஒரு சந்திப்பு
17-பிரிவொன்றை சந்தித்தேன்
18-ஏன் என்னை பிரிந்தாய்
20-திக் திக்
19-இது என்ன மாயை
35-தாரிணி
21-
36-சந்திப்பு
37-புதிதாய் பிறந்தேன்
22-கல்லுக்குள் ஈரம்
38-சிவதாரிணி
39-தாரிணி
40-உயிரை பிரிந்தேன்
23-உறவை தேடி
41-மூன்றாம் டயரி
42-ஷ்ருதி
43-குற்றம் குற்றமே
24-முதல் காதல்
44-குற்றமா என் காதல்
45-மாற்றம் ஒன்றே மாறாதது
25-காதலே
46- சரத்
26-அழகான நாட்கள்
47-
27-அமேரிக்கா
48-சிந்துவுடன்
28-புது நண்பி
29-சில சந்திப்பு
30-நானும் அவளும்
31-பிரிவு
32
33-மோதல்
34-புகுந்த வீடு
49
50

05-கொடுத்த வாக்கு நிறைவேற்றல்

1.8K 66 3
By ZaRo_Faz


தாயின் குரல் கேற்கும் வரை நிம்மதியற்று தவித்தாள் சக்தி.... 'அம்மாவுக்கு உடம்பு ஏதும் சரியில்லயா...?' என்று யோசித்தவள் 'அப்டி எதாவதுன்னா அம்மாவுக்கு என்கிட்ட சொல்றதுக்கு என்ன...?'.

அக்கா வந்துருப்பாங்களோ என்று சகிதாவின் நினைவு வர அவளுக்கு அழைத்தாள் "ஹா சொல்லு சக்தி?" என்று பேசிய அந்த குரல் என்றுமில்லாதது போன்ற ஒரு குதூகலத்தோடு தெரிந்தது "ரொம்ப சந்தோசமாக பேசுற... என்ன விஷயம்க்கா?" என்று கேட்டதும் "அது வந்து எனக்கு சென்னைல டுடேய் பத்திரிகை ஆபீஸ்ல வேலை கிடைச்சிருக்கு சக்தி.. அதுவும் நம்ம பக்கத்து ஏரியாவுல உள்ள ப்ரான்ச்லயே ஜாயின் பன்னிக்க சொன்னாங்க அதான் சந்தோசமாக இருக்கேன்"

"வாவ் கன்ங்ராட்ஸ்க்கா... ஆமா சம்பளம் எப்டிக்கா?"

"சம்பளம் அச்சமில்லை பத்திரிகை ஆபீஸ்ல கொடுத்தத விட கம்மி தான் பட் இப்போதைக்கு இரண்டு நாள்ல வேலை கிடச்சதே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு.... ஆமா அம்மா எங்க? அவங்க கிட்ட கொடு நானே அவங்க கிட்ட சொல்றேன்" என்று கேட்டவளிடம் தயக்கத்தோடு

"அய்யோ அக்கா நான் குன்னூர்ல இருக்கேன் அம்மா வீட்ல தான்" என்று விட்டு அக்காவின் பதிலுக்கு காத்திருந்தாள்

"என்னடி சொல்ற இப்போ இருக்குற பண பிரச்சிணைல குன்னூர்லாம் சுற்றி பார்க்குறது அவசியமா.....?"
சகியின் குரலில் எரிச்சல் நன்றாகவே தெரிந்தது உடனே  "அய்யோ அக்கா ஊருலாம் சுற்றி பார்க்க வரலை நான் சொல்வேன்ல தாரான்னு ஒரு பொண்ணு.."என்று கேட்டதும் கொஞ்சம் யோசித்து விட்டு "ஏதோ காலைல ஜாகிங் பன்ன போறப்போ பேசுவியே அந்த  பிள்ளையவா சொல்ற?"

"அதே அதே அவ நேற்று வரலைன்னு அவங்க  அப்பா கிட்ட விசாரிச்சேன் அப்போ தான் சொன்னாங்க... தாராவுக்கு உடம்பு சரியில்லேன்னு....  அவள பார்த்துக்க ஆயிரம் வேலைக்காரங்க இருந்தா கூட அன்பு காட்ட யாருமில்லன்னு என்ன அவங்க தாராவ பார்த்துக்க முடியுமான்னு கேட்டார்" என்று முழுதும் சொல்லி முடிப்பதற்குள் "என்னடி முகத்துல எறிந்தாப்புல முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே  நீ கஷ்டப்பட்டு படிச்சது ஊர் வீட்டு புள்ளைங்கள மேய்க்கவா.... இல்லேல்ல....  நானும் அம்மாவும் எவ்ளோ வயித்த கட்டி உன்ன படிக்க வெச்சி இருக்கோம் நீ என்னடான்னா வீட்டு வேலைக்கு போயிட்ட.... இத பார் சக்தி இப்பவே வீட்டுக்கு வா நீ யாருக்கும் வேலைக்காரிய இருக்க நான் அனுமதிக்க மாட்டேன்..." என்று கத்த தொடங்கி விடவும் "அய்யோ அக்கா கொஞ்சம் பொறு..." என்று விட்டு "அக்கா புரிஞ்சிக்கோ க்கா தாரா குழந்தை அவளுக்கு இப்போ கேன்ஸர் வேற.... நம்ம பிள்ளைக்கு இப்டின்னா எப்டி இருக்கும் அது போல தான் தாராவும் அதோட தாரா ஒரு அம்மா இல்லாத குழந்தை வேறு.... அவங்க அப்பாவால தாய வாங்க முடியலை பட் பாசத்த ரொம்ப பணம் கொடுத்து வாங்கி அவங்க பொண்ணுக்கு கொடுத்து இருக்கார் அதோட நானே இங்க ராணியாட்டம் தான் இருக்கேன் பட்டன ப்ரெஸ் பன்னா  சாப்பாடு வரும்ன்னா பாறேன்"

"பட் இந்த மாதிரி ஆயா வேலை பார்த்த உன்ன எப்டிடி ஒருத்தனுக்கு கட்டி கொடுக்க முடியும் "

"அக்கா இத பாரு அப்பா வாங்கின கடன் 7 லட்சம் அண்ணா வாங்கினது எட்டு லட்சம் அவங்க இரண்டு பேரோட கடன்ல இது வரை ஒரு பைசா நாங்க கொடுக்கலை. உன்னால முடிஞ்ச அளவு நான்கு வருஷமா இரண்டு கடனுக்கும் வட்டி கட்டிட்டு தான் இருக்க.... இந்த கடன நாம கொடுக்க இந்த ஜென்மத்துல ஒரு வழியும் நமக்கு கிடைக்காது பட் தாராவோட அப்பா அந்த பதினைந்து லட்சத்தையும் கட்றதாக சொல்லி இருக்கார்..." என்று விட்டு மூச்சி விட்டாள்

அதிர்ச்சியோடு "என்னடி சொல்ற பதினைந்து லட்சத்தையும் கொடுப்பாறாமா..?" என்று கேட்டதும் "அது மட்டுமில்ல நம்ம சொந்த வீட்ல நாம வாடைகைக்கு இருக்குறது எவ்ளோ கஷ்டம்ன்னு நீ சொல்வல்ல... அந்த கஷ்டமும் நீங்க போகுது அதையும் மீட்டி தருவதாக சொன்னார்...... உன் கல்யாணத்துக்கு  வேற பொறுப்புன்னு சொல்டார்...." என்று கூறி முடித்து சகியின் பதிலுக்கு காத்திருந்தாள்

"என்னடி சொல்ற சரி அவர் சொன்னார்ன்னு நம்பி நீயும் போயிட்ட  புத்திசாலித்தனமாக நீங்க இதுலாம் பன்னுங்க அப்மறமா வருவேன்னு சொல்லி இருக்கலாமே...."

உடனே கோவமடைந்த சக்தி "நான் இந்த பணத்துக்காக எல்லாம் வரலை நான் வந்தது வெறும் தாரா மேல்ல உள்ள அன்புக்காக தான்....  அந்த அன்ப நான் எதுவும் எதிர்பார்த்து காமிக்கலை சகி.... அதோட இந்த அன்புல நமக்கு ஒரு சில நல்லது நடக்குதுன்னு நினைச்சிட்டு  சந்தோசமாக இரு.... வீட்டுக்கு போனதும் அம்மாகிட்ட சொல்லு நான் பேச சொன்னேன்னு இப்போ வைக்கிறேன்" என்று விட்டு கட் செய்தவள் தாராவின் அறைக்கு சென்று தாராவினை தூக்கி வந்து தன் கட்டிலில் வைத்து விட்டு அவளை அணைத்து கொண்டு தானும் உறங்கினாள்.... பயணம் செய்த சோர்வில் தூக்கம் அவளை அரவணைத்து கொண்டது.... என்றும் போல் இன்றி தாராவும் நன்றாக உறங்கினாள்... அவள் அணைத்து உறங்கும் முதல் பெண் ஸ்பரிஷம்.... சக்தியுடையது அல்லவா.... அதனாலே அவள் சக்தியுடன் நன்றாக ஒட்டி கொண்டாள் 

என்ன சோர்வோ சக்தி நன்றாக உறங்கி விட்டு மாலை ஆறுமணிக்கு எழுந்து கொண்டாள் அப்போதும் கூட தாரா உறங்கி கொண்டு தான் இருந்தாள். எனவே மெதுவாக எழுந்து ப்ரஷப் ஆகி  சமீதாவினை அழைத்து டீ எடுத்து வர சொன்னாள். அதன்படி அவளும் கொண்டு வர அதை குடித்து விட்டு    மொபைலை எடுத்து ஸ்க்ரீனை ஆன் செய்தவள் 'ஓஹ் அம்மா ஐந்து கால் பனனிருக்காங்களே' என்று முனுமுனுத்து விட்டு   ரீடயல் செய்தாள்

"அம்மா" என்று அழைத்தவள் கொஞ்சம் கலங்கினாள். சகிதாவும் சரி சக்தியும் சரி தேவகியினை விட்டு எங்கும் சென்றதில்லை....  பிறந்தது முதல் இன்று வரை சக்தி தேவகியை விட்டு பிரிந்து உறங்கியதில்லை. சகிதாவும் அப்படி தான் இருந்தாள். ஆனால் எப்போ குடும்ப சுமையுடன் வேலைக்கு போக ஆரம்பித்தாளோ அன்றே ஆபிஸ் மீட்டிங் அது இது என்று எங்காவது உறங்கி விடுவாள்... எங்காவது என்றாள் கண்டவர் வீட்டில் அல்ல ....  ஆனால் சக்தி தாயின் கையை விட்டாள் பாதையில் கூட சரிவர நடக்க தெரியாதவள்....

"என்னடா சக்தி  என்ன குரல் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு....".  என்று கேட்டு விட்டு தாயே "நீ கவலை பட என்னடா இருக்கு.... பல நல்லது நடக்கனும்ன்னா சில தியாகம் பன்னி தான் ஆகனும்...."

தாயின் பேச்சில் எதோ புரிபட தன் சோகத்தை தள்ளி வைத்து விட்டு "அம்மா தாராவோட அப்பா சென்னை போயிட்டார் வீட்டுக்கு வந்தாரா மா...?"

"வந்தாராவா....? அய்யோ அய்யோ  நேராக இங்க தான் வந்தார் வந்ததுமே வீட்டு ஓவ்னர கூப்டு அந்த இடத்துலயே ரெஜிஸ்டர் ஆபிஸ் ஆளுங்க கூட வந்துட்டாங்க உடனே ஸைன் வாங்கி   வீட்டோட பத்தரத்த கைல கொடுத்துட்டார் மா.... அப்பறம் பதினைந்து லட்சத்த கொடுத்து உங்கப்பாவும் அண்ணாவும் வாங்கி வெச்சிறுக்கூற கடனையும் தீர்த்துட்டார்.... அதான் நீ கால் பன்றப்ப ஆன்ஸ்வறே பன்னலை...."

"ம்மா....  அப்போ எல்லாம் நல்ல படியா நடந்திருச்சா ம்மா?"

"ஹம் ரொம்ப சந்தோசம் சக்தி அதோட மூத்த மக கல்யாணம் எப்போன்னு வேற கேட்டாரா... நான் சொன்னேன் 'பேசியாச்சு சார் கல்யாணம் பன்னி வைக்க  கொஞ்சம் கஷ்டம்ன்னு இப்போ ஆறு வருஷமா பின் தள்ளிட்டு இருக்கோம்...' ன்னு சொன்னதும் "நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்னிட்டு என் நம்பருக்கு இன்போம் பன்னுங்க...... இல்லேன்னா சக்திக்கு இன்போம் பன்னுங்க...." என்றான்  எந்த சலிப்புமின்றி

அவன் தேவகிக்கு அன்று கொடுத்த காடில் இருப்பது ஆபிஸ் நம்பர் அவன்  ஆபிஸில் இருந்தால் தான் அதை ஆன்ஸ்வர் செய்ய முடியும் ஆனால் சக்தியிடம் கொடுத்து இருப்பது அவனுடைய பர்ஸனல் நம்பர்.... அது எப்போதும் அவைலபுல் அதனால் 'நான் கொடுத்த நம்பருக்கு இன்போம் பன்னுங்க இல்லேன்னா சக்திக்கு இன்போம் பன்னுங்க' என்று கூறினான்
அவன் கொடுத்த வாக்கு படி அனைத்தும் செய்வான் என்பதில் தேவகிக்கு நம்பிக்கை தான்...

"அய்யோ தம்பி உங்களோட இந்த உதவிகளே ரொம்ப பெரிசு....   என் பொண்ணு படிச்ச நாள் தொட்டு இப்போ வரை கடன் அடைச்சே அவ சேர்த்து வெச்சிக்கலை... ஆனால் இனி அப்டியில்ல நீங்க  கடன கொடுத்துட்டதால என் பொண்ணு சம்பாதிச்சி அவ கல்யாணத்த நாங்க பன்னி வைக்கிறோம்... அதோட சக்தியும் உங்க கிட்ட வேலை பார்த்து சம்பாத்திச்சி அனுப்புவால்ல   அதுவே போதும்....  நீங்க கேட்டதுக்கு நன்றி சார்...." என்றதும் "கல்யாணத்துக்காவது சொல்வீங்களா?" என்று நக்கலோடு கேட்டதும் "என் பொண்ணுக்கு கல்யாணம் எடுக்க வழி இல்லாம நாங்க தவிச்ச தவிப்பு எங்களுக்கு தான் தெரியும் நீங்க தான் அத நிஜமாக்கி இருக்கீங்க அதனால நீங்க தான் முன்னின்று நடத்தனும் சார்...." என்றதும்"

"கண்டிப்பா நான் வர்றேன்" என்று விட்டு சென்றார் ம்மா நான் சொன்னது சரி தானே சக்தி இதற்கு மேல அந்த பையன் கிட்ட எதிர்பார்க்குறது பேராசைதனமில்லயா....?"

"ஆமாம்மா அவர் வாக்கு கொடுத்தார்ன்னு நாங்க அவர் கிட்ட அவ்ளோ எல்லாம் எடுக்க தேவையில்ல  தான் நானும் மாசம் கடைசில பணம் அனுப்புறேன் நீங்க அக்காவுக்கு தங்கநகைகள் எதாவது பன்னுங்க கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டி வைங்க அப்போ கல்யாணத்தப்ப எல்லாம் சரியா வரும் அதோட அம்மா அக்கா வந்துட்டாளா?"

"ஆமா டா அவ வந்துட்டா இப்போ தான் ஏதோ வேலை விஷயமாக வெளிய போனா....அவளுக்கும் நல்ல வேலை கிடைச்சிறுக்கு.... எல்லாம் நல்லதே நடக்குது சக்தி ரொம்ப நிம்மதியாக இருக்கு....."

எந்த கஷ்டத்தையும் தாங்கலாம் கடனில்லை எனில்...
கடன் என்பது சமைத்ததை கூட சாப்பிட விடாமல் தடுக்க கூடியது.
அடுத்த நாள் தொடர்ந்து சகியும் வேலைக்கு சென்றாள் எனவே சக்தியும் தாராவின் வீட்டில் வேலை செய்து கொண்டு தான் இருந்தாள்....  

அடுத்த நாள் தாரா காலையிலே "அக்கா நாங்க வெளிய போலாம்" என்று கேட்டு விட சக்திக்கு பயம்... கூட்டி போயி எதாவது முள் குத்தினா கூட இவங்க அப்பா என்ன உயிரோட விட மாட்டார் எனக்கு வேற இந்த ஊருல உள்ள மனுஷங்க வேற புதுசு... பாதைகள் வேற தெரியாது எனவே வெளியே கூட்டி போக பிடிக்காது "இல்ல தாரா அக்காவுக்கு தலையிடி.. நாங்க அப்பறமா போலாம்" என்றதும் தாராவும் எந்த அடம்பிடித்தலும் இன்றி கையை பற்றி இழுத்து கொண்டு தன் அறைக்கு சென்று அவளை கட்டிலில் அமர வைத்து பாம் பூசி விட்டாள்...  தாராவிடம் இருந்து இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்காத சக்தி ஒரு நொடி இமைக்க மறந்தாள்....  அதற்குள் பூசி முடித்த தாரா பாமினை வைத்து விட்டு சக்தியின் மடிக்குள் சுருண்டு கொண்டாள்.... உடனே அவளும் தாராவை அணைத்து கொண்டதும்   "அக்கா தலையிடி சரியானதும் நாம போலாம்" என்று விட்டு அவளை முத்தமிட்டதும் சக்தி தனக்குள் சிரித்தாள்

அப்பாவை போல் இப்போதே சின்னதாக பிஸினஸ் பன்றாள் தனக்கு வேண்டியதை  சாதிக்க  காலம் தாழ்த்தி காத்திருக்கிறாளே

சரி தான் பொய் தலை வலியில் எதற்கு பல மணி நேர நாடகம் என்று நேராக தன் அறைக்கு சென்று தன் மொபைலை  எடுத்து தாராவின் தந்தைக்கு அழைத்தாள்  இரண்டு ரிங்கிலே அழைப்பினை ஏற்றவன் "சொல்லுங்க" என்று ஒற்ற வார்த்தையில் கேட்டவனிடம் அனுமதி கேட்க்க தயங்கி நிற்கவும்      "சொல்லுங்க  சக்தி" என்று கொஞ்சம் மெதுவாக கேட்டதும்...

"இல்ல சார் தாரா வெளிய போலாம்ன்னு கூப்டறா கூட்டி போலாமா?" என்று கேட்டவளின் பயத்தை   சுக்குநூறாக உடைத்து எறிவது போன்று "யா கூட்டி போங்க..." என்று விட்டு அழைப்பை துண்டித்து விட...

"இவர் இங்க இருக்கும் போது எல்லாம் எவ்ளோ கெயாரா பார்த்துபார் பட் அங்க போனதும் மகளையே மறந்துடாரா...அவ்ளோ பணப்பைத்தயமா?"  என்று தனக்குள் முனுமுனுத்து கொண்டு "தாரா வாங்க போலாம்" என்று கூப்பிட்டு கொண்டு அழைத்து சென்றாள் கேட்டிற்கு வெளியாகியதும் ஒருவன் பின்னாடியே வருவதை கண்டு  பயத்தோடு தாராவினை தன்னோடு அணைத்து கொண்டாள் பணக்கார குழந்தைகளை கடத்தி  சென்று பணம்பரிக்கும் கதைகளை எவ்வளவு  கேள்விப்பட்டு இருக்கிறாள்... அதுவும் தாரா ஒன்றும் சுகதேகியும் அல்லவே அவளை கடத்துவது என்று வதட்டி எடுத்து விட்டாள் தாரா தாங்குவாளா.... இல்லை எனில் தாராவின் தந்தை தான் என்னை உயிருடன் விட்டு விடுவாரா.... ? பயத்தோடு தனக்குள் தாராவை இன்னும் இன்னும் புதைத்து கொண்டாள் தன் மொபைல் ரிங் ஆனதும் ஸ்க்ரீனை பார்த்தவள் தாராவினவ தந்தை என்று நம்பரை வைத்து புரிந்து கொண்டு ஆன்ஸ்வர் செய்ததுமே   "சக்தி.." என்று விட்டு மவுனித்தார் உடனே குழந்தையை கண்ட தாய் போன்று அவன் குரல் கேட்டதும் "சார் சார... இங்க.. யாரோ... என்ன... தாராவ..." என்று உலறிவிட்டு எதோ அவன் தான் உலறினான் போன்று "அய்யோ சார் இப்பவே நீங்க வாங்க" என்று சத்தமாக ஆனால் அழுகையோடு கத்தினாள் ஆனால் எதிர் பக்கம் அவன் எந்த பதற்றமும் இன்றி புன்னகைத்து விட்டு

"கம்மோன் கூல் சக்தி பின்னால வந்துட்டு இருக்குறது தியாகு தாராவோட போடிகார்ட் நீ ரிலேக்ஸா தாரா கூட போயிட்டு வா..." என்றதும் "என்ன சொல்றீங்க?" என்று அதிர்ச்சியோடு கேட்டாள் "நீ ரொம்ப பயந்துட்டேன்னு எனக்கு தோனிச்சி அதான் சொன்னேன். சோ பயப்படாம போ போகனும்ன்னு தாரா சொல்ற இடத்துக்கு போ... யேன்னா என் பார்வை எப்பவும் தாராவோட மேல்ல தான்" என்று விட்டு துண்டித்ததும் மொபைலை பர்ஸினுல் வைத்து விட்டு மார்பினை தொட்டு "அப்பாடா" என்று கூறி மூச்சி வாங்கினாள்.....

குழந்தை பெற்றவள் தான் தாய் என்று ஒன்றுமில்லை....
பாசம் காட்ட தெரிந்த அனைவரும் தாயே

Zahra Naseer

Continue Reading

You'll Also Like

9.1K 305 160
Any one can send messages through this privately .... send your feedbacks... you can even scold ... Visit part - 1 then follow the link ...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
4.5K 519 23
#2 "இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?" "அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்க...
10.6K 548 27
நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???