நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

49.6K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-2-
-3-
-4-
-5-
-6-
-7-
-8-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-28-

734 34 0
By safrisha

ரமழான் மாதமும் நெருங்கி வர அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இஸ்லாமிய நாட்காட்டி முறை பிறைக்கணக்கின் படியே கணக்கிடப்படுகிறது. முதலாம் பிறையுடன் மாதம் ஆரம்பித்து கடைசி தேய்பிறையுடன் முடிவடையும்.

ரமழான்மாதம் ஆரம்பமாகிறதா? நாளையிலிருந்து நோன்புநோற்பதா என்பதை தீர்மானிக்க கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழுவினர் ஒன்று கூடியிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள், விஷேடமாக கரையோர மாவட்டங்களில் வாழ்பவர்கள் தலைபிறையைக் கண்டால் தெரியப்படுத்துமாறு பிறைக்குழுவினரால் வேண்டப் பட்டிருந்தார்கள்.

வானோலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த பிறைக்குழுவின் கலந்துரையாடலுக்கு செவிசாய்த்திருந்தார் இஸ்மாயில்.

ஒருவாரத்திற்கு முன்பே ஹிக்மாவும், ரிஸ்னாவும் வீடு முழுவதும் கழுவித்துடைத்து சுத்தப்படுத்தி ரமழானை வரவேற்கத் தயாராகியிருந்தனர்.

"என்ன மாமா? இன்னைக்கு பிறை காணுவாங்கலா மாட்டாங்களா?"

"தெரியாது மகளே! இதுவரைக்கும் கண்டதுக்கான எந்த செய்தியுமில்ல"

"அப்ப நாளைக்கு நோன்பா இருக்காதோ?" என்றாள் ஹிக்மா ஏக்கத்தோடு

"அது சொல்லேலாதும்மா. இன்னும் டைமிருக்கு. பார்க்கலாம்" என்றதோடு சேர்த்து

"ரய்யான் சொன்னான் இன்னைக்கு அங்க தலை நோன்பாம். எப்படியும் இங்கயும் நோன்பாகத்தான் இருக்கும்"

ரய்யானின் பெயர் உச்சரிக்கப்பட்டதும் வேலையிருப்பாக கூறி ஹிக்மா சமலறைக்கு நழுவினாள்.

சில நிமிடங்களில் இஸ்மாயிலின் குரல் வீடெங்கும் ஒலித்தது.

"மகள் பிறை கண்டாச்சி. புத்தளம், கிண்ணியா ரெண்டெடத்துல கண்டிருக்காங்க. உறுதிப்படுத்திட்டாங்க. அல்ஹம்துலில்லாஹ்! நாளைக்கு நோன்பு!"

இஸ்மாயில் ரியாஸுடன் அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்காக சென்றுவிட ஹிக்மாவும், ரிஸ்னாவும் சஹர் உணவு தயாரிப்பதில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு ரமழானில் ஆயிஷா இருந்தபோது நடந்த நிகழ்வுகளை ரிஸ்னா ஹிக்மாவிடம் நினைவு கூர்ந்தபடியே சமையலில் ஈடுபட்டாள்.

ரிஸ்னாவால் குழந்தை வைத்துவிட்டு தராவீஹ் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு சென்றுவர முடியாததால் ஹிக்மாவும் வீட்டிலே தொழுது கொள்வதென முடிவெடுத்திருந்தாள்.

தராவீஹ் தொழுதுமுடித்து படுக்கையில் தலை வைத்ததுமே தூக்கம் கண்களை கவ்விக்கொண்டது.

"ஹிக்மா..!"

"எழும்புங்க..!"

"ஹிக்மா....!"

"டைமாச்சு...!"

"ஹிக்மா....!"

"நோன்பு பிடிக்கிறதில்லையா...!?"

"ஹிக்மா....!!"

"ஹிக்மா..............!!"

'இப்பதானே தலையை வைத்த மட்டும். அதுக்குள்ள மறுபடியென்ன?' புலம்பலோடு எழுந்தமர்ந்தாள்.

கண்ணை கசக்கியபடி போனின் திரையை பார்த்தவள் அதிர்ந்தாள். பதினேழு தவறிய அழைப்புகள்! ஸஹர் (நோன்பு ஆரம்பிக்கும் நேரம்) முடிய இன்னும் 20 நிமிடமேயிருந்தது!
'போனை மறந்து சைலன்டில் வைத்து விட்டோமோ. துளி சத்தங்கூட கேட்கவில்லையே'

அதற்குமேல் யோசித்து மீதமிருக்கும் நேரத்தையும் வீணடிக்காமல் போர்வையை விலக்கிவிட்டு குளியளறைக்கு விரைந்தாள்.

பல்துலக்கி முகம் கழுவுவதில் பத்துநிமிடம் கரைந்துவிட எஞ்சிய பத்துநிமிடத்தில் சாப்பிட்டு தேநீர் அருந்திமுடிய பள்ளியில் பஜ்ர் அதான் ஒலித்தது.

இஸ்மாயில் சிரித்துக்கொண்டே "கொஞ்சம் நேரத்துக்கு எழும்பியிருந்தா இப்படி பதறிப்பதறி சாப்பிட தேவையில்லயே"

"அலாம் வைக்க மறந்துட்டேன் மாமா. இன்ஷாள்ளாஹ் நாளைக்கு நேரத்துக்கு எழும்பிடுவேன்" என்று மாமனாரிடம் ஹிக்மா சமாளிக்க

"நேத்தே உங்க உம்மா கோல் பண்ணி, வழமைக்கும் நீங்க ஸஹர்செய்து நோன்பு பிடிக்கிற கதைய சொல்லிட்டாங்க ஹிக்மா" என்று சிரித்தவாறு ரிஸ்னா சொல்ல

தன் வண்டவாளம் தெரிந்து விட்டதையறிந்து 'ஹீஹிஹி..'என்று இளித்தாள்.

"அதென்னமோ தெரியலை datha. மத்த நாள்ல அலாம் வைக்காமலே தஹஜ்ஜுதிற்கு சரியா முழிப்பு வந்துருது. ஆனா நோன்புநாள்ல மட்டும் இடியே விழுந்தாலும் முழிப்பே வர்றதில்ல. சின்ன வயசிலிருந்தே இப்படித்தான். உம்மாகிட்ட ஏச்சுவாங்காம நோன்புபிடிச்ச நாளேயில்ல"

"கவலைப்படாதிங்க நான் ஏசாம எழுப்பி விடுறன். நீங்க கதவை உள்ள லொக்போடாம தூங்குங்க. போதும்"

"ஜஸாக்கள்ளாஹ் ஹைர் (Thanks) datha" ரிஸ்னாவை கட்டிக்கொள்ள

"இந்த சின்ன விஷியத்துக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்ல"

"உங்களுக்கு தெரியாது datha. எங்கவீட்ல நாலைந்து தடவை வந்து எழுப்புவாங்க. முழிப்பு வரலைன்னா 'நோன்பு பிடிக்கிறதுனா பிடி இல்லாட்டிப் போன்னு' அப்படியே விட்ருவாங்க"

"ஹா..ஹா.. உண்மையிலேயே பாவந்தான்"

"ஆமா datha" அப்பாவியாய் கூற

"ஹய்ய நான் உங்களை சொல்லலை. உங்க வீட்டிலுள்ளவங்க பாவம்னு சொன்னன்"

"Datha..! நீங்களுமா?"

"பின்ன. மூனே முக்கால்லருந்து உங்கள எழுப்புறன். நீங்க முழிக்கவேயில்ல. உங்க மொபைலுக்கும் நிறைய முறை கோல் எடுத்தன். ஆன்ஸருமில்ல. கதவு வேற உள்ள லொக் பண்ணியிருந்தீங்க. சரி கடைசியாக ஒருதடவை பேசிப்பார்க்கலாம் இல்லாட்டி அப்படியே விட்ருவோம்னு நினைச்சித்தான் வந்து பேசினேன். நல்லவேளை எழும்பி வந்துட்டிங்க"

"உண்மையாவா? நல்லவேளை முழிப்பு வந்தது"

"இன்ஷாள்ளாஹ்! கொஞ்சம் சீக்கிரமே தூங்கினா எப்படியும் முழிப்பு வந்திடும்"

"ஹும்ம்.. டெய்லி அப்படி நினைச்சிட்டுத்தான் தூங்கறேன். ஆனால் அலாம் சத்தமோ போன் சத்தமோ எதுமே கேட்கவே மாட்டிங்குதே"

"வேணும்னா ஒரு தடவை ஈ.என்.டீ டொக்டரை கன்ஸல்ட் பண்ணிப் பார்க்கலாமா?" சிரித்துக்கொண்டே கேட்க

"போங்க datha. உங்களுக்கு நக்கல்"

அப்படியே ரமழானின் முதல் பத்து நாட்களும் கண்ணை மூடிக்கொண்டு பறந்தன.

பாடசாலை விடுமுறை என்பதால் மதியம்வரை பெரிதாக வேலை ஒன்றுமில்லை. தொழுகை, ஓதல் என்று மனதுக்கு இதமாக பொழுது கழிந்தது.

அஸர் தொழுகை முடிந்தால் இப்தாருக்கென (நோன்பு திறக்க) சகோதரிகள் இருவரும் சமயலறையை உருட்டிப் பிரட்டிக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் இப்தாருக்கென்று இணையத்தில் புதுப்புது சமையல் குறிப்புகள் தேடி வெற்றிகரமாக சமைத்து பெருமைபட்டுக் கொள்வார்கள்.

அதுவரை இஸ்மாயில் ரீஹாவை பார்த்துக்கொள்வார்.

பெண் பிள்ளை இல்லையென்ற ஏக்கம் இஸ்மாயில்-ஆயிஷா இருவருக்குமே இருந்தது.

இப்போது பெற்றமகள் போன்று மருமகள்மார் அமைந்தும் அவர்களுடன் வாழ மனைவிக்கு கொடுத்து வைக்கவில்லை என அவ்வப்போது இஸ்மாயிலுக்கு கவலையாக இருக்கும்.

நோன்பு திறந்தபிறகு இஷாவரை ஓய்வெடுத்துவிட்டு ஆண்களிருவரும் பள்ளிக்கு செல்வார்கள். ஹிக்மா வீட்டில் தொழுது கொள்வாள். பள்ளியிலிருந்து ஆண்கள் வந்ததும் அனைவரும் ஒன்றாகவே இரவு உணவருந்துவார்கள்.

மறுபடியும் மூன்றரை மணிக்கு ஸஹர்செய்ய எழவேண்டு என்பதால் எப்படியும் ஒன்பது மணிக்குள் உறங்கச்சென்று விடுவார்கள்.

ஆனால் ஹிக்மா ஒருநாள்கூட மூன்றரை மணியை கண்ணால் கண்டதில்லை. ஒவ்வொரு நாளும் ரிஸ்னாவுக்கு ஹிக்மாவை எழுப்பிவிடுவது பெரும் சோதனைதான்.

இரண்டாம் பத்து தொடங்கியதும் ஹிக்மா தாய்வீட்டுக்கு சென்றாள்.

இம்முறை யாரும் அவளிடம் ரய்யானைப் பற்றி விசாரிக்கவில்லை.

ஆனால் அவர்கள் பேச்சில் தெரியவந்தது என்னவெனில் ரய்யான் அவளது உம்மா வாப்பாவிடம் கதைக்கிறான். இதற்குரிய அனைத்துப் பெருமையும் புகழும் அவளது அருமை தம்பி ஹிஜாஸையே சேரும்.

ஹிக்மாவும் வீட்டிலிருப்பதோடு எலோருக்கும் 'பெமிலி இப்தார்' வைக்கலாமென தீர்மானித்தனர் அவளை பெற்றவர்கள். பெரிய அளவில் இல்லாமல் ஊரிலுள்ள உறவினர்களை மட்டும் அழைத்தார்கள்.

நோன்புக்கஞ்சி மட்டும் பள்ளியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் ஏனைய ஆகாரங்களையும், பானங்களையும் அனைவரும் சேர்ந்து வீட்டிலே தயார் செய்வதுகொள்வதாக திட்டமிட்டனர்.

பகல்பொழுது நெருங்கும் முன்னரே ஹிக்மாவின் மாமிமார், சித்தி, பெரியம்மா அனைவரும் குடும்பம் சகிதம் வந்து சேர்ந்தனர்.

அவளது பெரியப்பாவும், வாப்பாவும் சேர்ந்து சமோசாவை பொறுப்பெடுக்க, மூத்த மாமா பெட்டிஸ், இளைய மாமா கட்லட் என ஹோட்டல் கணக்காக வேலை தடல்புடலாக நடந்தது.

அன்றையநாள் பண்டிகைபோல கலகலவென இருந்தது.

ஹிஜாஸ் ஆண்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் கிண்டலடித்தபடி அனைத்தையும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தான்.

"மாமா! எங்கட நாநா சொல்றதெல்லாம் கணக்கெடுக்க வேணாம். அவனுக்கு வாயால வடைசுட மட்டுந்தான் தெரியும். வடைசட்டி..!" ஹிம்னா ஹிஜாஸுக்கு பட்டப்பெயர் சொல்லி சிரித்தாள்.

"இவ பெரிய எக்ஸ்பேர்ட். எனக்கு சொல்ல வந்துட்டா. இன்னுமும் ஒரு தேங்காய உடைக்கத் தெரியாது " பதிலடி கொடுத்ததோடு விடாமல் அவளது பொனிடைல் பேண்ட்டை உருவினான்.

"எறும மாட்டு லூசு நாநா---"
அண்ணனை திட்டுவதற்காக வாயைத் திறக்கும்போதே

"ஹிம்னா! இந்த நோன்பு நாள்லயாவது கொஞ்சம் வாயைக் கையைப் பேணி ஒழுங்கா இருக்கிறதில்லையா?" சுலைஹா கண்டித்தார்.

"நீங்க எனக்கு மட்டும் ஏசுங்க. அவனுக்கு ஒன்னும் சொல்லிறாதிங்க. அவன் என்ன செஞ்சான்னு தெரியுமா? கட்டின முடியை கலட்டி விட்டுட்டான்" அவிழ்ந்த கூந்தலைக்காட்டி முறையிட

"ஓ! அதென்ன பார்க்க லட்சணமாவா இருந்திச்சு? ஒழுங்கா எண்ணெய் பூசி வாரிப்பிண்ணிக் கட்டாம தும்புத்தடி மாதிரி ஆட்டிட்டு திறியிறது ஒரு அழகா?"

ஹிம்னாவுக்கு அன்னை திட்டுவதுகூட பிரச்சினையில்லை. ஆனால் அதைப்பார்த்து ஹிஜாஸ் நக்கலாக சிரிப்பதைத்தான் பொறுக்க முடியவில்லை.

"உம்மா!" என சினுங்கியபடி வாயினுள் அண்ணனை மென்று தின்றுகொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

ஹிக்மாதான் தங்கையை சமாதானம்செய்து மறுபடியும் கூந்தலைசீவி அழகாக கட்டிவிட்டாள்.

சமையல் என்ற பெயரில் அனைவரும் கதையளந்து கொண்டும் கேலி கிண்டலுமாக பொழுது சுவாரசியமாக கழிந்தது.

நீண்ட நாளைக்கு பிறகு ஹிக்மா தன் மனக்கவலையை மறந்து மனமார்ந்த மகிழ்வோடு நடமாடினாள்.

ஆனால் அஸர் தொழுகைக்கு பிறகு ரய்யானின் அழைப்பால் அவையெல்லாம் மாறிப்போனது.

அனைவரும் ஒன்றாக சேர்ந்திருக்க பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை அனைவருடனும் கதைத்தான்.

அவன் யாரோடு வேண்டுமானாலும் கதைக்கட்டும். என்னைவிட்டால் போதுமென்று முடிந்தவரை தன்னை ஏதாவது வேலையில் ஈடுபடுத்திக் கொண்டாள் ஹிக்மா.

அப்படி இலகுவில் அவளை தப்பிக்க விடுவானா? அனைவர் முன்னிலையிலும் ஹிக்மாவால் அவனை தவிர்க்கமுடியாது. எனவே இன்று எப்படியும் பேசி விடுவது என்பதுதான் அவனது திட்டமே!

Continue Reading

You'll Also Like

94.6K 4.5K 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
23K 907 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
365K 15.9K 85
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல...