நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

49.6K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-2-
-3-
-4-
-5-
-6-
-7-
-8-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-22-

705 39 2
By safrisha

ரய்யானின் குரூர முகத்தை ஏற்கனவே ஹிக்மா கண்கூடாக கண்டிருப்பதால் அவனின் எதிர்வினை எப்படியிருக்குமோ என்ற பயத்திலே அவனிடம் வாய்திறக்க பயமாக இருந்தது.

ஆனால் எதிர்காலத்தை நினைக்கையில் அது அவனை காட்டிலும் பயமாய் இருந்தது. ஆனால் எப்படியும் பேசி விடுவதென்று அன்று பிடிவாதமாக காத்திருந்தாள்.

எனினும் இஸ்மாயில் ஹிக்மாவை முந்திக்கொண்டார்.

இருமகன்களிடமும் ஆயிஷாவின் பெயரில் மேலும் சில ஸதகாக்களை வழங்குவதற்காக கலந்துரையாடி விட்டு

"ரய்யான்! நீயும் ரியாஸோட சேர்ந்து கடையை நடத்தலாமே. இனியும் இந்த வெளிநாட்டு வேலையெல்லாம் தேவையில்லை" என்றார்.

"இல்ல வாப்பா. வேலைய விடுறதா இருந்தாலும் அதுக்கான போர்மலிடிஸ் முடிக்க நான் மறுபடி போகத்தான் வேணும் "

"சரி அதை முடிச்சிட்டு வந்து நாநாவோட சேர்ந்து பிஸினஸ பார்த்துக்கலாமே. அதுதானே உங்க உம்மாவோட ஆசையும்"

"சரி வாப்பா. இன்ஷாள்ளாஹ் அப்படியே செய்றன்"

மறுப்பின்றி உடனே ரய்யான் ஒத்துக்கொண்டதில் மகிழ்ந்து போனார் இஸ்மாயில்.

இடையில் ரியாஸுக்கு அழைப்பொன்று வர பேசுவதற்காக அவன் எழுந்து சென்றதும் இஸ்மாயில்

"ரய்யான்! உன்கிட்ட இன்னொரு விஷியமும் சொல்ல வேண்டியிருக்கு"

"என்ன வாப்பா?"

"நீயும் ஹிக்மாவும்---" என ஆரம்பிக்கும் போதே

"வாப்பா ப்ளீஸ்! இப்ப அதப்பத்தி எதுவும் பேசவேணாம்"

"முதல் பொறுமையா சொல்றதைக் கேளு மகன்"

"நான் எதையும் கேட்கத் தயாரில்லை. அதைப்பத்தி ஏற்கனவே நான் முடிவு பண்ணிட்டன்" ரய்யான் பேச்சை மறுக்கவும் இஸ்மாயில் பொறுமையிழந்தார்.

"உன்னோட முடிவு என்னன்னு நல்லாவே தெரியும். ஆனா அது எப்பவும் நடக்காது. ஹிக்மா இந்த வீட்டு மருமகள். எப்பவும் எங்கட மருமகளா அவள் இங்கதான் இருப்பா. சொல்லிட்டன்"

"அப்படியா! சரி அப்படியே அவ இருக்கட்டும். நான் போறேன். எனக்கு அவ மூஞ்சிய பார்த்துட்டு இங்கே இருக்க முடியாது "

"ரய்யான் அவசரப்படுற. எதையும் முழுசா கேட்காம--"

"எனக்கு எதையும் கேட்கவும் தேவையில்லை. தெரியவும் தேவையில்லை" என்று அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான்.

ரியாஸ் வந்து பார்க்க இஸ்மாயில் தொங்கிய முகத்துடன் இருப்பதை பார்த்து

"என்ன நடந்திச்சு வாப்பா? தம்பி எங்க?"

"ஒன்றுமில்லை. வா உள்ள போவம் வெளில பனியா இருக்கு"

தந்தை சொல்ல விரும்பவில்லை என்றுணர்ந்து ரியாஸ் அந்தப் பேச்சை கைவிட்டான்.

இதையறியாமல் ரய்யானுக்காக காத்திருந்த ஹிக்மா அவன் அறையினுள் நுழைந்ததும்

"நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" என ஆரம்பிக்க ஏற்கனவே அவள் மீது ஏக கடுப்புடன் வந்தவன்

"முதல்ல உம்மாவ கைக்குள்ள போட்டுட்டு நினைச்சதெல்லாம் செஞ்ச. இப்ப வாப்பாவையும் கைக்குள்ள போட்டு இங்கயே நிரந்தரமா இருந்திட திட்டம் போடுறியா?"

இன்னொரு புயலடிப்பதற்கு அறிகுறிகள் அனைத்தும் தெரிந்தாலும் தான் அவனிடம் சொல்ல வேண்டிய தேவையிருப்பதால் அவன் சொல்வதைப் பொருட்படுத்தாது

"மாமி என்கிட்ட கடைசி வரைக்கும் ரெண்டு பேரும் சேர்ந்து இரு--"

"ஓஹ்ஹோ!!! இப்ப உம்மாவும் இல்லதானே. எது சொன்னாலும் நம்பிருவாங்க. அதுதான் எங்க வாப்பாவ நம்ப வெச்சாச்சு. இப்ப அதே கதைய எங்கிட்ட சொல்லி நானும் அதை நம்பி உன்னை இங்கயே வெச்சிக்கனும். அதானே ப்ளான்!!!"

பேசவிடாமல் அவன் கத்தவும் 'ப்ளான்' என்ற வார்த்தையில் உடைந்தாள் ஹிக்மா. இனி என்னசொல்லியும் அவன் செவிகளுக்குள் அது நுழையப்போவதில்லை.

கண்ணீருடன் அடங்கி அவள் அமர்ந்துவிட்ட போதும் அவன் விடவில்லை.

"எனக்கு அப்பவே தெரியும். உம்மா வீடு, கடைன்னு சொத்தைப்பத்தி பேசும்போதே நீ அடுத்து ஏதாவது பண்ணி இங்கேயே இருக்கத் திட்டம் போடுவனு"

ஹிக்மா பேச்சற்று உறைந்தாள்.

'கனவில் கூட கற்பனை செய்யாததை எல்லாம் நான் திட்டத்தோடு செய்வதாக எப்படி இவனாள் சொல்ல முடிகிறது'

உடனே எழுந்தவள் விறுவிறுவென இஸ்மாயிலை நாடிச்சென்றாள். இஸ்மாயிலை கண்டதும் ஹிக்மாவுக்கு அடக்கி வைத்த கண்ணீர் மளமளவென வழிந்தது.

"மன்னிச்சிகோங்க மாமா! என்னால உங்களுக்கு தந்த வாக்கை காப்பத்த முடியாது. அள்ளாஹ்வுக்காக மன்னிச்சிடுங்க. இனி என்னால இங்க இருக்க முடியாது" என அழுகயினூடு தன் நிலைமையை விளக்கினாள்.

ரய்யான் என்ன செய்திருப்பான் என்பது இஸ்மாயிலுக்கு தெரியும். ஹிக்மாவை முதலில் அமர வைத்தார்.

"நீ எவ்வளவோ பொறுமையா இருந்துட்டமா. உன்னை இன்னும் கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்ல. உன் முடிவை நான் தடுக்கவும் எனக்கு உரிமையில்ல. ஆனாலும் உன்னைப்போல ஒரு தங்கமானவளோட வாழ அவனுக்கு குடுத்து வைக்கலயே. ஆயிஷாட கடைசி மூச்சு வரைக்கும் உன்னைப்பத்தி தான் சொல்லிட்டிருந்தா. நீ எப்பவும் இந்த வீட்டு மருமகளாவே இருக்கத்தான் ஆசைபட்டா. ஆனா என்னசெய்ய? எல்லாம் அள்ளாஹ் நாடியபடிதானே நடக்கும்"

இஸ்மாயிலுக்கு பேசப்பேச குரலும், மனமும் சோர்ந்து போயின.

"மாமா உங்களை கஷ்டப்படுத்தனும் நினைக்கல. நீங்களும் எனக்கு வாப்பா மாதிரிதான். சேர்ந்து வாழுறதுல எனக்கு எந்த பிரச்சினையுமில்ல. மாமிக்காக மாமிட ஆசைக்காக நான் இருப்பன். ஆனா உங்க மகனுக்கு விருப்பமில்லாம எப்படி மாமா?"

ரியாஸுக்கும் அவன் மனைவிக்கு ரய்யான்-ஹிக்மா இடையே சுமுகமான உறவு இல்லையென்பது அவர்களது நடவடிக்கைகளில் மூலம் சிறிதளவு அறிந்திருப்பினும் இவ்வளவு தூரம் பிரச்சினையாக விஸ்வரூபம் எடுக்குமென நினைத்திருக்கவில்லை.

"ரியாஸ்! அவனை கூப்பிடு" இஸ்மாயில் உத்தரவிட

ரியாஸ் அழைத்ததும் கீழே இறங்கி வந்தான் ரய்யான். வரும்போதே ஹிக்மாவை முறைத்துக்கொண்டே வந்தான்.

'அடுத்த ட்ராமா நடந்திட்டு இருக்கு போல' என நினைத்துக் கொண்டான்.

"வாப்பா இவ என்ன சொல்லியிருப்பான்னு எனக்கு நல்லாவே தெரியும். நம்பாதீங்க. எல்லாமே பொ--"

"நான் உன்கிட்ட எதுவும் கேட்கலை. முதல் இப்படி உட்காரு. அடுத்தவங்க சொல்ல வர்றதையும் காது குடுத்து கேளு. அதைத்தானே மௌத்தாக முந்தின நாள் உங்க உம்மாவும் கிளிப்பிள்ளைக்கு சொல்றமாதிரி சொன்னா"

அதன்பின் ரய்யான் கப்சிப் ஆகிவிட இஸ்மாயில் தொடர்ந்தார்.

"ரய்யான்! நாங்க ஒன்னும் விசாரிக்காம கொள்ளாம உனக்கு கலியாணம் பண்ணி வைக்கல. விசாரிச்சு நல்ல குடும்பம், அருமையான புள்ளைனு தெரிஞ்ச பிறகுதான் நாங்களே அவங்களைத் தேடி போனோம். எங்கட வசதிய பார்த்து அவங்கதான் தயங்கினாங்க. உங்க உம்மாதான் இந்த புள்ளைதான் எம்மகனுக்கு மருமகளா வேணும்னு பிடிவாதமா இருந்து கலியாணம் பண்ணி வச்சா.
உங்கிட்ட கேட்கும்போது யாரைச் சொன்னாலும் பண்ணிக்கிறேனு நீ சம்மதிச்ச பிறகுதானே எல்லாம் செய்தோம். அப்ப ஏதோ உம்மாவுக்காக சம்மதிக்கிறேனு நம்ப வச்சிட்டு உம்மாட ஆசையக்கூட நிறைவேத்த மனசில்லாத நீ ஹிக்மாவை குறை சொல்றியா?!"

"நீங்க என்ன நடக்குதுன்னு தெரியாம பேசுறீங்க வாப்பா. அவ எல்லாரையும் ஏமாத்திட்---"

"போதும்! இனி ஒரு பேச்சு அவளைப்பத்தி தவறாப்பேசாத.
ஏற்கனவே ஒருதடவை உன் பிடிவாதத்தினால இந்த வீட்ல உள்ளவங்களோட நிம்மதி சிதைஞ்சு போனதை மறந்துடாதே. திரும்பவும் அதே பிழைய செய்து எங்களை வருத்தப்பட வைக்காத ரய்யான்!" இஸ்மாயில் தவிர்க்க முடியாமல் பேசிவிட ரய்யான் வாய் அடங்கிப்போனது.

ஹிக்மா மாமனார் எதைச் சொல்கிறார் என்பதே புரியாமல் பார்த்திருந்தாள்.

"எனக்கும் ஆயிஷாக்கும் மருமகளா ஹிக்மா இந்த வீட்லதான் இருப்பா!" என்று இஸ்மாயில் சொன்னதும்

"உங்களுக்கு பெத்த மகனைவிட வந்த மருமகள்தானே முக்கியம். சரி! அவ மருமகள். இங்கயே இருக்கட்டும்! நான் சொந்த மகன்தானே. நான் எங்கயோ போறேன்!" அவனும் முடிவை சொன்னதோடு அல்லாமல் ஹிக்மாவை தீப்பார்வை பார்த்தபடி கடந்து போனான்.

'கூடிய விரைவில் நீ ஹிக்மாவை புரிந்து கொள்வாய் மகனே! உன் தவறையும் உணர்வாய்! யா அள்ளாஹ்! நீதான் இவனுக்கு நல்ல வழியை காட்டனும்!' என அமைதியாக இருந்தார் இஸ்மாயில்.

'தன் வாழ்க்கையில் என்னதான் நடக்கிறது? இது இன்னும் எவ்வளவு தூரம் செல்லுமோ?' புரியாமல் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் ஹிக்மா.

ரியாஸ் மனைவியிடம் கண்ணைக்காட்ட உடனே
ரிஸ்னா ஹிக்மாவிடம் சென்று அவளருகில் அமர்ந்து அவளைப் பற்றிக்கொண்டு ஆறுதலளித்தாள்.

ஹிக்மாவிடம் இஸ்மாயில் மகனுக்காக மன்னிப்பு வேண்டினார்.

"என்னை மன்னிச்சிரும்மா இவ்வளவு நடந்த பிறகும் உன்னை இங்கேயே இருந்திடுனு சொல்ல எனக்கு எந்த உரிமையுமில்ல. ஆனால் ஆயிஷா கடைசியாக எங்கிட்ட பேசினதுதான் என் மனசுல பெரும் சுமையா இருக்கு. அதை நிறைவேத்தாம விட்டுட்டேன்னா அவ என்மேல வெச்ச நம்பிக்கைக்கும், அன்புக்கும் அர்த்தமில்லாம போயிடும். தயவுசெய்து இன்னும் கொஞ்சநாள் எனக்காக இங்கேயே இருக்க முடியுமாம்மா?"

இஸ்மாயில் கெஞ்சி கேட்டுக்கொள்ள அவளாலும் அவரை பேச்சை மீறி செயல்பட மனம்வரவில்லை. எனவே அரைமனதாய் சம்மதம் தெரிவித்தாள்.

Thanks for reading!
If u like this story pls support me with ur votes and comments

Continue Reading

You'll Also Like

95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
62.6K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
94.6K 4.5K 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..