நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

52.1K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-2-
-3-
-4-
-5-
-6-
-7-
-8-
-9-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-10-

887 39 0
By safrisha

சுலைஹாவும் இரண்டு பெண்பிள்ளைகளின் அன்னை. எனவே சபியாவின் செய்தி அவரை யோசனையில் ஆழ்த்தியது.

"ஏன் அவங்க சபியாவ வேணாம்னுட்டாங்க? "

"மாப்பிள்ளைக்கு ஒல்லியான புள்ளதான் வேணுமாம். அதனால வேணானுட்டாராம் "

"ஏன் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வரல்லயோ? அவருக்கு விருப்பம் இல்லாட்டி எதுக்கு சரின்னு சொல்லனும்?"

"அதெல்லாம் வந்துபார்த்துட்டு வடை, ரோல்ஸ், கட்லட்னு எல்லாத்தயும் நல்லா முழுங்கிட்டுபோய்
பொண்ண பிடிச்சிருக்குனு சொல்லி நம்பிக்கை குடுத்துட்டு. சபியா வீட்டில சந்தோஷமா கலியாணத்துக்கு ரெடியாகிட்டு இருக்குறப்ப போனவீக் மாப்பிள்ளையோட வாப்பா புரோக்கரையும் கூட்டிட்டுவந்து பொண்ணு கொஞ்சம் குண்டாயிருக்கு, கலரும் குறைவு அதனால மகனுக்கு கொஞ்சம் விருப்பமில்லாத மாதிரி.
அப்படியே இந்தகலியாணம் நடக்கனுமுன்னா அஞ்சி லட்சம் காசு தரவேணும்னு டீசன்ட் பிச்சை கேட்டிருக்காரு..!"

"எல்லாம் ஏதோவொரு நல்லதுக்குத்தான். இப்பவே அவங்க குணம் தெரிஞ்சிருச்சே. பின்னாடி டிவோர்ஸ் அதிதுன்னு சீரழியாம அள்ளாஹ்தஆலா இத்தோட பாதுகாத்துட்டானே. ஆனாலும் பாவம் அவங்களுக்கு எவ்வளவு கவலையா இருக்கும். அள்ளாஹ்தான் அவங்களுக்கு பொறுமைய குடுக்கனும்" வருத்தத்தோடு சுலைஹா கூற

"ஏன்மா இந்த சமுதாயம் இப்படி இருக்கு. எல்லோருமே அழகுக்கும் வெள்ளைத் தோளுக்குமே அலையுறாங்க யாருமே மார்க்கப் பற்றையோ, குணத்தையோ பார்க்குறதில்ல. அப்ப வெள்ளையா ஒல்லியான அழகான வசதியா உள்ள புள்ளைகளுக்கு மட்டுந்தான் இந்த உலகத்துல கலியாணம் நடக்கனுமா?! மத்தவங்களை அள்ளாஹ் சும்மா படைச்சானா?!!" சமுதாயத்தின் மேல் கோபமும் வெறுப்பும் மேலோங்க அதை வார்த்தைகளில் காட்டினாள் ஹிக்மா.

"அப்படியில்ல ஹிக்மா! அள்ளாஹுத்தாலா எல்லாரையும் ஜோடியாத்தான் படைச்சிருக்கான். அந்தந்த ஜோடி சந்திக்கும்போது இந்த கறுப்பு வெள்ளை; உயரம் குட்டை; கொழுப்ப மெலிவு; வசதி வசதியில்ல.. எந்தக் காரணமும் அவங்கள தடுக்காது. அவங்க ரெண்டு பேருந்தான் சேரனும்னு எழுத்து இருந்தா அள்ளாஹ் விதிச்ச நேரத்துல அது நடக்கும் "

"நீங்க சொல்றது சரிதான்மா. ஆனாலும் இந்த பொண்ணு பார்க்குறது பேசிவைக்கிறது இந்தமாறி டைம்ல அப்படி காரணம் சொல்லித்தானே காயப்படுத்துறாங்க. அதுமட்டுமா?! சிலபேர் அந்த காரணத்தை சுட்டிக்காட்டி காசு நகை வீடுவாசல் சொத்தை வச்சி பேரம்பேசுறாங்களே. நினைக்கவே கேவலமா இருக்குமா. என்னசாதி மனுசங்க" ஹிக்மா அருவருப்பாய் மொழிந்தாள்.

'தான் ஒன்றும் பெரிய அழகி இல்லைதான். ஆனால் அதற்காக தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள யாராவது பேரம்பேசி வந்தால் நிச்சயமாக எனக்கு அப்படி பட்டவன் தேவையே இல்லை' என தீர்மானத்தவள் அதை அன்னையிடமும் வெளிப்படையாக சொல்லி விட்டாள்.

***

மறுநாள் காலை பத்து மணிக்கு இலங்கை மண்ணை முத்தமிட்டு ஓய்தது அந்த விமானம்.

விமானநிலையத்தில் சோதனைகள் அனைத்தும் தேவையற்ற அசௌகரியங்கள் இன்றி முடிந்துவிட வெளியில் வந்ததும் டாக்ஸி பிடித்து ஊரை நோக்கி பயணமானான்.

ரய்யானின் எண்ண அலைகள் மட்டும் அவன் தாயாரை சுற்றியே வந்தன.

அவன் பார்த்தவரையில் ஆயிஷா ஒருநாள் கூட காய்ச்சல் தலைவலி என்று படுத்துக் கொண்டது கிடையாது.

சிலசமயம் காலநிலை மாற்றம், பனிப்பொழிவு என்றால் தடிமல் பிடிக்கும். அதற்கும் அவர் மருத்துவரை நாடியதே இல்லை. ஆவி பிடித்துப் பார்ப்பார். அதற்கும் குணமாகவில்லை என்றால் சில கைமருந்துகளை செய்வார். அள்ளாஹ்வின் கிருபையால் இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும்.

வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லாததால் அனைத்து வீட்டு வேலைகளையும் ஆயிஷாவுக்கு தனியாளாகவே செய்து பழக்கமாகி விட்டிருந்தது.

ஆசிரியை என்பதால் அதிகாலையில் எழுந்தது முதல் ஏழரை மணிக்கு பாடசாலைக்கு கிளம்பிச் செல்லும் வரையிலும் காலில் சக்கரம் கட்டியதுபோல அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்து முடித்து விடுவார்.

கணவன், பிள்ளைகள் என யாருக்கும் எந்தக் குறையும் வைத்ததில்லை.

இஸ்மாயிலுக்கு ஆயிஷா சிரமப்பட்டு ஆசிரியப்பணி புரிவது ஆரம்பத்தில் இருந்தே விருப்பமில்லை.

ஆயிஷாவுக்கோ கற்பித்தல் என்றால் உயிர். இருந்தும் இஸ்மாயில் அடிக்கடி தொழிலை விட்டுவிடும்படி ஆலசோனை கூறுவார். சிலசமயம் வற்புறுத்துவார்.

கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு பதினெட்டு வருட ஆசிரியசேவையை பூர்த்தி செய்தபின் ஆயிஷா பணியிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார்.

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னும் வீட்டில் ஓய்வாக இருக்கவில்லை. ஏதாவதொன்றை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்.

எப்போதும் மறையாத புன்னகையுடனே இருக்கும் ஆயிஷாவின் முகம் ரய்யானின் கண்முன் வந்துபோனது.

ரியாஸ் ஓரளவுக்கு வளர்ந்ததும் வீட்டில் பெண்பிள்ளை இல்லாமல் அன்னை தனியாளாய் சிரமப்படுவதை உணர்ந்து தாயாருக்கு தன்னால் முடிந்தவரை உதவுவான். ஆனால் ரய்யான் அப்படியில்லை. துடிப்பானவன் எப்போதும் ஆயிஷாவுக்கு ஒருவேலைக்கு இரண்டு வேலை வைத்துவிடுவான்.

ஆனாலும் ஆயிஷா இரண்டு மகன்கள் மீதும் சமமாகவே அன்பு செலுத்தினார். இரண்டு பேரையும் இரண்டு கண்கள்போல கருதினார்.

நான்கு மணிநேரத்தின் பின் அவனது வீட்டுமுற்றதில் நின்றது வண்டி.

வீட்டுக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாகப் பூர்த்தியாகி இருக்க அழகாகய்த் தோற்றமளித்தது அவர்களின் இல்லம்.

ரய்யான் ஒரு மினிட்ரவெல்லிங் பேக்கும், ஒரு backpack உம் மட்டுமே உடன் எடுத்து வந்திருந்தான். டாக்ஸிக்கு செட்டில் பண்ணி அனுப்பி விட்டு நீண்ட நாட்களின்பின் ஸலாம் சொல்லிக்கொண்டு வீட்டினுள் காலடியெடுத்து வைத்தான்.

பேத்தியை வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த இஸ்மாயில் தான் முதலில் ரய்யானை கண்டது.

அவருக்கு பேச்சே எழவில்லை. ரய்யான் வருவானென்று தெரிந்திருந்தாலும் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பான் என நினைத்திருக்கவில்லை.

ஒருமுறை ஆளுயர அவனை  நோக்கிவிட்டு அப்படியே மகனை ஆறத்தழுவிக் கொண்டார்.

முன்பைவிட தலைமயிர் தாடியெல்லாம் நரைத்திருந்தது அவருக்கு. உடலிலும் மெலிவு தெரிந்தது. தந்தையின் தோற்றத்தில் தெரிந்த மாற்றம் ரய்யானுக்கு வருத்தமளித்தது.

"ஏன் ரய்யான் ஒருத்தருக்கும் சொல்லாம கொல்லாமல் வந்துட்ட? "

"ப்ளைட் டிக்கெட் உடனே கிடைச்சது அதான் வந்துட்டேன்" என நம்பவைத்தான்

"அது சரிடா. வர்றனு ஒருமெஸெஜ் போட்டிருந்தா நான் ஏர்போர்டுக்கு வந்திருப்பேனே" என்று தம்பியின் குரல்கேட்டு ஓடிவந்து முஸாபஸா செய்தான் ரியாஸ்.

ரியாஸின் மனைவி தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க உதட்டில் சிறுமுறுவலுடல் வாங்கிப் பருகினான்.

ரியாஸின் குட்டி மகள் ரய்யானை வினோதமாகப் பார்க்க

"சாச்சா மா! சாச்சாக்கு ஸலாம் சொல்லுங்க செல்லம்!!"

அது புதியவனான ரய்யானை சிலநொடிகள் நோக்கிவிட்டு தன்தாயின்தோளில் முகம் புதைத்துக்கொண்டது.

சிறிதுநேரம் கடந்தபின் ரய்யானின் கண்கள் ஆயிஷாவின் தரிசனத்திற்காக ஏங்கின.

முன்புபோல தான் வந்ததை அறிந்ததும் உடனே வந்து கட்டிக்கொண்டு முத்தம்வைத்து அழைத்துப்போய் விரும்பியதை சமைத்து பறிமாறுவார் என்றெல்லாம் அவன் எதிர்ப்பார்த்திடவில்லை. ஏதோ வீட்டுக்குள் எழுந்து நடமாடவாவது செய்வாரென்றே நினைத்திருக்க விழிகளாலே ஆயிஷாவை தேடினான்.

ஆனால் எங்கேயும் அவர் தென்படவில்லை.

"வாப்பா ! உம்மா எங்க ? காணவேயில்ல !? "

"உம்மா உள்ள தூக்கிட்டு இருக்கா. நீ வர்றது தெரிஞ்சிருந்தா முழிச்சிட்டு இருந்திருப்பா"

"சரி பரவால்ல. நானே போய் பார்க்குறேன்" என்று எழுந்த ரய்யானை தடுத்தான் ரியாஸ்.

'ஏன்?' என்று கேள்வியோடு பார்த்தவனிடம்

"ரய்யான்! இப்ப உம்மாக்கு ஹெல்த் முதல்மாறி இல்லடா. சந்தோஷமோ கவலையோ எதுவாயிருந்தாலும் மெதுவா நிதானமாதான் அவங்கட்ட சொல்லனும்னு டொக்டர் சொல்லிருக்கார்.." என ரியாஸ் விளக்கம் கொடுக்கும்போதே ரய்யானுக்கு புரிந்துபோனது.

'திடுதிப்பென வந்திறங்கியதும் அல்லாமல் அவர் முன்னே சென்று நின்றால் இந்த இன்ப அதிர்ச்சியை தாங்குமளவுக்கு அவரின் பலவீனப்பட்ட இதயத்திற்கு சக்தியில்லை' என்பதைத்தான் அண்ணன் சொல்ல வருகிறான்.

"உனக்கும் ட்ரவெல் பண்ணி வந்தது டயர்ட்டா இருக்கும். முதல் நீ போய் ப்ரெஷ் பண்ணிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு. அதுக்குள்ள உம்மா முழிச்சிருவாங்க" நசூக்காக அவனை தடுக்க முயன்றான் ரியாஸ்.

ரய்யானின் மனமோ 'என்னோட உம்மாவ பார்க்க வேணாம்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்ல' என முரண்டு பிடித்தது. ஆனாலும் மனதை அடக்கி கொண்டு

"நான் அவங்களை எழுப்பாமல் பார்த்துட்டு வந்துடறேன்.." என்று பிடிவாதமாய் சொல்ல ரியாஸோ தந்தையை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தான். ரியாஸ் எத்திவைக்கும் செய்தி புரிந்தாலும் இஸ்மாயில் 'சரி பார்த்துவிட்டு வரட்டும்' என்றிட

அதற்கும்மேல் ரியாஸ் தம்பியை தடுக்கவில்லை. இருப்பினும் அடுத்து நடக்கப்போவதை நினைத்து அவனால் வருந்தாமல் இருக்கவும் முடியவில்லை.

Thanks for reading!
If u like this story pls support me with ur votes and comments

Continue Reading

You'll Also Like

16K 636 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
30K 1.1K 94
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம்...
131K 8.8K 37
Hai thangangala..............mature content.....core story partially based on few true incidents.....dont get more attached to the reel charecters...
29.5K 2.6K 32
திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்