நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

49.5K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-2-
-3-
-4-
-5-
-6-
-7-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-8-

817 42 0
By safrisha

காலையிலே புறப்பட்டு வெளியில் சென்றவன் மாலையாகியும் வீடுதிரும்பவில்லை. ரய்யான் சாப்பிட வராத கவலையில் ஆயிஷாவுக்கும் உணவு இறங்க மறுத்தது.

மனைவியின் கவலை தொய்ந்த முகத்தை பார்க்கமுடியாமல் 'இது எத்தனை காலத்துக்கு தொடருமோ?!' எனக்கலங்கினார் இஸ்மாயில்.

பலதடவை ரய்யானுக்கு அழைத்தும் அவனை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அதேபோன்று எவ்வளவு முயற்சித்தும் ஆயிஷாவை சாப்பிட வைக்கவும் முடியவில்லை.

இஸ்மாயில் இப்போது மகனைவிட மனைவியை நினைத்தே அதிகம் கலங்கினார். ரய்யானின் சினம் எப்போது தணியுமென யாராலும் கணிக்கமுடியாது. ஆனால் மகனை நினைத்து கவலைகொண்டு மனைவியின் ஆரோக்கியம் கெட்டுவிடுமோ என்றுபயந்தார்.

இதைஇனி தொடர விடுவது நல்லதில்லை. இன்றே பேசி ரய்யானுக்கு புரிய வைத்துவிட வேண்டுமென தீர்மானித்தவராய் அவன் வருகைக்காக காத்திருந்தார்.

மாலை ஆறுமணிக்கும் பிறகே வீட்டுக்கு வந்தான் ரய்யான். அவன் காலணிளை கலட்டி வீட்டுக்குள் நுழையும் மட்டும் பொறுமையுடன் இருந்தார்.

வெளியில் சென்றவர்கள் வீட்டுக்குள் வரும்போது ஸலாம் சொல்லிவிட்டே உள்ளே நுழைய வேண்டுமென்பது சிறுவயதுமுதல் அவர்களது இல்லத்தில் கடைபிடிக்கப்படும் ஒருவழக்கம்.

ஆனால் உள்ளே நுழைந்த ரய்யான் எந்தப்பேச்சுமின்றி அமைதியாக வரவேற்பறையை கடந்துசெல்ல
"ரய்யான்!" என்று இஸ்மாயிலின் குரல் அவனை தடுத்தது.

அவனும் அவரிடம் திரும்பாமலே என்னவென்று வினவ இஸ்மாயிலுக்கோ அவனிடம் கேட்பதற்கு பலகேள்விகள் இருந்தாலும் அத்தனையும் அடக்கிக்கொண்டு
"ஏன் சாப்பிட வீட்டுக்குவரல?" என்றுமட்டும் கேட்டார்.

அவனுடைய பதிலும் அவரது கேள்வியைவிட நிதானமாகவே வந்தது " வெளில கொஞ்சம் வேலை. அதான் ஹோட்டல்லேயே சாப்டேன்.."

"அப்ப ஒரு போன்பண்ணி வரமுடியாதுன்னு சொல்லி இருக்கலாமே. உனக்காக நாங்க சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருப்போம்னு தெரியாதா?"

"ஆஹ்! எனக்கு அது ஞாபகம் வரல" என விட்டேற்றியாக வந்த அவனது பதிலில் அவரது பொறுமை கரைய

"ஓஹோ! அப்டியா!? வீட்டுக்குள்ள வரும்போது ஸலாம் சொல்ற பழக்கவழக்கந்தான் மறந்து போச்சுனு நினைச்சன். இப்பத்தான் விளங்குது பெத்த உம்மா வாப்பவும் மறந்துபோச்சுனு" என்று வேதனையுடன் சொல்ல

"நான் அப்படி சொல்லல. நீங்களா அப்படி நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல "

"பெத்தவங்களுக்கு நல்லா மரியாதை குடுத்துப்பேச பழகியிருக்க ரய்யான்!" என விரக்தியுடன் மொழிந்தார் இஸ்மாயில்.

"வாப்பா ப்ளீஸ்..! இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சினை?!"

"நீ சாப்பிடவரல்லனு உங்க உம்மா இன்னும் சாப்பிடாம பட்டினி கெடக்குறா. நீ எவ்வளவு ஈஸியா சொல்ற மறந்துட்டனு"

ஆயிஷா அறையில் இருந்தவாறே வெளியில் நடந்து கொண்டிருக்கும் உரையாடலுக்கு செவிசாய்த்து இருந்தார். கண்களில் கண்ணீரோடு.

"நான் யாரையும் எனக்காக வெயிட்பண்ண சொல்லவுமில்ல! பட்டினியிருக்க சொல்லவுமில்ல! இன்னொரு விஷியம் இனிமேல் யாரும் வெயிட்பண்ணி பட்டினி கெடக்க தேவையுமிருக்காது" என்று நிறுத்தி தந்தையை நேராக நோக்கி
"நான் நாளன்னைக்கு போரின் போறேன்" என்றுரைத்து விட்டு அதற்குமேல் அங்கே நிற்கப்பிடிக்காமல் விறுவிறுவென அறைக்கு விரைந்தான்.

ஓராயிரம் இடிகள் ஓரேசமயத்தில் தலையில் விழுந்து தாக்கியதுபோல துவண்டார் ஆயிஷா. அவர்மனம் அவன் சொல்வது பொய்யாக இருந்துவிடாதா என ஏங்கியது.

இஸ்மாயிலுக்கும் ரய்யானின் அதிரடி முடிவில் அதிர்ச்சிதான். எனினும் அவனின் பிடிவாதம் தெரியுமென்பதால் அவர் அவனை தடுக்க முற்படவில்லை. ஆனால் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை இப்படி அவசரப்பட்டு எடுக்கிறானே என்ற வருத்தம் மட்டுமே அவருக்கு.

எதையும் ஒருவர் அனுபவரீதியாக உணரும்பொழுதுதான் இனிமேல் அதுபோன்ற தவறுகளை வாழ்க்கையில் செய்யமாட்டார்கள். எனவே தங்கள் இளையமகனும் அனுபவப்பட்டால்தான் திருந்துவானென அமைதியாக இருந்துவிட ரியாஸ்தான் ரய்யானிடம் கெஞ்சினான். எனினும் ரய்யான் தன்பிடியிலிருந்து இறங்கவில்லை.

ரய்யான் உட்பட ஆயிஷா, இஸ்மாயில்,ரியாஸ் நால்வருக்குமே அன்றும் நீண்ட இரவாகக் கழிந்தது.

ரய்யானுக்கும் அவர்களின் கலங்கிய தோற்றம் மனவேதனையை தந்தாலும் 'என்னுடைய உணர்வுகளையும் விருப்பத்தையும் மதிக்காதவர்களின் உணர்வுகளுக்கு நான் ஏன் மதிப்பளிக்க வேண்டும்?' என்று கடைசியில் அவனது கவலையை புறம்தள்ளிவிட்டு பிடிவாதமே வென்றது.

எனவே அவர்கள்பற்றிய சிந்தனையை வேண்டுமென்றே ஒதுக்கினான். தன்மொபைலில் ஷிரீனுடன் எடுத்த புகைப்படங்களையும் அவளுடனான பழைய சாட்டிங்கையும் பார்த்தபடியே தூங்காமல் இரவை கழித்தான்.

அவற்றை பார்க்கப்பார்க்க குடும்பத்தினர்மீது இன்னும் கோபமும், வெறுப்பும் அதிகரிக்க அனைவரையும் விட்டுவிலகி தூரப்போய்விட வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே அவன் மனதை ஆக்கிரமித்திருந்தது.

அன்று விடியும் முன்னமே வீட்டைவிட்டு கிளம்பினான். போகும்போது ரியாஸிடம் மட்டும் சொல்லிச்சென்றான்.

மறுபடியும் ஒலிபெருக்கியில் இலங்கைகான பயணிகள் விமானம் இன்னுமொரு மணித்தியாளம் தாமதப்படுத்தப் படுவதாக அறிவிப்பு காற்றில் எதிரொலிக்க கடந்த காலத்தின் பிடியில் இருந்து ரய்யான் நிகழ்வுக்கு மீண்டான்.

மூன்று மணிநேரம் அதேசிந்தனையில் உழன்றவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

இப்போது மக்ரிப் ஆகிவிட்டிருந்தது. விமான நிலையத்தில் தொழுகைக்கு ஒதுக்கிருந்த பகுதியில் தொழுகையை நிறைவேற்றினான். தாயாருக்காகக்காக இறைவனிடம் கையேந்தினான்.

"யா அள்ளாஹ்! உம்மாவுடைய நோயை பூரணமாக சுகப்படுத்தி அவங்க ஆயுளை நீடிச்சிவை!"

அவன் நாட்டைவிட்டுச்சென்ற புதிதில் ரியாஸிடம் மட்டுமே கதைப்பான். சிலசமயம் தந்தையிடமும் பேசுவான்.

ஆனால் ஆயிஷாவிடம் பேசுவதை தவிர்த்தான். அவர் அவன் காதலை ஏற்காததுதான் அவனை மிகவும் பாதித்திருந்தது. ரய்யானின் புறக்கணிப்பு அவரை கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியாக மாற்றி வைத்தது.

ரியாஸும் இஸ்மாயிலும் கதைக்கும்போது ஆயிஷாவின் உடல்நிலைபற்றிச் சொல்ல பின்பே ரய்யான் மனமிறங்கி ஆயிஷாவுடன் கதைக்கத்தொடங்கினான்.

ஆனாலும் அவனது மனக்காயம் ஆறாமல் அவனுக்குள்ளே இருக்கத்தான் செய்தது. முதலில் கடமைக்காக பேசஆரம்பித்து நாட்கள் செல்லச்செல்ல உண்மையான பாசத்துடனே கதைத்தான்.

என்னதான் நடந்திருந்தாலும் பெற்ற தாயல்லவா. அந்த அன்பு எப்படி மறந்து போகும். ஆயிஷா ரய்யானிடம் மன்னிப்புக்கேட்டு அவனை தாயகம் வந்துவிடுமாறு பலதடவை கெஞ்சிப்பார்த்தார். ஆனால் அவன் அதில்மட்டும் மனம்மாறவில்லை.

ஓரிருமுறை ஷிரீனையே மணந்துகொள்ளும்படியும் சொல்லிப் பார்த்தார் 'தனக்கு திருமணமே வேண்டாம். இதைப்பற்றி பேசுவதாக இருந்தால் இனிமேல் நான் யாருடனும் கதைக்க மாட்டேன்' என பிடிவாதமாக சொல்லிவிட ஆயிஷா கண்ணீருடன் அடங்கிப்போனார்.

'மகனின் வாழ்க்கை தன்னால் பாழாகிவிட்டதே' என்ற மனக்கவலை அவரின் இருதயத்தை பலவீமாக்கிவிட நிரந்தரநோயாளி ஆகிப்போனார் ஆயிஷா.

ரய்யான் 'தான் திருமணமே செய்யப் போவதில்லை' என ஏற்கனவே முடிவெடுத்திருந்தான். காரணம் ஷிரீனை பிரிந்து ஒரேவருடத்தில் அவள் கொழும்பிலுள்ள ஒருபணக்காரனை கரம்பிடித்திருந்தாள்.


ஒருநாள் ரய்யானை தொடர்பு கொண்ட ஷிரீன் வீட்டில் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதாகவும் தன்னை வற்புறுத்தி சம்மதம் பெற்றதாகவும் சொன்னாள். அவளுக்கு என்னபதில் தருவது எனத் தெரியாமல் கலங்கினான் ரய்யான்.

அதன்பிறகு ஷிரீன் ரய்யானை தொடர்பு கொள்ளவில்லை. சில மாதங்களுக்குப்பின் அவளுக்கு திருமணமாகிவிட்டது என்ற செய்தி நண்பர்கள் மூலம் கிடைத்தது.

ஷிரீன் இன்னொரை மணந்து கொண்டதை ஜீரணிக்கவே ரய்யானுக்கு பலநாட்கள் தேவைப்பட்டன.

எனினும் அவளாவது சந்தோஷமாக இருக்கட்டுமென எண்ணினான்.

தன்வீட்டில் தன்காதலை ஏற்றுக் கொண்டிருந்தால் ஷிரீன் எப்போதும் என்னவளாகவே இருந்திருப்பாள். இதுபோன்று அவள் இன்னொருத்தனுடன் சந்தோசமாக இருப்பதை பார்க்க வேண்டியநிலை வந்திருக்காது என்றே அப்போதும் அவன்மனம் நினைத்தது.

ஆனால் ரய்யானின் நண்பர்களோ அவளைப்பற்றி வேறுவிதமாக சொன்னார்கள். 'உண்ணுடன் எப்படி பழகி காதலித்தாளோ அதேபோன்று தான் அந்த பணக்காரனுடனும் பழகிகாதலித்து திருமணம்வரை வந்திருக்கிறது' என்றார்கள். ஆனாலும் ரய்யான் நம்பவில்லை.

ஷிரீனை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. அவள் போன்நம்பர் முதற்கொண்டு இன்ஸ்டகிராம், பேஸ்புக் என அனைத்தையும் மாற்றியிருப்பது மெல்லப்புரிந்தது ரய்யானுக்கு.

கொழும்பிலுள்ள நண்பர்களின் உதவியுடன் அவளது புதியபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளை கண்டறிந்தான்.

புதிய இன்ஸ்டாகிராமை அவளது புதியகாதல் கணவனுடன் எடுத்த புகைப்படங்களால் நிறைத்திருந்தாள். அவனுடனான ஒவ்வொரு நிகழ்வுகளும், அவன் அவளுக்கு கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள் எல்லாமே பதிவேற்றப்பட்டு இருந்தன.

அதில்ஒரு post ரய்யானை வெகுவாக பாதித்தது. மணமக்கள் இருவரும் முத்தமிடுவது, மணமகன் மணமகளை தூக்கி வைத்திருப்பதுபோல இருவரும் நெருக்கமா இருக்கும் புகைப்படங்கள் 'Glims of my dream wedding' என்ற ஹேஷ் டெக்குடன் பதிவேற்றப் பட்டிருந்தன.

அனைத்திலும் அவள்முகம் மேக்கப்பில் மெருகேறி இருந்ததாலும் முகத்தில் வீசிய புன்னகையும், களிப்பும் ரய்யானின் உள்ளத்தில் முள்ளாக தைத்ததன. வேஷம் என்றால் என்னவென்பதை முழுமையாக உணர்ந்தான்.

நண்பர்கள் அவளைப்பற்றி சொன்னது அத்தனையும் உண்மையென அப்போதுதான் புத்தியில் உரைத்தது. 'தன்னிடம் படிப்பு முடிந்தபின்னரே திருமணம் என நிபந்தனை போட்டது அவள் எதிர்பார்க்கும் வசதிவாய்ப்பு அப்போது தன்னிடமில்லை என்பதற்காவே. என்னைவிட வசதியான ஒருவன் கிடைத்ததும் அவனுடன் சென்றுவிட்டாள். அவளது காதல், நேசம் எல்லாமே பொய்!'

ஷிரீனும் அந்த இன்னொருவனும் நெருக்கமாக இருப்பதை பார்த்ததிலிருந்து அவனுக்கு பெண்கள்மீதான நம்பிக்கையும் மதிப்பும் இல்லாமல் போனது.

'பெண்கள் காதல், திருமணம், குடும்பம் என்பதை மதிப்பதில்லை. ஆண்களிடம் உண்மையான நேசத்தை எதிர்ப்பார்ப்தில்லை. மாறாக ஆண்களின் சம்பாத்தியத்தில் வசதியான, சொகுசான வாழ்க்கைகாகவே ஆசைப்படுகிறார்கள் அதற்காகவே காதல் கொண்டதுபோல் நடித்து நம்பவைத்து ஏமாற்றுகிறார்கள்' எனநினைத்தான்.

அன்றுமுதல் பெண்களையும் திருமணமத்தையும் அடியோடு வெறுத்துவிட இனி தன்வாழ்க்கையில் அவையிரண்டுக்குமே இடமில்லையென முடிவுசெய்துவிட்டான்.

Thanks for reading!
If u like this story pls support me with ur votes and comments

Continue Reading

You'll Also Like

94.6K 4.5K 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..
425K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..