நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

49.4K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-2-
-3-
-4-
-5-
-7-
-8-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-6-

858 37 1
By safrisha

ரய்யான் அந்த அறையே அதிரும் படி கத்தி விட்டு அங்கிருந்து வெளியேறியது அனைவருக்குமே அதிர்ச்சி என்றாலும் அதிகம் பாதிக்கப்பட்டது ஆயிஷாதான். அதன்பின் யாருக்கும் சாப்பாடு தொண்டை குழிக்குள் இறங்கவில்லை.

அனைவருக்கு கை கழுவி எழுந்து கொள்ள ஆயிஷா மட்டும் இன்னும் அதே நிலையில் இருந்தார். ரியாஸ் அவரை மெதுவாக எழுப்பி கை கழுவ வைத்து அழைத்து வந்து வரவேற்பறையில் அமர வைத்தான்.

இஸ்மாயில் மகனை சமாதானம் செய்வதா, மனைவிக்கு ஆறுதல் சொல்வதா என குழம்பி போயிருந்தார். வீட்டின் சூல்நிலையை உணர்ந்து ரியாஸின் மனைவி சாப்பாட்டு அறையையும் சாப்பிட்ட தட்டுகளையும் சுத்தப்படுத்தி சமயலறையையும் சுத்தம் செய்தாள்.

அந்த வீட்டுக்கு வந்து இப்படியொரு நிகழ்வை முதல் தடவை பார்த்த அதிர்ச்சி அவளுக்கும் இருந்தது. அவர்கள் அனைவருக்கும் அவரவருக்குரிய தனிமை கொடுத்து அவள் சுத்தம் செய்வதுதான் மிக முக்கியமான வேலை என்பதுபோல ஒதுங்கியே இருந்தாள்.

ரியாஸ் தம்பியின் காதல் திருமணம் பற்றி அன்னையின் மனநிலை என்னவென தெரிந்து கொள்வதற்கு முயன்று கொண்டிருந்தான்.

"உம்மா! அவன் லவ் பண்றனு சொல்லும்போது கூட நீங்க எதிர்த்து எதுவும் சொல்லலையே. சந்தோசமா தானே இருந்தீங்க. பிறகு ஏன்மா இது வேணாம்னு சொல்லுறீங்க..?"

அதுவரை பேச்சற்று தரையை வெறித்திருந்த ஆயிஷா வாய் திறந்தார்.

"ரியாஸ்! அவன் ஆரம்பத்துல உன் கலியாணத்தப்ப பார்த்தேனு சொன்னதும் யாரோ நமக்கு தெரிஞ்ச புள்ள நம்மக்கு பழக்கமான புள்ளைனு நெனைச்சேன்..
ஆனா இது எங்கயோ நாங்க வாழ்க்கைலயே பார்த்தில்லாத ஊருல உள்ள புள்ளை. என்னதான் பெரிய படிப்பு படிச்சாலும் தொழுகை, ஓதல், ஒழுக்கம், மார்க்கம் இல்லாட்டி அந்த படிப்புல பிரயோசனமில்ல. உன் கலியாணத்துல நானும் அவளை அவதானிச்சேன்..
அவளும் அவளோட உடுப்பும், தலைய திறந்து போட்டுட்டு
அவளுக்கு மார்க்கம்னா என்னனு தெரியுமோ தெரியாது.." என்றார் தோய்ந்துபோன குரலில்.

ரியாஸி மனைவி ரிஸ்னாவின் மனதிலும் ஆயிஷா சொன்ன காரணம்தான் ஓடிக் கொண்டிருந்தது.

தன் தோழி சஜ்ஜெஸ்ட் செய்ததால் தான் ப்ரைடல் ட்ரெஸ்ஸிங் என்ட் ப்ரைடல் மேக்கபிற்காக அவர்களை  ரிஸ்னா தனது திருமணத்திற்காகவும் ஒன்லைனில் புக் செய்திருந்தாள். அந்த பெண்ணுக்கு உதவியாக வந்தவள் தான் இந்த ஷிரீன்.

ரிஸ்னா வுழு செய்து மணப்பெண் ஆடை அணிந்து மேக்கப் போட முன்னரே லுஹர் தொழுகைக்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என அந்த ஆர்டிஸ்டிடம் சொல்லியிருந்தாள்.

மேக்கப் முடிந்து இனி டச்அப் மட்டும் எஞ்சியிருந்த சமயத்தில் ரிஸ்னா தொழ வேண்டும் என சொல்ல அதற்கு அனுமதிக்க முடியாது. மேக்கப் ஸ்பொயில் ஆகிவிடும். பார்ப்பவர்கள் எங்களை தான் குறை சொல்வார்கள் என ஏதேதோ பேசி தடுத்தனர்.

ரிஸ்னாவும் கோபம் மிகுதியில் "நீங்க ஒன்னும் சும்மா வரல்லியே..நாங்க பே பண்ணியிருக்கம் ..
நீங்க கஸ்டமர் சொல்ற மாதிரி செஞ்சா போதும்.. நான் ஏர்லியாவே உங்கள்ட ரிக்வெஸ்ட் பண்ணேன் தானே..
அப்ப சரினு சொல்லிட்டு..
இப்ப என்ன? !" கத்திவிட அப்போது தான் மொடர்ன் முஸ்லிம் என்ற பெயரில் தலையில் ஷோல் போட்டும் போடாதவாறு ஷிரீன் அருகில் வந்தாள்.

"ஹேய் கூல் டியர்! வை ஆர் யூ கெட்டிங் அங்க்ரீ? திஸ் இஸ் யுவர் பிக் டேய்..! யூ ஷுட் பீ கோர்ஜியஸ் டுடேய்.. இந்த ட்ரெஸ்ஸிங், மேக்கப் எல்லாமே இந்த ஒரு நாளைக்காக தானே..!ரைட்?!
திஸ் வில் பீ அ பியூட்டிபுல் மெமரி இன் யுவர் லைப்..!
ஸோ வீ ஓல்ஸோ ட்ரையிங் டு மேக் யூ டு லுக் ப்ரெட்டி ஆஸ் மச் ஆஸ் வீ கென்..!
ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டான்ட் டியர்" தேன்வடிய மயக்கும் குரலில் பேசி ரிஸ்னாவை சாந்தப்படுத்தி சம்மதிக்க வைக்க முயன்றால் ஷிரீன்.

"நீங்க சொல்றது விளங்குது சிஸ்டர்.. பட்! நான் என்ன நெனைக்கிறன் என்டா என்னோட தொழுகைய விட்டுட்டு இதெல்லாம் செஞ்சா எப்படியும் இது ப்யூட்டிபுல் மெமரியா எப்பவுமே இருக்காது..
கில்ட்டியாதான் இருக்கும்
ப்ளீஸ் நீங்க கொஞ்சம் புரிஞ்சி கொள்ளுங்க!" ரிஸ்னா தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.

"ஹய்யோ டியர்! நீங்க இப்பவே தொழனும்னு கட்டாயம் இல்லயே.. லேட்டாகி நெக்ஸ்ட் ப்ரேயர் கூட.. வட் ஸம் திங் கோல்ட்.. சேர்த்து ஓர் சுருக்கி தொழுது கொள்ளலாம் தானே..." மறுபடியும் தேன் ஒழுக பேசினாள் ஷிரீன்.

ரிஸ்னாவுக்கு சிரிப்பு தான் வந்தது மார்க்க அறிவின் மட்டத்தில் எவ்வளவு பலவீனமாக இருக்கிறார்களே. இவர்களிடம் எவ்வளவு பேசினாலும் செவிடன் காதில் சங்கூதும் கதை தான்.

ரிஸ்னா தொழுவதற்காக ஆயத்தமாகி நின்றாள். அவளின் காது படவே ஷிரீன் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாகிய அவள் தோழியிடம்
"எதுக்கு இந்த வில்லேஜ் ப்ரொஜெக்ட் எல்லாம் கமிட் பண்ற.. எவ்ளோ சொன்னாலும் மணடைல ஏறாது.. டிஸ்கஸ்ட்டிங் பீப்ல்.."
வெறுப்புடன் மொழிந்தாள்.

ரிஸ்னாவுக்கு தன் திருமண நாளில் நடந்த இந்த சம்பவம் மட்டும் இன்னும் அவள் மனதில்  ஒரு கரும்புள்ளியாகவே இருந்து வந்தது. அந்த நிகழ்வையும் ஷிரீனையும் அன்றே அவள் மனம் வெறுத்து விட்டது. இப்போதும் அதை நினைத்ததுப் பார்க்கையில் முகம் சுருங்கியது.

ரியாஸும், இஸ்மாயிலும் ஆயிஷாவை சமாதானம் செய்யவே முயற்சித்தனர். ஏனெனில் ரய்யானை ஒரு போதும் சமாதானம் செய்ய முடியாது. அவனாக உணர்ந்தால்தான் உண்டு.

"உம்மா! ஒரு வேளை அந்த புள்ள நீங்க நினைக்கிற மாதிரி இல்லாம மார்க்கம் பற்றுள்ளவளா இருந்தா உங்களுக்கு ஒகே தானே ?" ரியாஸ் கேட்க

"என்னோட 18 வருஷ டீச்சிங் எக்ஸ்பீரியன்ஸ்ல சொல்றன்டா நான் அவதானிச்ச வரையில மார்க்கப் பற்றுள்ள புள்ளைட்ட இருக்குற எதுவும் அவகிட்ட இல்ல... " ஆயிஷா சொல்ல

"இல்லமா..! எதுவும் தெரியாம ஒருத்தரோட கெரெக்ட்டர ஜட்ஜ் பண்றது பிழைமா. நீங்கதான் இத எங்களுக்கு சொல்லி குடுத்தீங்க. நீங்களே இப்டி ஜட்ஜ்மெண்ட்டலா இருக்கலாமா?! சொல்லுங்க!" ரியாஸின் கூற்றை இஸ்மாயிலும் ஆயிஷாவிடம் எடுத்துக் கூற

"சரி அப்ப வாப்பாவும் மகனும் சேர்ந்து உன்னோட அருமை தம்பிக்கு அவளையே கலியாணம் முடிச்சி வைங்க. ஆனா அள்ளாஹ்வுக்காக கலியாணத்துக்கு என்ன கூப்ட்றாதிங்க. சொல்லிட்டன்!" கோபமும் அழுகையுமாக ஆயிஷா சொல்ல

"ஐயோ உம்மா! நீங்க அவனை விட சின்ன புள்ளையா இருக்கீங்களேமா" என பக்கத்தில் அமர்ந்து ஆயிஷா தலையை தன் தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தினான் ரியாஸ்.

ஆயிஷா சிறிது சாந்தமடைந்ததும் மீண்டும் ரியாஸை நோக்கி
"சரி அப்ப என்னதான் செய்யப் போறிங்க?"

"முதல்ல தெரிஞ்சவங்க மூலமா விசாரிச்சி பார்க்கலாம்மா. நாங்க நினைக்கிறது போல இல்லாம உண்மையிலேயே மார்க்கமுள்ள நல்ல புள்ளையா இருந்தா எங்களுக்கும் சந்தோசம் தானே. அழகான முறைல கலியாணத்த நடத்தி வைக்கலாம்" ரியாஸ் பொறுமையாக எடுத்துரைத்தான்.

"அந்த ஊர்ல உனக்கு யாரை தெரியும் ரியாஸ்? இங்க இருந்துட்டு எப்படி தெரிஞ்சிக்க முடியும்?" இன்னும் அவர் மனது இறங்கவில்லை.

"நான் உம்ரா போன டைம்ல எங்கட க்ரூப்ல அந்த ஊர்ல இருந்து ஒரு பெமிலி வந்திருந்தாங்க. அந்த நாநாவோட நம்பர் இன்னும் எங்கிட்ட இருக்கு. அவருகிட்ட கோல் பண்ணி விசாரிச்சி பார்க்கலாம்"

"சரி ஏதோ செய்யுங்க" என ஆயிஷா விரக்தியுடன் எழுந்து சென்றார்.

அன்றைய இரவு வீட்டில் அனைவரும் தூக்கத்தை தொலைத்து இருந்தனர்.

ரிஸ்னா ரியாஸிடம்
"மாமி சொல்றது சரிதான்.. அந்த புள்ள வேணாம்!! "

"ஐயோ உம்மாதான் எதையோ நெனைச்சிட்டு அப்படி பேசுறாங்கன்னா நீங்களும் புரிஞ்சிக்காக சொல்றீங்களே ரிஸ்னா !"

"இல்ல! நான் நல்லா தெரிஞ்சிட்டுத்தான் சொல்றேன்"
என ஆரம்பித்து திருமண நாளன்று நடந்ததை தன் கணவனிடம் விளக்கினாள்.

"அது அவங்களோட ஜோப் அதுக்காகக் கூட அவங்க அப்படி நடந்திருக்கலாம். ரிஸ்னா! இது எங்க உம்மாவுக்கு தெரிய வேணாம். நாங்க முதல்ல விசாரிச்சு பார்ப்போம். மத்ததை பிறகு டிசைட் பண்ணுவோம்" என்றிட அவளும் கணவனின் வார்த்தைக்காக அமைதியாக இருந்தாலும் அவளது மனதும் ஷிரீனை ஏற்றுக்கொள்ள மறுக்கவே செய்தது.

If u like this story pls support me with ur votes and comments

Continue Reading

You'll Also Like

22.9K 891 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
149K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
184K 6.1K 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடி...
94.5K 4.5K 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..