நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

49.6K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-2-
-3-
-4-
-6-
-7-
-8-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-5-

930 39 0
By safrisha

ரியாஸ் ரய்யான் இருவருமே மிகவும் கலகலப்பான சுபாவம் உடையவர்கள். இருவரும் ஒரேநேரத்தில் வீட்டில் இருந்தால் ஆயிஷாவை வம்பிழுப்பதுதான் வேலையாக இருக்கும்.

ஆனாலும் குணத்தை பொறுத்தவரை இருவரும் இரு துருவம்தான்.

ரியாஸ் எந்த விடயத்தையும் சுமுகமாக கையாள்பவன். அவனைச்சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பான். தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விட தன்னை சார்ந்தவர்களின் உணர்வுகளுக்கு பெரிதும் மதிப்பளிப்பவன். பிடிவாதம், முன்கோபம் என்பது அவன் அகராதியிலே இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழ்பவன்.

ஆனால் ரய்யான் எல்லாவற்றையும் தீவிரமாக கையாளபவன். எதையும் திட்டமிட்டு ஒரு ஒழுங்கு முறையுடன் செயற்படுத்துபவன். ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அதில் வெற்றி காணாமல் ஓய மாட்டான். அவன் எடுக்கின்ற முடிவுகளிலும் தீவிரமாக இருப்பான். எனவே பிடிவாதம் என்பது அவனுடன் ஒட்டிப்பிறந்த ஒன்று.

அதே போன்றுதான் முன்கோபமும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன சொல்ல வருகிறார்கள் என பார்க்கமாட்டான். தனக்கு மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவான்.

எதையும் எளிதில் தெரிவு செய்ய மாட்டான். அது சாதாரணமாக உடுத்தும் உடை என்றாலுமே நிறைய ஆராய்ந்துதான் தேர்ந்தெடுப்பான். ஆனால் எப்போதும் அவனது தெரிவுகளில் ஒரு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும்.

மாலைவரை ஆயிஷாவிடம் சொல்ல முடியாமல் போகவே முதலில் தந்தையிடம் சொல்ல தீர்மானித்தான்.

அஸ்ர் தொழுகைக்கு செல்ல தந்தை பைக்கில் ஏறும் போதே "வாப்பா தொழுது முடிச்சிட்டு உங்களோட கொஞ்சம் பேசனும்" சொல்லிவிட அவரும் உள்வாங்கிக் கொண்டார்.

தொழுகை முடித்து நேரே வீட்டுக்கு வராமல் அவர்களது ஸ்பைஸ் கார்டனுக்கு வண்டியை செலுத்தினார் இஸ்மாயில்.

முதலாளியின் வண்டியை பார்த்ததும் காவலாளி வந்து நுழைவாயிலை திறந்து விட வண்டி உள்ள நுழைந்தது.

தோட்ட பராமரிப்பாளரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு மகனுடன் தோட்டத்துக்குள் நடந்தார்.

அங்கிருந்த மிளகு கொடியில் இருந்த சில மிளகு மணிகளை உதிர்த்து அதன் முதிர்ச்சியை ஆராய்ந்த படி
"என்ன விஷயம் ரய்யான்..?" என்று மகனை ஏறிட

"வாப்பா.. அது எனக்கு ஒரு கேர்ளை புடிச்சிருக்கு. ஐ டீப்லி லவ் ஹெர்.." எந்த தயக்கமும் இன்றி நேரடியாக விடத்தை கூற

மகனைப் பற்றி தெரியும் என்பதால்
"ஓகே..அந்த புள்ளைக்கு?"

"அவளும் தான்.. அவங்க வீட்லயும் நான் பேசிட்டேன்.. அவங்களுக்கும் ஓகே தான் " இஸ்மாயில் புருவங்கள் ஏறியிறங்க "ஓஹ்!" என்றுவிட்டு

"உங்க உம்மாக்கு இது தெரியுமா? அவ என்ன சொன்னா?"

"உம்மாகிட்ட இன்னும் சொல்லல வாப்பா.. உங்ககிட்ட தான் முதல்ல சொல்றேன்.."

"என்ன!? எப்பவும் உம்மா தானே பர்ஸ்ட்.. இதுல மட்டும் என்னாச்சு? "

"உம்மாகிட்ட சொல்றதுல ஒரு ப்ரொப்லமும் இல்ல வாப்பா.. ஆனால் !" என நிறுத்த

"ஆனா என்ன?! எதுல ப்ரொப்லம்..?" மகனின் தயக்கத்தை பார்த்து கேட்க

"எனக்கு இப்பவே நிகாஹ் செய்யனும்..." என்றான்.

"அதுக்கென்ன?!!
எல்லாம் ஓகேன்னா அடுத்தது கலியாணம்தானே.உன் நாநா கலியாணம் முடிஞ்சதுமே ஆயிஷா உனக்கு பொண் தேட ஆரம்பிச்சிட்டா. நீ விஷியத்த சொன்னா
உடனே அடுத்த மாசமே கலியாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணிலாலும் பண்ணிடுவா.." என்றார் மகனை பார்த்து சிரித்தபடி. ஆனால் மகனின் முகம் அந்த சிரிப்பை பிரதிபலிக்கவில்லை.

"ரய்யான் !" என அவனது தோளை பிடிக்க

"பிரச்சினையே அதான் வாப்பா..
அவ படிச்சிட்டிருக்கா.கோர்ஸ் கம்ப்ளீட் பண்ண மினிமம் இன்னும் ஒன்னரை வருஷமாவது ஆகும்..
இப்ப நிகாஹ் மட்டும் பண்ணிட்டு ரெண்டு வருஷம் கழிச்சி கலியாணம் பண்ணனும்னு அவங்க வீட்ல ரிக்வெஸ்ட் பண்றாங்க..." அனைத்தையும் கூறினான். இஸ்மாயில் எதுவும் சொல்லாது அமைதி காத்தார்.

"வாப்பா!"

"உங்களுக்கு ரெண்டு வருஷம் பெரிய காலம் மாதிரி தெரியலயா..?
உங்க உம்மா சரினு சொல்லிட்டா எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல..
ஆனா உங்க உம்மா அவ்வளவு ஈஸியா ஒத்துக்குவானு நான் நம்பல..
ஒரு ஆறு மாசம்னா கூட பேசி கன்வின்ஸ் பண்ணிறலாம். ரெண்டு வருஷம்னா ரொம்ப கஷ்டம்தான்.. எதுக்கும் நீ பேசி பாரு"

இருவரும் பேசி கொண்டிருக்கும் போதே ஆயிஷாவின் அழைப்பு வர ஐந்து நிமிடத்தில் வருவதாக கூறி வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

தந்தையிடம் கலந்துரையாடிய பின் ரய்யானுக்கு ஆயிஷாவிடம் சொல்வதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை.

இரவு உணவுக்காக அமர்ந்திருக்கும் போது ரய்யான் மெதுவாக தன் காதல் விவகாரத்தை பற்றி கூற அவன் எதிர்பார்த்தது போல ரியாஸ் தம்பியை கிண்டல் செய்ய ஆயிஷாவும் அவனுடன் சேர்ந்து கொண்டார்.

ஆயிஷாவுக்கோ அவ்வளவு மகிழ்ச்சி!
எண்ணியது போல் இளைய மகனின் திருமணத்தையும் விரைவில் செய்து விடலாம்.

ரய்யான் ஆரம்பத்தில் சொல்லும் போது ரியாஸின் திருமணத்தின் போது சந்தித்தாக மட்டுமே சொல்லியிருந்தான். எனவே அவளைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஆயிஷாவும் ரிஸ்னாவும் அவசரப்படுத்தினர்.

தன்னை விட யாருமே இந்த உலகில் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியாது என தன் வீட்டாரை எண்ணி ரய்யான் மனதில் பெருமிதம் கொண்டான்.

"வெயிட்.. வெயிட் சொல்றேன்" என அமைதி படுத்திவிட்டு தன் காதல் காவியத்தை சுவாரசியமாக கூற ஆரம்பித்ததான்.

எனினும் கதை சொல்லும் ஆர்வத்தில் அங்குள்ளவர்களின் முகபாவனையில் ஏற்பட்ட மாறுதல்களை கவனிக்க தவறினான். முக்கியமாக அவன் தாயின் முகபாவனை மாறியதை.

அவன் ஷிரீனை பார்த்து பழகியதில் தொடங்கி ஷிரீனின் தந்தையிடம் பேசி தங்களது திருமணமத்திற்கு சம்மதம் பெற்றது வரை மகிழ்வுடன் சொல்லி முடித்தான்.

ரியாஸ் "அப்ப தம்பி ரய்யான்! எப்ப கலியாண சாப்பாடு போடப்போறிங்க..?! "

"அதுக்கென்ன நாநா போட்டுட்ட போச்சு..! இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு!" என விளையாட்டாக சொல்வது சொன்னான்.

"ரெண்டு வருஷம்! நோவேய் !!
சீரியஸா கேக்குறன் ரய்யான்
எப்ப கலியாணம் பண்ணிக்க ஐடியா..?" ரியாஸ் தம்பியின் பதிலை ஏற்க முடியாமல்

"அதுவந்து.. நாநா! இப்போதைக்கு நிகாஹ் மட்டும் பண்ணிட்டு கலியாணம் லேட்டா செய்யலாம்னு "
இழுத்து நிறுத்தி கூறி முடித்தான்.

ஆயிஷா எதுவும் பேசவில்லை.
இஸ்மாயிலும் மனைவி என்ன நினைக்கிறாள் என்பது தெரியாததால் மௌனமாகவே இருந்தார்.

"லேட்டான்னா எவ்ளோ நாள் கழிச்சி? சிக்ஸ் மன்த்ஸ்?!" ரியாஸ் கேட்க

தாயின் முகத்தை ஒரு முறை நோக்கி விட்டு
"அதான் சொன்னேனே டூ இயர்ஸ் கழிச்சி.."

"டூ இயர்ஸ்?!!! நீ ஜோக்குக்கு சொல்றனு நெனைச்சன். பட் ரெண்டு வருஷம்ன்றது பெரிய கெப்.. அவ்ளோ நாள் எல்லாம் தள்ளிப்போடாத பின்னாடி உன் டிஸிஷன் நெனைச்சி நீயே வருத்தப்படப்போற.." உண்மை பாதி கேலி பாதியாக தம்பிக்கு புரிய வைக்க முயற்சித்தான்.

ஆனால் ரய்யான் தன் முடிவில்  மாற்றம் இல்லையென உறுதியாக சொல்லி விட.

இப்போதும் ஆயிஷாவிடம் எந்த எதிர்வினையும் இல்லை. வெறுமனே அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார். இந்த முறை ஆயிஷாவின் மௌனம் இஸ்மாயிலுக்கு எதையோ உணர்த்த ரியாசிடம் மனைவியை ஜாடை காட்டினார்.

"உம்மா!!! என்னமா தம்பி ரெண்டு வருஷம் கழிச்சி தான் கலியாணம்னு சொல்லிட்டு இருக்கான்.. நீங்க ஒன்னுமே சொல்லாம அமைதியாகவே இருக்கீங்க? அப்ப உங்களுக்கும் அதுல சம்மதமா?!!" என்க

ஆயிஷா பதில் சொல்வதற்குள் ஷிரீனின் படிப்பு முடிய வேண்டும் என்பதற்காகவே இரண்டு வருட பிற்போடல் என ரய்யான் அவர்களிடம் தெளிவு படுத்தினான். 

முழுவதும் கேட்டு முடித்ததும் ஆயிஷா
"இது சரியா வரும்னு தோனல ரய்யான்!" என்றார்.

"எனக்கு தெரியும்மா நீங்க இப்டி சொல்வீங்கன்னு. பட் உம்மா! கண் மூடி தெறக்கறதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிரும்மா..
எனக்கும் கரியர்ல என்ன நல்ல இம்ப்ரூவ் ஆகி முன்னுக்கு வரமுடியும்"

"ரய்யான்! ரெண்டு வருஷம் தள்ளிவைக்கிறது சரியா வராதுனு சொல்ல வரல.. இந்த கலியாணமே வேணாம்! நமக்கு இது சரிப்பட்டு வராதுனு சொல்றேன்!! புரிஞ்சிக்க!!! "

"உம்மா! நீங்க என்ன பேசுறீங்க..!!!"
அவனது குரல் கொஞ்சம் கொஞ்சமாக அவன் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தது.

"இது வேணாம்பா விட்ரு ரய்யான்! இந்த பொண்ணு வேணாம்!! உம்மா உன்னோட நல்லதுக்கு சொல்றேனு நெனைச்சிக்க ராஜா..!" ஆயிஷாவின் கெஞ்சும் குரலில் அவனிடம் வேண்டினார்.

"எப்படி விட முடியும்! ஐ லவ் ஹெர் !!!" என்றான் குரலில் சினம் தெரிக்க

Thanks for reading!
If u like this story pls support me with ur votes and comments

Continue Reading

You'll Also Like

56.3K 3.3K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..