நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

49.4K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-2-
-4-
-5-
-6-
-7-
-8-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-3-

1.4K 41 1
By safrisha

அந்தவார விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தபோது தன் நண்பர்களை சந்திக்க சென்றிருந்தான் ரய்யான்.

அந்த நேரம் பார்த்து ஷிரீனின் எண்ணில் இருந்து அழைப்பு வர இருக்கும் இடத்தை மறந்து ஆர்வமாக எடுத்துப் பேசினான்.

"அஸ்ஸலாமு அலைக்கும்" முதலில் அவனே ஸலாம் சொல்ல

அவளது தேன் குரலில்
"வலைக்கும் ஸலாம்" என பதில் வந்தது. 

"இப் யூ டோண்ட் மைன்ட் ஒரு பேவர் செய்வீங்களா? " என தயக்கத்துடன் கேட்க

"இட்ஸ் மை ப்ளெஷர் டு டூ எனிதிங் போர் யூ.. என்னண்டு சொல்லுங்க ஷிரீன்.."

"அம்ம்.. எனக்கு கொஞ்சம் பெட்டா வரைக்கும் போகனும்.. ரூமிஸ் எல்லாரும் ஊருக்கு போயிடாங்க.. ஸோ நீங்க ப்ரீஆ இருந்தா.." என இழுக்க

"ஓ ரியலி! நானும் நேத்து நைட் தான் கெண்டிக்கு வந்தேன்..
வெரி ஸொரி ஷிரீன்..." அவளிடம் வருத்தம் தெரிவிக்க

"ஓஹ்! இட்ஸ் ஓல் ரைட்! மை பேட் லக்... ஐல் மெனேஜ்.. எனிவே தான்க்ஸ் ரய்யான்" சோர்ந்த குரலில் சொன்னாள். அவன் மனமோ 'பேட் லக் உனக்கில்லமா எனக்கு தான்.. நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டேனே' என வருந்தியது.

அவன் அழைப்பை துண்டித்துவிட்டு நிமிர்ந்த போது இரு சோடிக் கண்கள் அவனை முறைத்து பார்த்திருக்க

"என்னடா.. எதுக்காக ரெண்டு பேரும் இப்படி முறைக்கிறீங்க ?"

"ஓஹ்! அப்போ எதுக்கு முறைக்கிறோம்னு உனக்கு தெரியாது.. ம்ம்ம் நம்பிட்டோம் டா.." என நாசிர் ரய்யானை நக்கலாய் கேட்க

"ம்ஹூம்.. தெரியாது " என அவன் தோளை குலுக்க

"ஆஹான்! நீங்க நல்லா ட்ரை பண்றீங்க தம்பி பட் உங்களுக்கு ஸெட் ஆகல.. ஸோ உண்மைய சொல்லிருங்க.." நாசிர் ரய்யானை விடாமல் குடைய

"எந்த உண்மை! எனக்கு புரியல.." என்ற ரய்யானின் தோளை இருக்கிய நாசிர்

"அப்படியா ராஜா! இப்ப ஒரு கேர்ள் பேசிச்சே அதப்பத்தி.."

"டேய் ரூம்மெட் ஒருத்தன் "

"ஓஹ்! அந்த ஒருத்தனுக்கு ஷிரீன் னு பெயரா?! வியர்டா இல்ல ரிமாஸ் ?!" மற்ற நண்பனிடம் நாசிர் கேட்க

இனிமேலும் மறைக்க முடியாது என உணர்ந்து அவர்களிடம் ஷிரீனுடனான பழக்கத்தை பற்றி சொன்னான்.

"டேய் அந்த கேர்ளை மீட் பண்ணத நீ சொல்லவே இல்ல" நாசிர் ஆச்சரியம் தாளாமல் கேட்டாலும் ரிமாஸ் அமைதியாகவே இருந்தான்.

"சொல்லலாம்னுதான் இருந்தேன் மச்சான்.. அதுக்குள்ள அவளே கோல் பண்ணிட்டா" ரய்யான் சமாளித்தான்.

"போடா சும்மா பொய் சொல்லாம.. இப்பமட்டும் கோல் வரலைன்னா நீ ஜென்மத்துல சொல்லி இருக்க மாட்டாய்.. எங்கள விட்டுட்டு நீ கொழும்புக்கு வேலை செய்ய போறேன்னு போனப்பவே தெரியும்டா நீ இப்டி ஏதோ பெரிய ப்ளானோடதான் போயிருப்பனு.." புகைந்தான் நாசிர்.

நாசிரின் கழுத்தில் கையை போட்ட படி "டேய் டேய் நீ நெனைக்கிற மாதிரி ஒன்னும் இல்லடா.. ஷிரீன் இன்னைக்கு தான்டா first டைம் கோல் பண்ணியிருக்கா.."

"யார ஏமாத்த பார்க்குறீங்க மிஸ்டர் ரய்யான்? " இன்னும் நாசிர் நண்பனிடம் முழு நம்பிக்கை இல்லை.

"வள்ளாஹி டா (சத்தியமாக)  "
ரய்யான் சத்தியம் செய்ய

அதுவரை நண்பர்களின் உரையாடலில் குறுக்கிடாது அமைதியாய் இருந்த ரிமாஸ்
"டேய் எதுக்குடா அற்ப விஷியத்துகுல்லாம் சத்தியம் பண்றீங்க... நீதான்டா ஒன்னொன்னு சொல்லி அவன ஏத்திவிடுறதே.." என ரய்யானில் ஆரம்பித்து நாசிரிடம் முடித்தான்.

"மௌலவி வந்துட்டாரு..
அவன் அவள பார்த்தான், பேசினான் எல்லாம் செஞ்கிட்டு வந்து எங்கள்ட சொல்றான்.. இதுல நான் எங்கடா ஏத்தி விடுறன்.. எல்லா பழியையும் என் தலைல கட்டப் பார்க்குறீங்களா?!"

"இப்ப நடந்தத சொல்லல.. எப்பவும் நீ ஏதாவது சொல்ல போய்த்தான் அவன் டீப்பா இன்வோல்வ் ஆகிடுறான்.. அதைத்தான் சொன்னேன்.." ரிமாஸ் நிதானமாகவே சொன்னான்.

"இல்லாட்டி மட்டும் அவனுக்கு ஒன்னுமே தெரியாத baba(baby) தானே.."

"செரி நான் நேரடியாவே சொல்றேன்.. இதெல்லாம் சரியில்லை ரய்யான்..
ஆகாது! இப்டி டைம் பாஸ்கு கேர்ள்ஸோட பழகுறத இஸ்லாம் அனுமதிச்சி இல்ல.. உனக்கும் அது தெரியாம இல்ல.. சும்மா பாவத்தை தேடிக்காம இத்தோட இத விட்று" தன் கருத்தை கராராவே சொல்லி விட்டான் ரியாஸ்.

"இது நான் டைம் பாஸுக்காக பண்ணலடா.. சீரியஸ்லி ஐ லவ் ஹெர் ஸோ மச் டா.."

"நீ லவ்வே பண்ணினாலும் அதுவும் இஸ்லாம் அனுமதிச்சி இல்ல.. யுனில படிக்கும் போது லவ்வுன்ற பேர்ல ஊர் சுத்தி சீரழிறவங்கள நாங்களே எவ்ளோ ஏசியிருப்போம்.. இப்ப நீயும் அதே வழில போகப் பார்க்குறியே.."

"யுனிவர்சிட்டி ஸ்டுடண்ட் மாதிரி மெச்சூரிட்டி இல்லாத லவ் இல்ல என்னோடது.. இன்ஷா அள்ளாஹ் எனக்கு ப்யூச்சர்ல வாழ்ந்தா அவளோட தான் வாழனும்.."

"சூப்பர்! அப்போ அந்த கேர்ள்ட சொல்டியா? அவ ஓகே சொல்லிடாளா? அவங்க வீட்ல ஓகே சொல்டாங்களா?" என ரய்யானிடம் ரிமாஸ் கேள்விகளை அடுக்க

'ஆத்தி இவன் விட்டா எப்ப கலியாணம்னு கேப்பான்போல இருக்கே..' என நாசிர் தனக்குள்ளே முனுமுனுக்க சடாரென ரிமாஸ் அவன் புறம் திரும்பியதும் 'ஐயோ பார்க்குறானே கேட்டிருச்சோ!' எதுக்கும் மூஞ்ச கொஞ்சம் சீரியஸ் மோட்லயே வெச்சுக்குவோம்..' என பம்மினான்

"இன்னும் அவ கிட்ட சொல்லல.. சொல்லனும் இன்ஷா அள்ளாஹ்.. அவ ஓகே சொன்னாதான் அவங்க வீட்ல பேசமுடியும்.." ரய்யான் தட்டுத்தடுமாறி தன் நிலையை சொல்ல இருவரும் அவன் புறம் திரும்பினர்.

"ஆஹ்! அப்ப எதுவுமே இன்னும் கன்போர்ம் இல்ல, ரைட்? ப்யூச்சர்ல இதெல்லாம் நடக்கும்னு என்ன உத்தரவாதம்..?! நடக்கும்னு நீ நம்பலாம் பட் அந்த எண்ணத்தோட ஒரு பெண்ணோட இப்டி பழக்கம் வச்சிருக்கறது பெரிய பாவம் ரய்யான்! ஹராம் ஹலால் தெரியாத அளவுக்கு நீ சின்ன புள்ள இல்ல..!" ரிமாஸ் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட

"எனக்கு அவள ரொம்ப புடிச்சிருக்கு.
அவள தவிர வேற யாரையும் கலியாணம் பண்ண விருப்பம் இல்லைன்ற அளவுக்கு.
அவள் இல்லாத ஓரு புயூச்சர என்னால இமேஜின் பண்ண முடியாத அளவுக்கு நான் அவளை விரும்புறேன். செரி நீயே சொல்லு! இப்ப நான் என்ன செய்ய?!" ரிமாஸிடமே கேட்க

'என்ன ரெண்டு பேரும் மாத்தி கேள்வி கேட்டுக்குறாங்க' மனதுக்குள் பேசிக்கொண்டே இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தபடி நின்றிருந்தான் நாசிர்.

"முதல்ல அவ பேரன்ட்ஸ் கிட்ட பேசு! சம்மதம் வாங்கு! அவளை நிகாஹ் பண்ணி உனக்கு சொந்தமானவளா ஆக்கிகோ! அதுக்கு பிறகு இந்த சாட்டிங் டேட்டிங் மீட்டிங் எல்லாம் செய். அதுக்கு இஸ்லாத்துல முழு அனுமதியும் இருக்கு..!" என்றான் ரிமாஸ்.

ரிமாஸை பார்த்து
'வாவ் ! மௌளவி first டைம் இப்படி ஒரு விஷியத்துக்கு ஒப்புதல் குடுத்திருக்காரு!' என்றது நாசிரின் மைன்ட் வொயிஸ்

நண்பன் சொல்வது புரிந்தாலும் அவன் சொல்வதுபோல் நிகாஹ் பண்ணும் வரை காதல் வயப்பட்ட அவனது மனதுக்கு பொறுமை இருக்கும் என்று தோன்றவில்லை.

எனினும் அப்போதைக்கு நண்பனின் பேச்சை ஆமோதித்து  இனிமேல் அவளுடன் சாட் செய்வதை குறைத்துக் கொள்ளவேண்டும் என முடிவெடுத்தான்.

ஆனால் எல்லாம் அவன் நினைப்பதற்கு எதிராகவே நடக்கத் தொடங்கியது.

அவன் நினைத்ததுபோல இப்போது அவளுடன் சாட் செய்வது இல்லை. பதிலாக மணிக்கணக்கில் போனில் கடலை போட்டான்.

அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். சில சமயம் எதேச்சையாகவும் பல சமயங்களில் திட்டமிட்டு எதேச்சையாகவும் சந்திப்புகள் இடம் பெற்றன.

அவளுக்கும் அவனிடம் ஈடுபாடு இருப்பது அவள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. எனினும் அவளாக சொல்லும் வரை பொறுத்திருக்க முடிவு செய்தான். அவளாக சொன்ன பின்பு அவளது தந்தையை சந்தித்து கதைக்கலாம் என்றிருந்தான்.

நண்பர்களிடம் தங்களுக்கிடையில் நடப்பவைகளை கச்சிதமாக மறைத்தான். இப்போதெல்லாம் ரய்யானுடைய வாரஇறுதிகள் பெரும்பாலும் ஷிரீனுடனே கழிந்தன. வீட்டுக்கு வருவது மாதத்திற்கு ஓரிருமுறை என்றானது. உண்மையில் வேலைப்பளுவும் அதிகம்தான். எனவே வீட்டாரிடம் அதையே சொல்லி வைத்தான்.

Thanks for reading!
If u like this story pls support me with ur votes and comments

Continue Reading

You'll Also Like

15.2K 633 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
22.9K 891 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
55.9K 3.2K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
79.6K 2.5K 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற...