அன்புடை நெஞ்சம் கலந்தனவே

By LakshmiSrininvasan

141K 8.6K 1.2K

எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அ... More

முதலில் கொஞ்சம்...
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45

அத்தியாயம் 19

2.6K 185 32
By LakshmiSrininvasan

"தேங்க்ஸ் ஃபார் கம்மிங்..நான் கேக் கட் பண்ணலாமா?" என்றாள் மஹா.

"ஓ..தாரளமா கட் பண்ணுங்க, நாங்க உங்களை தவிர வேற யாருக்கு வெயிட் பண்ணுறோம்னு நினைக்கிறீங்க" என்றான் மணி வேகமாக.

தினா அவனை கிள்ளிவிட்டு,மஹாவை பார்த்து "அவன் கிடக்கிறான், நேத்து அடிச்சது இன்னும் கொஞ்சம் இருக்கு..அதான்..நீங்க கேக்கை கட் பண்ணுங்க சிஸ்டர்" என்றான்.

எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து பாட கேக்கை கட் செய்தாள். திடீரென அன்னை முன்னே வந்து "வாங்க" என்றாள்.

மஹா மெலிதாக சிரித்து விட்டு கேக்கை எடுத்து "இந்தாம்மா" என்றாள். தன் பின்னால் நிற்பது யாரென தெரிந்தும் திரும்பாமல்.

"ஏய்..பாரு மாப்ள" என்றதும் "என்னது?" என்றாள் மகள்.

"இல்லடீ..பின்னால பாரு மாப்ள வந்திருக்காரு? நீ அவருக்கு குடு" என்றவள் "நீங்க முன்னாடி வாங்க வந்து கேக்கை வாங்கிக்கோங்க" என்றாள் விக்ரமிடம்.

மஹா திரும்பாமல் அன்னையை பார்த்தபடி நின்றாள்.விக்ரம் அவள் முன் வந்தான்.அவனது முகத்தில் ஒரு மெலிதான சிரிப்பு இருந்தது."ஹேப்பி பர்த்டேங்க" என்றான்.

"தேங்க்ஸ்" என்று மெலிதாய் சிரித்தவள், தாயிடம் கேக்கை நீட்டினாள்.

அவள் கண்களால் விக்ரமிற்கு கொடுக்கும்படி செய்கை காட்டினாள். வேறு வழியில்லாமல் விக்ரமின் கையில் நீட்டினாள்.அவனும் அவளிடம் இருந்து கேக்கை பாதி வாங்கி கொண்டான். "தேங்க்ஸ்" என்றான்.

மணி ,தினா காதில் "ஜி, இப்பிடி ஒரு பிறந்தநாளை என் ஜென்மத்துக்கு பார்த்தது இல்லை..யப்பா..என்ன லவ்வு..அடக்கன்றாவியே இதை பார்க்க நான் வராமலே இருந்திருக்கலாம்" என்றான்.

"ச்சு..சும்மா இரு" என்றான் அவனும் அதே தொனியில்.

எல்லோருக்கும் கைகளில் கேக்கை கட் செய்து கொடுத்தவள் தாய்க்கு மட்டும் ஊட்டினாள்.விக்ரம் சிரித்து கொண்டு எல்லோருடனும் இருந்தவன், மஹாவின் பெற்றோரிடம் "ஒரு ஒன் ஹவர் மஹாவை நான் வெளியே கூட்டிட்டு போகலாமா,நீங்க ஓகேன்னா.." என்று இழுத்தான்.

முதன்முதலில் அவன் பேசுவதை கேட்டதில் பெரியவர்கள் இருவருக்கும் சந்தோஷம் இருந்தாலும் அந்த இரவில் தனியாக அனுப்ப தயங்கியபடி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தார்கள்.பூரணி மகளிடம் கண்களால் சம்மதம் கேட்டாள்.மஹா எதுவும் பேசாமல் ஒரு பெருமூச்சுவிட்டாள்.பூரணி கண்களில் சிக்னல் கொடுக்கவும் லிங்கம் தயக்கத்துடன் "ரொம்ப இருட்டாகிடுச்சு,சீக்கிரமா வந்துடுங்க தம்பி..மஹா நீ போயிட்டு வா" என்றார்.

"தினா , நீங்க எல்லாரும் இங்க கொஞ்ச நேரம் இருங்க ..நாங்க இப்ப வந்திடுவோம்" என்றான் விக்ரம்.

"ஐயோ சாரி தம்பி..பேச்சு சுவாரசியத்தில் உங்களை உள்ளே கூப்பிடாமே..ரொம்ப சாரி தம்பி..எல்லோரும் உள்ள வாங்க" என்றாள் பூரணி.

"அப்பா இப்பவாவது கூப்பிட்டாங்களே" என்று முனகினான் மணி.

மஹா மணி அவளை கடக்கும் போது "நாங்க வரும் வரை நீங்க எல்லாரும் இங்கே இருங்க" என்றாள் நக்கலாக.

மணி ஒரு அடி பின்னாடி வைத்து தினாவிடம் "ஜி..நம்மள பிணைகைதின்னா சொல்லுறாங்க" என்றான் மெதுவாக.

"ம்ச்..சும்மா எதாவது பேசாமே உள்ளே போ" என்று மணியை தள்ளி கொண்டு உள்ளே போனான் தினா.

"போகலாம்" என்று கேட்டை நோக்கி கையை நீட்டினாள் மஹா. விக்ரமும் காரை நோக்கி நடந்தான். இருவரும் சிறிது நேரத்தில் அருகில் இருந்த ஒரு பீச்சிற்கு வந்து சேர்ந்தனர். அந்த நேரத்தில் சில சிறுவியாபாரி கடைசி நேர வியாபாரத்தை முடித்து கொண்டு இருந்தனர்.யாருமற்ற ஒரு திட்டிற்கு சென்ற இருவரும் இரண்டு அடி இடைவெளியில் அமர்ந்தனர்.

ஒரு பெருமூச்சுடன் மஹா "வொய் மீ?" என்றாள்.அவள் பேச்சில் சிறிது வேகம் இருந்தது.

விக்ரம் பதில் பேசாமல் அமைதியாக கடலை பார்த்து கொண்டிருந்தான்.

"எனக்கு இது வொர்க் ஆகும்னு தோன்றவில்லை.எனக்கு ஒரு பர்த்டே சர்ப்ரைஸை கூட ஒழுங்கா ரிசீவ் பண்ண தெரியாது..ரொம்ப கோவம் வரும்..திமிரு ஜாஸ்தி..உங்களுக்கு நிறைய எக்ஸ்பெக்டேசன் இருக்கும்,அதுல என்னால ஒன்றை கூட நிறைவேற்ற முடியாது.உங்களை மாதிரி ஆளுக்கு எல்லாம் நான் சரியா வர மாட்டேன்." என்றாள் மஹா.

"ம்..உங்களுக்கு கல்யாணத்தில் என்ன எக்ஸ்பெக்டேசன் இருக்குங்க?" என்றான் விக்ரம் கடலை பார்த்தபடி.

"ஸோ ..பேசத்தான் கூட்டிட்டு வந்திருக்கீங்க?ம்..குட்..என்னோட சிரிப்பும் தூக்கமும் என்னோட பார்ட்னரை கஷ்டபடுத்த கூடாது,அது தான் எனக்கும்..அதை தாண்டி எனக்கு வேற எந்த எக்ஸ்பெக்டேசனும் இல்லை" என்றாள் அவளும் கடலை பார்த்தபடி.

"ம்..என் சிரிப்பை ரசிக்கிற ஒருத்தருக்கு என் சிரிப்பு கஷ்டத்தை கொடுக்காதுன்னு நான் நம்புகிறேன்.உங்க தைரியமும் திமிரும் தான் உங்க அடையாளம் அது எனக்கு உருத்தலா இல்லை." என்றான் அவன்.

"கல்யாணத்துக்கு முன்னாடி அழகா கம்பீரமா தெரியும் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் அடங்காபிடாரி தனமா, மரியாதை கெட்டதனமாத்தான் தெரியும்." என்றாள் அவள்.

"ஒரு வேளை அப்பிடி இந்த கல்யாணம் வொர்க் ஆகாட்டி,நீங்க சொன்ன மாதிரி டைவர்ஸ் பண்ணிக்கலாம்ங்க" என்றான் விக்ரம்.

மஹா அவனை முறைத்து பார்த்தாள்.பேச்சை திசை திருப்ப விக்ரம்," இதை பேசி டென்சன் ஆகாமே, இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க பர்த்டே முடிய போகுது..கொஞ்ச நேரம் ஹேப்பியா உங்களுக்கு பிடிச்சதை செய்யலாமே?ம்..." என்று சுற்றும் முற்றும் பார்த்தவன் தூரத்தில் ஒரு பானி பூரி கடையை காணவும் "பானிப்பூரி சாப்பிடுறீங்களா?" என்றான்.

"ம்ஹூம்..ஆமா அதுவும் நிஜம் தானே..இன்னிக்கு முடிஞ்சா அப்புறம் அடுத்த வருஷம் தான் இந்த நாள்.. ம்..எனக்கு.."என்று சுற்றி பார்த்தவள். "ஹை பஞ்சுமிட்டாய்.."என்றபடி அந்த வண்டிகாரனை கூப்பிட்டு கொண்டு ஓடினாள். விக்ரம் மெலிதாய் சிரித்தபடி அவள் பின்னால் சென்று அதை வாங்கி கொண்டு இருவரும் பழைய இடத்திற்கு நடந்து வந்தார்கள்.

"கடைசியில் இந்த பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுக்க தான் பீச்சுக்கு கூட்டிட்டு வந்தீங்களா?நான் கூட ஏதோ வைர மோதிரம் கிஃப்ட் பண்ண போறீங்கன்னு நினைச்சிட்டேன்" என்றபடி வந்து பழைய இடத்தில் அமர்ந்தாள்.

"உங்களுக்கு வைரம் பிடிக்குமா?" மோதிரம் பிடிக்குமா?" என்றான் கேள்வியாக அவளை பார்த்து.

"தங்க வைரம் பிடிக்காத பொம்பிளங்க யாராவது இருப்பாங்களா என்ன ?" என்றவள் ரசித்தபடி பஞ்சுமிட்டாயை சாப்பிட்டு முடித்தாள்.

"உங்களுக்கு சந்தோஷம்னா என்ன? அப்பிடி இருந்தா இருக்க என்ன பண்ணுவீங்க?" என்றான் அவன் மெலிதான சிரிப்புடன்.

"என்னை கரெக்ட் பண்ண எதாவது ஐடியா கிடைக்குமான்னு ட்ரை பண்ணுறீங்களா? நான் சொல்லுறேன்..ஏன்னா உங்களுக்கு நான் சொல்லுவதில் இருந்து அப்பிடி எதுவும் கிடைக்காது" என்றவள் ஒரு நக்கல் பார்வையுடன் தொடர்ந்தாள்."எனக்கு எங்கம்மா கூட இருக்க பிடிக்கும், ஒரு மாதிரி பாதுகாப்பா இருக்கும், என் பர்த்டேக்கு எப்பவும் எங்கம்மா கூட இருக்கிற மாதிரி பார்த்துப்பேன்..ம்ம்..சந்தோஷமா இருந்தா பாட்டு பாட பிடிக்கும்..அப்புறம் பெரிசா எதுவுமில்லை" என்றாள்.

சிரித்து கொண்டு விக்ரம் "நீங்க சொன்ன மாதிரி எனக்கு இதுல இருந்து எதுவும் கிடைக்கவில்லை..ம்ம்..கிளம்பலாமா டயம் ஆகிடுச்சு?" என்றான்.

"யா..ஒரு 5 நிமிஷம் நான் போய் கடலில் கால் நணைத்துவிட்டு வந்து விடுகிறேன்" என்றுவிட்டு அவன் பேச இடம் கொடுக்காமல் கடகடவென கடலை நோக்கி சென்றாள்.

தொலைவில் இருந்து அவள் தண்ணீரை காலில் எத்தி எத்தி விளையாடுவதை பார்த்தவன் மெதுவாக சற்று முன் நடந்து போய் நின்றான். மஹா "இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்" என்றபடி பாடலை முனுமுனுத்து கொண்டே தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தாள்.

சற்று நேரம் அவள் பாடுவதை கேட்டவன், மீண்டும் தன் சிரிப்புடன் காரை நோக்கி சென்றான். அவன் சென்ற சிறிது நேரத்திற்குள் எல்லாம் மஹாவும் வந்து சேர்ந்தாள் கொஞ்சம் கூடுதல் சிரிப்புடன்.

அவளை காணவும் "உங்களை இனி நான் வா போன்னு கூப்பிடலாம்னு நினைக்கிறேன். எனக்கு இந்த கல்யாணம் நம்ம இரண்டு பேருக்கும் நல்லது பண்ணும்னு தோணுது..அதனால எனக்கு இது வேண்டாம்கிற எண்ணம் இல்லை.உனக்கு வேண்டாம்னா நான் உன் கழுத்தில் தாலி கட்ட போகும் அந்த கடைசி நொடியில் கூட இந்த கல்யாணத்தை நீ அவாய்ட் பண்ணிக்கலாம்.அப்பவும் அந்த முடிவுக்கும் நான் உன் கூட இருப்பேன். நீ சொன்ன மாதிரி இந்த நட்புக்கு கல்யாண சாயம் தேவையில்லை தான்." என்றான் கடகடவென அவள் கண்களை பார்த்து கொண்டே.

டக்கென அவள் சிரிப்பு மறைந்தது. "போகலாம்" என்றபடி காரின் கதவை நோக்கி போனாள்.

"ஒரு நிமிஷம்.." என்றவன் டக்கென அவள் கையை பிடித்து முத்தமிட்டான்.

அதை சற்றும் எதிர்பாரதவள் சிறு அதிர்ச்சிக்கு பின் "தள்ளியே நில்லுங்க, ஒரு நேரம் போல இருக்காது, பட்டென அறைஞ்சாலும் அறைஞ்சிருவேன்." என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்தாள்.

அவனும் எதுவும் பேசாமல் காரை எடுத்தான், சற்று தூரம் போகவும் அந்த காருக்குள் இருந்த அமைதியை கலைக்க பாட்டை போட்டான். அது அவன் பட பாடல் தினா இசையமைத்திருந்தான்.

"உங்களுக்கு நல்ல சாங் சென்ஸ், உங்க எல்லா படத்திலும் நல்ல ப்யூட்டிபுல் சாங்ஸ்" என்றாள் அவள் சற்று நேரத்திற்கு முன் நடந்த எதுவும் நினைவில் இல்லாதவள் போல.

ஆச்சரியமாக இருந்தாலும் அவனும் "தேங்க்ஸ்" என்றான். சற்று நேரத்திற்குள் எல்லாம் வீட்டு வாசலுக்கு வந்தார்கள் இருவரும். காரில் இருந்து இறங்கிய மஹா "நீங்க உள்ள வரவில்லையா?" என்றாள். "இல்ல, ஏற்கனவே டயம் ஆகிடுச்சு உள்ள வந்தா இன்னும் டயம் ஆகிடும், அவங்களை நான் கூப்பிட்டேன்னு வர சொல்லு" என்றான்.

"ம்..என் பர்த்டே அன்னிக்கு கடைசி சில மணிநேரம் கூட நான் ஹேப்பியா இருந்தேன். தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்." என்றுவிட்டு வீட்டின் உள்ளே சென்றவளின் கண்கள் சிரித்தது.

சற்று நேரத்திற்கு எல்லாம் எல்லோரும் அவர்களை வாசல் வழியனுப்பினார்கள்.

வழியில் தினா," ஏன் விக்ரம்.. அவங்களுக்கு இந்த கல்யாணத்துல பெரிசா இன்ட்ரெஸ்ட் இல்லியோ?ஆனா அன்னிக்கு அப்பிடி" என்று குழம்பினான்.

"என்னால சில விஷயத்தை இப்போ பேச முடியாது தினா, ஆனா இது சரியா வரும்." என்றான் தீர்க்கமாக.

"சாமி..எனக்கு கல்யாணம் ஆகாட்டி கூட பரவாயில்லை, ஆனா இந்த மாதிரி பொண்ணு மட்டும் எனக்கு வேண்டாம்" என்றான் மணி.

"உனக்கு இந்த ஜென்மத்தில் நடக்காத விஷயத்தை பத்தி எதுக்கு மணி பேசிகிட்டு" என்றான் தினா.

அங்கே ஒருசின்ன சிரிப்பு சத்தம் கலகலத்தது.விக்ரம் மனதில் உற்சாகம் கூடியிருந்தது.மஹாவின் மனம்,பயம் கலந்த இனம் புரியாத சந்தோஷம் ,அவள் இனி சிரித்து கொண்டே இருப்பாள் என சொல்லி கொண்டேஇருந்தது.

Continue Reading

You'll Also Like

766 14 2
அழகிய காதல் கதை ௨லகில் காதல் ௭ன்றும் தோற்பதில்லை காதலா்கள் தான் தோற்கிறாா்கள்.
141K 8.6K 46
எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவு...
1.8K 158 7
She slightly kissed his earlobe😚💋..... He breathed heavily as her touch affects him😊 I don't need to seduce u as long as i have this much effe...
4 0 2
Sirius era un hombre con un trastorno esquizofrénico que lo hacía creer que era un famoso streamer de Twitch. Pero en realidad, estaba ingresado en u...