அன்புடை நெஞ்சம் கலந்தனவே

Von LakshmiSrininvasan

140K 8.6K 1.2K

எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அ... Mehr

முதலில் கொஞ்சம்...
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45

அத்தியாயம் 15

2.4K 195 20
Von LakshmiSrininvasan

அன்று காலை பத்து மணி இருக்கும். மிகுந்த தயக்கத்துடன் தினா , ஆதித்யனாருக்கு போன் செய்தான்.

"சொல்லு தினேஷூ..என்ன எனக்கு கூப்பிட்டு இருக்கே? எப்போதும் தம்பி கூட தான் பேசுவே..இப்ப என்ன நான் ஞாபகத்துக்கு வந்திருக்கேன். என்ன தம்பி நான் எதுவும் ப்ரொடியூஸ் பண்ண போறேன்னு சொன்னானா என்ன?" என்றார் வேடிக்கையாக.

"ஏன் அங்கிள் அப்பிடி சொல்லுறீங்க? சும்மா கூட நான் உங்களுக்கு கூப்பிட கூடாதா என்ன?" என்றான் பேச்சை இழுப்பதற்காக.

"யாரு நீயா? சரி கூப்பிட்ட விஷயத்தை சொல்லு." என்று சிரித்தார்.

"லாஸ்ட் வீக் ஹைதிராபாத்தில் விக்ரம் திடீர்னு வர சொல்லி அந்த பொண்ணு கிட்ட கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு சொல்ல சொன்னாரு..என்னனு கேட்டேன் பிடி கொடுத்து ஒண்ணும் பதில் சொல்லவில்லை அதான்..உங்கிட்ட சொல்லிடலாம் னு கூப்பிட்டேன் அங்கிள்" என்று மென்று முழுங்கி சொல்ல வந்ததை சொல்லி முடித்தான் தினா.

"ம்..ஓ..சரி தினா..நான் பேசி பார்க்கிறேன்..இதை நீயா தானே சொல்லுகிறாய் இல்ல தம்பி எங்க கிட்ட பேச தயக்கபட்டுகிட்டு உன்னை சொல்ல சொன்னானா?" என்றார் அந்த அனுபவஸ்தர்.

விக்கித்து தான் போனது தினேஷிற்கு இருந்தாலும் சமாளித்து கொண்டு "இல்ல அங்கிள், நானா தான் உங்க காதுல போடலாம்னு கூப்பிட்டேன், ஏற்கனவே அவரு ரொம்ப கஷ்ட பட்டுடாரு அதான் உங்க கிட்ட சொல்லிட்டா நீங்க அதை கரெக்டா ஹேண்டில் பண்ணிடுவீங்கன்னு தான்..." என்று இழுத்தான் அந்த சின்னவன்.

"சரி தினா நான் தம்பிக்கிட்ட பேசுறேன்..என்கிட்ட பேசினதை பத்தி எதுவும் சொல்லிக்க வேண்டாம் என்ன?" என்றார் பெரியவர்.

"சரி அங்கிள், ஃபீரியா இருந்தா நீங்களும் ஆன்டியும் ஒரு நாள் வீட்டுக்கு வாங்க அங்கிள்." என்றான் தினா.

"இந்த வயசுல நாங்க என்ன பிஸியா இருக்கோம்?நீங்க எல்லோரும் தான் பிஸியா இருக்கீங்க, நீயும் உன் வொய்ஃபும் நம்ம வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சுல்ல நீங்க வாங்களேன்" என்றார் பெரியவர்.

"கண்டிப்பா அங்கிள், சீக்கிரம் விக்ரம் லைப்ல ஒரு நல்ல சேஞ்ச் வரணும், சீக்கிரம் எதாவது ஒரு பொண்ணை ஃப்க்ஸ் பண்ணுங்க அங்கிள். அப்ப தான் தேவையில்லாமல் இந்த மாதிரி விஷயதிலே எல்லாம் அவரு மாட்டாமே இருப்பாரு." என்றான் தினா.

"ம்..எங்களுக்கும் ஆசை தான், ம்ச்.. பிடி கொடுக்க மாட்டேங்கிறாரே உன் ப்ரெண்டு ..ம்ம்..பார்ப்போம்.." என்றார் அவர்.

"சரி அங்கிள் அப்ப நான் வைக்கிறேன்" என்றபடி போனை வைத்தான் தினேஷ்.

'அப்பாடா' என்று மூச்சு முட்டியது தினேஷற்கு, சற்று நேரம் பொறுத்து விக்ரம் போன் செய்தான்..நம்பர் பிஸி என்று வந்தது.சற்று நேரம் கழித்து கூப்பிட்ட போது ஆபிஸில் இருந்த விக்ரம் போனை எடுத்தான். "சொல்லு தினா" என்றான். அந்த பக்கம் அவன் தான் பேசியதை சொன்னான். யதேச்சையாக வாசலை பார்த்தான்,ஆதித்யனார் அவன் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தார்."அப்பா இங்க தான் வருகிறாங்க தினா, நான் அப்புறம் கூப்பிடுகிறேன்" என்று அவன் போனை வைக்கவும் ஆதித்யனார் அந்த அறைக்குள் வந்தமரவும் சரியாக இருந்தது.மகன் பேசி முடித்த கடைசி வாக்கியத்தில் இருந்து தினா தன்னுடன் பேசியது விக்ரம் சொல்லி தான் என புரிந்தும் கொண்டார்.

"என்ன தம்பி அசிஸ்டெண்ட்ஸ் எல்லாம் என்ன பண்ணுறாங்க?" என்றபடி பேச்சை ஆரம்பித்தார்.

"எடிட்டிங் பார்க்க சொல்லிருக்கேன் பா, குமாரு இங்க தான் இருக்கான், வர சொல்ல வா" என்றான் தன்மையாக.

"கூப்பிடேன்" என்றார் ஒற்றை வார்த்தையில்.

"குமாரூ" என்று அழைத்தான்.

அவன் வந்தான், பெரியவரை பார்க்கவும் "வாங்க சார்" என்று சிரித்தான். ஆதித்யனாரும் சிரித்துவிட்டு பரஸ்பரம் விசாரித்துவிட்டு "ஒரு மணி நேரம் யாரையும் உள்ள் விடாதே குமாரு..அப்பிடி முக்கியமானவங்க வந்தா கூட எனக்கு கூப்பிடு தம்பிக்கு கூப்பிட வேண்டாம்" என்றார் நறுக்கென.

"சரி சார்" என்றவன் அவருக்கு தலையசைத்து விட்டு விக்ரமை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.அவன் கதவை சாத்திவிட்டு செல்லவும், ஆதித்யனார் ஆரம்பித்தார்.

"சொல்லு தம்பி, என்கிட்ட பேச தயங்கிகிட்டு தான் தினேஷை தூதுவிட்ட போல, அவனும் நீ சொன்ன வேலையை சரியா செஞ்சிட்டான்..ம்ம்..இப்ப நீ சொல்லு" என்றார் பெரியவர்.

ஒரு பெரு மூச்சுவிட்டு விட்டு அந்த அறை எங்கும் கண்களை ஓடவிட்டு விட்டு கடைசியில் தகப்பனை பார்த்து "அந்த மஹாலக்ஷ்மி" என்றான்.

"ம்..பிடிச்சிருக்கா...பேசி பழகுறீங்களா?" என்றார் பட்டென.

"இல்லப்பா.." என்றவன் சற்று தயங்கிவிட்டு நடந்தவைகளை சுருக்கமாக சொன்னான். "அப்பா, அந்த முதல் மீட்டிங்கிற்கு அப்புறம் நாங்க நேரிலோ போனிலோ கூட பேசிக்கலை,ஆனா வேலைக்காக கொஞ்சம் சாட் பண்ண ஆரம்பிச்சோம்..அது அப்பிடியே கொஞ்ச நாள் தொடர்ந்திருச்சு,இனி வேண்டாம்னு கொஞ்ச நாளா நிறுத்திட்டோம்..இந்த கொஞ்ச நாளில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்குப்பா,அவங்க மெசேஜில் கூட மரியாதை இருக்காது ஆனா உண்மையும் நட்பும் இருந்தது..இவங்க தான் வேணும் சொல்ல மாட்டேன், ஆனா என்கூட அவங்க இருந்தா நல்லா இருப்போம்னு தோணுது. அம்மாவுக்கு அவங்களை பிடிக்கலை.. எனக்கு தெரியும் இது நடக்க வாய்ப்பு ரொம்ப கம்மி என்று ஆனா..இதை சொன்னா அட்லீஸ்ட் எந்த மாதிரியான ஈர்ப்பு, எதிர்பார்ப்பு எனக்கு இருக்கு என்றாவது உங்களுக்கு புரிஞ்சுக்க முடியும்னு தான் இதை சொல்ல நினைச்சேன்." என்று கூறிவிட்டு அமைதியான மகன்.

"ம்" என்று மோவாயை தடவி கொண்டே "நான் என்ன இதிலே செய்யணும்னு எதிர்பார்க்கிறே" என்றார் மகனை பார்த்து.

மெலிதாய் சிரித்தவன் "எதுவும் இல்லப்பா, ம்ஹூம்..அவங்க இல்லாட்டி எனக்கு வாழ்க்கையே இல்லைங்கிற அளவுக்கு எல்லாம் நானும் இல்ல அவங்களும் இல்ல..இன்னும் சொல்ல போனா ஏன் நான் இப்ப எல்லாம் அவங்க கிட்ட நான் ரொம்ப சாட் பண்ணலைங்கிற ஒரு விஷயம் அவங்களுக்கு ஒரு உறுத்தல் ஒரு கோபம் இருக்கு.என்னை முதல்ல பார்த்தப்போ என்னோட சிரிப்பு நல்லா இருக்குன்னு சொன்னாங்க, அவங்களை அழுக வைக்க என்னால முடியாது.ஸோ இது நடக்காதுன்னா நடக்க வேண்டாம்,ஆனா பக்கத்திலே போய் அவங்களை காய படுத்த வேண்டாம் னு நினைக்கிறேன்பா" என்றான் மகன் ஆக தெளிவாக.

மகனின் நிதானமும் அவன் கூறிய விஷயங்களும் ஏனோ தன் மகனின் குணத்தால் ஒரு பெருமையை ஆதித்யனாரிடம் உண்டு செய்ததனால் ஒரு சிரிப்பு அவரையும் அறியாமல் வெளிபட்டது.

"சரி தம்பி..என்னால என்ன செய்ய முடியும்னு பார்க்கிறேன்..ம்.. இது எல்லாம் ஒரு வேளை சரியா வந்தா அந்த பொண்ணு இதுக்கு ஒத்துக்குமா?" என்று தன் சந்தேகத்தை கேட்டார்.

"தெரியலைப்பா,என்னை மாதிரி அவங்களுக்கும் என் மேல ஒரு ஈர்ப்பு இருக்குனு தான் நினைக்கிறேன்" என்றான் மகன்.

"ம்..சரி "என்றவாறு எழுந்தார் பெரியவர். எழுந்த தகப்பனை உட்கார்ந்தவாறு பார்த்தான் விக்ரம்.அவன் கன்னத்தை தட்டி கொடுத்தவர் "இது நீ பார்த்த பொண்ணு இல்ல நாங்க பார்த்த பொண்ணு தான்,என்னால என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்" என்றவர் இறங்கி தன் வீடு வந்து சேர்ந்தார்.

உள்ளே நுழையவும் அன்னம் பிடித்து கொண்டாள். "என்ன இங்கே தான் இருந்த மாதிரி இருந்தீங்க எங்க போனீங்க ஒண்ணும் சொல்லாமே" என்றாள்.

"ம்..இங்க தான் நம்ம தம்பி ஆபீஸில் தான் இருந்தேன்" என்றார் சோபாவில் அமர்ந்தபடி.

"என்ன விஷயம் திடுதிடுப்புன்னு? என்ன படம் எதும் எடுக்க போறீங்களா?" என்றாள்.

"இல்ல..அது.." என்று இழுத்தவர் சமையல் செய்து கொண்டிருந்த கண்ணகியிடம் "இந்தா கண்ணகி, பின்னாடி எதும் வேலையிருந்தா போயி அதை பாரு ஒரு அரை மணி நேரம் கழிச்சு வா" என்றார்.

மனைவி தினுசாக பார்த்தாள். வேலைக்காரி அவளை பார்க்கவும் "அதான் சொல்லுறாங்க இல்ல போயிட்டு அரை மணி நேரம் கழிச்சு வா" என்றாள்.

வேலைக்காரி வெளியேறவும் தொண்டையை செருமினார் ஆதித்யனார். தண்ணீர் செம்புடன் அவர் அருகில் வந்து அமர்ந்த அன்னம் "என்னங்க மறுபடியும் எதுவும் பொண்ணு விஷயமா? என் தலையிலே மறுபடியும் இடியை இறக்கிடாதீங்க" என்று கலவரபட்டாள்.

அவள் கொண்டு வந்த தண்ணீரை குடித்தவர் ஆரம்பித்தார். மகனிடம் பேசியவை சகலத்தையும் சொல்லி முடித்தார்.

"அம்மாடியோவ்..என்ன அழுத்தம் இவங்க ரெண்டு பேருக்கும்..அவன் சொன்னா அதை நீங்க நம்புனீங்களா, எனக்கு இத்தனையும் கேட்டதுக்கு அப்புறம் சுத்தமா நம்பிக்கையே வரலை.இவனை ஏதோ அந்த பொண்ணு சிக்க வச்சிட்டாப்பா..அதான் இவன் இப்பிடி பேசுறான்." என்றாள் ஆற்றாமையில்.

"ம்ச்..கொஞ்சம் நிதானமா யோசி அன்னம்..அந்த பொண்ணை நம்ம தான் அவனுக்கு காட்டினோம்" என்றார் அதற்குள் அவள் "நீங்கன்னு சொல்லுங்க" என்றாள்.

"சரி நான் தான் கொண்டு வந்தேன்.அவன் வேண்டாம்னு தானே சொன்னான். இப்போ பேசி பார்த்ததில் ஏதோ பிடிச்சிருக்கு போல..உன்னையும் என்னையும் அவன் பணத்துக்கோ சாப்பாட்டுக்கோ நம்பி இருக்கானா? இல்லை..அவனுக்கு கொட்டுற பணத்தை தான் நாம கொஞ்சம் ரொட்டேசனிலும் பிசினஸிலும் போட்டுகிட்டு இருக்கோம்..அந்த முதல் பொண்ணை கூட்டிட்டு வந்தப்போ நமக்கு பேச கூட வாய்ப்பு குடுத்தாங்களா?இப்போ ஏன் இப்பிடி பேசுறான்னு கொஞ்சம் யோசிக்க முயற்சி பண்ணு அன்னம்"

அவளிடம் பதிலில்லை.

"எனக்கு அந்த பொண்ணை பார்த்தப்போவே என்னவோ மனசுக்கு பட்டுச்சு தம்பிக்கு சரியா இருக்கும்னு..ம்ச்..உனக்கு இதுல சம்மதம் இல்லாட்டி அவன் கண்டிப்பா இது வேண்டாம்னு சொல்லிட்டான்..இப்ப நீ தான் சொல்லனும்" என்றார் அவர்.

"நான் தான் ஆரம்பத்துல இருந்து சொல்லுறேனே இந்த பொண்ணு வேண்டாம்னு, மறுபடியும் எதுக்கு இப்பிடி கேட்குறீங்க?" என்றாள் வேகமாக.

"ஏய் கூறு கெட்டதனமா பேசுனதே பேசாதே..அவன் பிடிச்சிருக்குன்னு சொல்லுறான் சும்மா திருப்பி திருப்பி..உனக்கு என்ன அவங்களுக்கு புள்ள பிறக்குமான்னு தெரியணும் அதான் ஜோசியரு பிறக்கும் தான் சொன்னாரே அப்புறம் என்ன உனக்கு?" என்றார் சற்று அதட்டலாக.

"இவ்வளவு நாளா பிறக்கலையே? இனியும் அப்பிடியே ஆகிடுச்சுன்னா?" என்றாள் அவள் கேள்வியாக.

ஆதித்யனாரிடம் பதிலில்லை.எதுவும் பேசாமல் அமைதியானார்.

அன்று இரவு விக்ரமிற்கு சாப்பிட உட்கார்ந்தான். "தோசை ஊத்தவா?" என்றாள்.

"ஊத்தும்மா என்ன புதுசா கேட்குறீங்க?" – எதார்த்தமாக விக்ரம்.

"எல்லாம் புதுசா தானே இருக்கு,,அதான் எதையும் கேட்டு செய்யிறது நல்லது பாரு" என்றாள் குத்தலாக தோசை ஊற்றி அவன் தட்டில் வைத்து கொண்டே.

"ம்ஹூம்..அப்பா பேசினாங்களா?"என்றான் அவன்.

"ம்" என்று மறுபடியும் அடுத்த தோசையை வைத்தபடி. வேகமாய் சாப்பிட்டு முடித்தவன் "எனக்கு போதும்மா ஊற்றி இருப்பதோட நிறுத்திடுங்க" கடைசி தோசையை அவன் தட்டில் வைத்து விட்டு அவன் அருகில் உட்கார்ந்தாள் அன்னை.

சாப்பிட்டு கொண்டே"அம்மா, உங்களுக்கு பிடிக்காட்டி நாம மேலே இதை பற்றி பேச வேண்டாம்,ஏன்னா வீடு தேடி போய் ஏற்கனவே காயபட்ட ஒரு பொண்ணை மறுபடியும் காயபடுத்துற அளவுக்கு என்னை நீங்க தப்பா வளர்க்க வில்லை. இதை இப்பிடியே விட்டுடலாம்மா..காயபடுத்துறதுக்கு கல்யாணம் தேவையில்லைமா" என்றுவிட்டு எழுந்து கையை கழுவிவிட்டு தன் அறைக்கு படுக்க சென்றான்.

எல்லாவற்றையும் ஒழுங்கு செய்துவிட்டு தன் அறைக்கு வந்தாள் அன்னம். அப்போது தான் பெட் லேம்பை அணைத்துவிட்டு படுத்தார்.

"என்னங்க..எனக்கு குழப்பமா இருக்கு.."என்றாள் அன்னம்.

"ம்..எனக்கு நீங்க பேசினது கேட்டுது..என்ன குழப்பம்..அதான் உனக்கு வேண்டாம்னா மேல பேச வேண்டாம்னு தான் சொல்லிட்டானே அப்புறம் என்ன விட்டுட்டு பேசாமே தூங்கு" என்றார்.

"இல்லங்க என்னமோ எனக்கு ஒரு மாதிரி மனசு பிசையுது, நம்ம சம்மதத்துக்குகாக பிள்ள தவிக்கிற மாதிரி..ம்ச்.." என்றாள் தாயின் தவிப்புடன்.

"புரிஞ்சா சரி.. அதையே நினைக்காமே மாத்திரை எல்லாத்தையும் போட்டுட்டு படு" என்றவர் அதற்கு மேல் பேசாமல் உறங்கியும் போனார்.

அன்னம், மறுநாள் எழுந்து வெகு நேரம் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தாள்.ஆதித்யனார் காபி குடித்து கொண்டு இருந்தார். "இன்னிக்கு போய் அந்த பொண்ணை பார்க்கலாம்ங்க நீங்க ஏற்பாடு செய்யுங்க" என்றாள் நேரிடையாக

ஆதித்யனார் ஆச்சரியமாக மனைவியை பார்த்தார்.

Weiterlesen

Das wird dir gefallen

4 0 2
Sirius era un hombre con un trastorno esquizofrénico que lo hacía creer que era un famoso streamer de Twitch. Pero en realidad, estaba ingresado en u...
166K 5.5K 34
"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.
233K 9K 42
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்ல...
1.9K 58 2
ஒரு அழகானப் பெண்ணைப் பார்த்தவுடன் அடையத் துடிக்கும் திருமணமான ஒரு ஆணின் மனம்... வரம்பு மீறும் அவனுக்கு அவளின் பதில் என்ன?