சட்டங்கள் அறிவோம் சரித்திரம்...

By saranyavenkatesh

371 33 49

பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் குற்றங்கள், தீமைகளை, அநீதிகளை எதிர்த்து தங்களை பாதுகாக்க கொள்ள தேவையான... More

பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைத்தல்)
பிரிவு 2 (a)
சட்ட விளக்கம்
sexual harrasment at the workplace prevention , prohbition and redressal Act
வரதட்சணை தடுப்பு சட்டம்
பெண்களுக்காக எச்சரிக்கை பதிவு
பதிப்புரிமை சட்டம்(copy right act)1957
copy right
posco act
தொழிலாளர் இழப்பீடு சட்டம் (the workmens comensation act )
பிரிவு 2
தொழிலாளர் இழப்பீடு சட்டம்
maternity benefit act

வீழ்ந்து விடாதே பெண்ணே....

23 3 2
By saranyavenkatesh


மீண்டும் மீண்டும்

உன்னை காயப்படுத்தும்

அரக்கர்களை

மறந்துவிடு.....

காயத்தினால் உண்டாகும்

கண்ணீரை துடைத்து எரிந்து

வீறு கொண்டு

எழுந்து....

அவர்களின் முன்பு

முன்பு தலைநிமிர்ந்து.....

காயம் உண்டாக்கும்

அரகர்களுக்கு

தலைகுனிவை பரிசாக

அளித்திடு.....

உரிமை என்பது மற்றவர்கள் நமக்கு அளிப்பது அன்று... அது யாரும் நம்மிடம் இருந்து பறிக்க முடியாதது -அம்பேத்கார்

பெண்கள் பல்வேறு பரிமாணங்களையும், முகங்களையும் கொண்ட அழகான இறைவனின் படைப்பு.....

இன்றைய நிலையில் பெண்கள் வரதட்சணை கொடுமை, ஆண் பெண் பாகுபாடு, பணிபுரியும் இடத்தில் பிரிவினை, பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல், என் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு தான் இருக்கின்றனர், தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள தேவையான அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் சரத்துகளை காணலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பெண்களின் நிலையினை உயர்த்தவும் சமூக வேறுப்பாட்டில் இருந்து பாதுகாக்கவும் நிறைய சட்ட பிரிவுகளை உருவாக்கி உள்ளது.

1. சட்டத்தின் முன் அனைவரும் சமம்(சரத்து 14)

2. எந்தவொரு பெண்ணுக்கும் மதம், மொழி, இனம், பிறப்பிடம், பாலினம் முதலியவற்றால் பாகுபாடு காட்டப்பட கூடாது(சரத்து 15(1))

3.அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க எந்த ஒரு சட்டம் இயற்றலாம்(சரத்து 15(3))

4. வேலை வாய்ப்பில் ஆண் மற்றும் பெண் பாகுபாடு இன்றி திறமை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

5. வேலை வாய்ப்பில் ஆண் மற்றும் பெண் பாகுபாடு இன்றி வேலைக்கு ஏற்ப சம ஊதியம் அளிக்கப்பட வேண்டும்(சரத்து 39(d))

6. எந்த ஒரு பெண்ணும் பொருளாதார மற்றும் பிற காரணிகள் மற்றும் காரணங்களுக்காக நீதியை பெறுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது, சம வாய்ப்பின் அடிப்படையில் இலவச சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் -சரத்து 39(a)

7. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பிரசவ விடுமுறை மற்றும் சுகாதாரமான சூழ்நிலை பெற உரிமை உண்டு -சரத்து 42

8. பெண்களுக்கு சுகாதாரம், வாழும் நிலை, உணவு முறை இவற்றின் தரத்தை உயர்த்தவும் அரசின் கடமையாகும் - சரத்து 47

9. கிராம பஞ்சாயத்து தேர்தலில் மொத்த எண்ணிகையில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்- சரத்து 243 ட

10. ஒவ்வொரு நகராட்சியிலும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் சுழற்சி முறையில் நேரடி தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் - சரத்து 243 D

கல்வி கற்பதற்கான உரிமை:-

வறுமை ஒழிக்கவும், வேலையின்மை, சமூக ஏற்ற தாழ்வு முதலிய சமூக அவலங்களை களைய கல்வி ஒரு கருவியாக செயல்படுகிறது, மேற்குரிய சமுக பிரச்னைகளை களைய அரசாங்கம் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய கல்வி திட்டத்தை 2010 ஆம் ஆண்டு கொண்டு வந்தது.

பெண்களின் மனித உரிமைகளை பாதுகாக்க ஊக்குவிப்பதற்கும், தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள இந்திய தண்டனை சட்டம் குறிப்பிட்டப்படுள்ள சட்ட பிரிவுகள்:-

1. ஒரு பெண்ணுடைய மண்புக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது, தாக்க முனைவதும் குற்றமாகவும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். -பிரிவு 354

2. பதினாறு வயதுக்கு குறைந்த ஓர் ஆணை அல்லது பதினெட்டு வயதுக்கு குறைந்த பெண்ணை அல்லது சித்தசுவாதீனம் இல்லாத ஒரு நபரை அவர்களை காக்க கடமைப்பட்ட பாதுகாவலரின் சம்மதம்பெறாமல், ஆசை காட்டி இழுத்துக்கொண்டு அல்லது தூக்கிக் கொண்டு போவதைச் சட்டப்பூர்வமான பாதுகாப்பில் இருந்து கவர்ந்துசெல்லுதல் என்று கூறப்படும். விளக்கம்: -பாதுகாவலர்- என்ற சொல் அத்தகைய நபரைப் பராமரிக்கும் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள எவரையும் குறிக்கலாம். விதிவிலக்கு: முறைகேடாகப் பிறந்த குழந்தைக்குத் தான்தகப்பன் என்ற நல்ல எண்ணத்துடன் அந்தக் குழந்தையை எடுத்துச் செல்வது, இந்த பிரிவின்பால் படாது. ஒரு நபரைப் பராமரித்துப் பாதுகாக்கும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்ற நல்லெண்ணத்துடன் அப்படி செய்வது குற்றமாகாது. பிரிவு 354 -A

3. ஒரு பெண்ணைப் பலாத்காரமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படி அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகத் திருமணம் செய்துவைக்கப்படும் என்று தெரிந்திருந்தும் கவர்ந்து செல்வது அல்லது கடத்தி செல்வது குற்றமாகும். அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகப் பலாத்காரப்படுத்தி உடல் புணர்ச்சி கொள்வதற்காக அல்லது அத்தகைய உடல் புணர்ச்சிக்கு அவள் உட்படுத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண்ணைக் கவர்தல் அல்லது கடத்திச் செல்லுதல் குற்றமாகும். இந்தக் குற்றத்துக்குப் 10 ஆண்டுகள்வரை சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப்பயன்படுத்தி அல்லது குற்றத் தலையீட்டால் அல்லது வேறு எவ்விதமான கட்டாயத்தாலும் ஒரு பெண்ணை அவளுடைய சம்மதமின்றிப் பிறருடைய புணர்ச்சிக்கு ஆட்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் ஓர் இடத்தை விட்டு நீங்கும்படி தூண்டுகின்றவர்களும் இந்தப் பிரிவின்படி தண்டனைக்கு உரியவர்களாவர் -பிரிவு 366

4. ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட சொல், சைகை அல்லது செயல். கேட்கப்பட வேண்டும், அல்லது அத்தகைய சைகை அல்லது பொருள் அத்தகைய பெண்ணால் காணப்பட வேண்டும், அல்லது அத்தகைய பெண்ணின் அந்தரங்கத்தின் மீது ஊடுருவினால், ஒரு வருடம் அல்லது அபராதம் அல்லது இரண்டையும் நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கு எளிய சிறைத்தண்டனை விதிக்கப்படும்.பிரிவு 509

5. ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். விளக்கம்: இந்தப்பிரிவில் வரும் கொடுமைப்படுத்துதல் என்ற சொல் தரக்கூடிய பொருள் யாதெனில்; 1. ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டக்கூடிய அல்லது அவளுடைய உயிருக்கு, உடலுக்கு அல்லது சுகத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலைக் குறிக்கும் (அது உடலுக்கு அல்லது உள்ளத்துக்கு கேடுபயக்கக் கூடியதாகக் கூட இருக்கலாம்) 2. சட்ட விரோதமாக ஒரு சொத்தை அல்லது மதிப்புள்ள காப்பீட்டை அந்தப் பெண் மூலம் அல்லது அவளுடைய உறவினரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெற வேண்டும் என்பதற்காக அல்லது அப்படி அவளால் அல்லது அவளுடைய உறவினரால் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அந்தப் பெண்ணுக்குப் பொறுக்க முடியாத சங்கடங்களை உண்டாக்குவதைக் குறிக்கும். பிரிவு 498A

ஐபிசி- இந்திய தண்டனை சட்டத்தின்

1. பிரிவு 354 படி பெண்களில் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டால் ஒன்று முதல் ஐந்து வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

2. 354 A வின் படி பெண்களை பாலியல் ரீதியாக இணையத்தில் துன்புறத்தினால் அல்லது அது தொடர்பான கருத்துகள் வெளியிட்டால் 3 வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

3. 509 படி ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட சொல், சைகை அல்லது செயல் அல்லது பெண்களின் அந்தரங்கதை மீது ஊடுருவினால், ஒரு வருடம் அல்லது அபராதம் அல்லது இரண்டையும் நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கு எளிய சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

4. பிரிவு 499 மற்றும் பிரிவு 500 படி பெண்ணின் அடக்கத்தை கேள்விக்குறி அக்கும் நோக்கில் அவள் தொடர்பான தவறான கருத்துக்களை பொது இடங்களில் வெளியிடும் போகுது, இல்லை அவளை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டும் போகுது பாதிக்கப்பட்ட பெண்கள் அவதூறு வழக்கு தொடுக்கலாம், பிரிவு 500ன் படி இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

5. ஐடி சட்டம் பிரிவு 67ன் படி ஆபாச செய்தியை மின்னணு வடிவில் பொது வெளியில் வெளியிடும் பொழுது மூன்று வருட சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்,

6.ஐடி சட்டம் பிரிவு 66 படி பெண்களில் மரியாதையை குலைக்கும் விதத்தில் தவறான செய்திகளை கணினி மற்றும் தகவல் தொடர்பு சாதனம், மின்னஞ்சல் மூலம் அனுப்பினால் மூன்று வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு.

பெண்களே வீரம் கொண்டு எழுவீர், அச்சத்தை களைந்து வீரம் எழும் ஆடை உடுத்தி வெற்றி நடை போட்டுடுவீர், பெண்களுக்கு பாதுகாப்பான, அச்சம் இல்லாத, தைரியமான சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம்.....



Continue Reading

You'll Also Like

165K 5.9K 36
படுச்சுதான் பாருங்களே.......??????
432K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
176K 7.1K 43
பாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய
80.3K 10.1K 52
Peep in peep in , You are already in . This is a general fiction and the protagonists can be of your own choice .