நிரலி (நிறைவுற்றது)...

By incomplete_writer

14.3K 747 1.3K

இது முழுதும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம் மட்டுமே... பெண்ணவளின் வாழ்க்கை எப்படி தொடங்கி எங்கோ சென்று எதிலே... More

நிரலி-1
நிரலி -2
நிரலி-3
நிரலி-4
நிரலி-5
நிரலி-6
நிரலி-7
நிரலி-9
நிரலி-10
நிரலி-11
author note

நிரலி-8

849 56 36
By incomplete_writer

ஆமாம் இனி என் வாழ்க்கையில் என்ன தண்டனை பெரிதாய் கிடைக்கப்போகிறது.. உள்ளுக்குள் அழுது புலம்பி கரைந்தவர் விடியலில் எழுந்து தன் வேலைகளை முடித்து கொண்டு முதல் வேலையாய் தன் மகளுக்கு அழைப்பு விடுத்தார்..

நான்கு முறை அழைத்தும் ஏற்கவில்லை கவலையாக இருந்தாலும் தனக்கான தண்டனை அல்லவா ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்...

எப்பா ராசு இங்க செத்த வாப்பா.. என்னமா சொல்லு.. கால்லெல்லாம் ஒரே வழியா இருக்கு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்த தேவலை.. சரிம்மா சாப்பிட்டு கெளம்பி இரு கூப்பிட்டு போறேன்...

அப்படியே உங்கிட்ட இன்னொன்னு சொல்லணும் ராசு.. சொல்லுமா.. அது ஒன்னுமில்ல ராசு.. ஒன்னுமில்லன்னா விடுமா எதுக்கு அப்பறம் சும்மா கூப்பிட்டுக்கிட்டு இருக்க.... எப்பா ராசு நில்லு எதுக்கு இப்படி ஓடுறவ..

அட சொல்லும்மா எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு..  அது அந்த சிரிக்கிய ஒரு எட்டு டவுன் ஆஸ்பத்திரில கூட்டி கொண்ட காமிச்சுட்டு வந்தா தேவலை... யாரமா சொல்ற.. புரியற மாதிரி பேசமாட்டியா நீ . 

அதான்யா அந்த ராங்கிக்காரி உன் மூத்த மவ அவளதான்... என் மகளுக்கு என்ன செய்யுது உடம்பு சரி இல்லையா அப்படி ஒன்னும் சித்ரா கூட என்கிட்ட சொல்லையே.. இளா சொன்னாளா அவளும் என்கிட்ட ஒன்னும் சொல்லல.. சித்ரா சித்ரா... எதுக்கு இப்போ இவளோ சத்தம் இங்க தான் இருக்கேன் சொல்லுங்க....

நிரலிக்கு உடம்பு சரியில்லையா அம்மா சொல்லுது என்ன ஆச்சு என் பொண்ணுக்கு.. இருங்க இருங்க அவ நல்லா தான் இருக்கா. உங்க அம்மா ஏதாவது கனவு கண்டுருப்பாங்க என அந்த கிழவியை முறைத்து கொண்டே கூற..

ஹ்ம்ம்க்கும் நெத்தரை கண்டா நான் இப்போ சொல்றேன்.. ஊர் உலகமே பேசிக்குது உனக்கு தெரியாத என்ன ...  என்னமா பேசுற நீ என் புள்ளைக்கு உடம்பு சரி இல்லைனு வீட்ல யாருக்கும் தெர்ல ஊரு உலகம் பேசிக்குதா.. பைத்தியம் ஏதும் புடுச்சுருக்கா உனக்கு..

டேய் ராசு நிப்பாட்டுடா சும்மா என்னையே குத்தம் சொல்லாம.. எனக்கு கல்யாணம் முடுஞ்சு அடுத்து பத்து மாசத்துல நீ பொறந்த.. உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் அடுத்த பத்து மாசத்துல இதோ இவ வயித்துல அந்த திமிரு புடுச்சவ பொறந்தா.. ஆனால் பாரு அவளுக்கு கல்யாணம் முடுஞ்சு மூணு வருஷம் ஆகப்போகுது அவ வயித்துல ஒரு புழு பூச்சி கூட முளைக்களை பாக்குற எல்லாரும் கேட்குறாங்க உன் பேதிக்கு என்ன கொறைனு அதான் சொல்றேன் அவளை ஆஸ்பத்திரில கொண்ட காமிச்சுட்டு வான்னு...

அவரின் பேச்சை கேட்டு உச்சகட்ட கோபத்திற்கு சென்றனர் ராஜாவும் சித்ராவும்.. சித்ரா கோபத்தில் வாயை திறக்க போக ஆறுதலாய் அவள் கைப்பற்றி அழுத்தம் கொடுத்து தடுத்தவர்.. அதில் நான் பேசிக்கிறேன் என்பது போல கண்களாலே கூறிவிட்டு.. அம்மா உனக்கு ஒன்னு புரியையா நீ கட்டிக்கிட்டு வந்தவரும் ஆம்பளை.. என் பொண்டாட்டிய கட்டிக்கிட்டவன் அதாவது உன் மகனும் ஆம்பளை.. அதான் பத்து மாசத்துல தொட்டில் ஆட்டிருக்கோம்..

உனக்கு இதுக்குமேல பதில் தேவைப்படாதுனு நினைக்குறேன் அதையும் மீறி நீ பேசினால் உன்னைய ஒன்னும் சொல்லமாட்டேன் செய்யமாட்டேன்.. என் பொண்டாட்டி புள்ளைய கூப்பிட்டு வீட்ட விட்டு போய்டுவேன்... இதுவரை அம்மா அம்மான்னு நீ சொல்ற எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டி ஆட்டி இன்னைக்கு என் புள்ள வாழ்க்கையை என் கையாலே அழுச்சுட்டேன்.....

இனியும் நீ யோசிக்குற கேவலமான விஷயத்துக்காக ஏதேதோ சொல்லி உன் பக்கம் என்னை இழுக்கலாம்னு நினைக்காத.. வேணாமா போதும் அம்மா பாசம் பாசம்னு சொல்லி சொல்லி இன்னைக்கு என் புள்ளைக்கு என் பாசத்தை கொடுக்கமே போய்ட்டேன்.....

என் பிள்ளை என்கிட்ட பேசமாற்ற ஏன் என்னைய அப்பான்னு கூட கூப்பிடமாற்ற அது எல்லாத்துக்கும் நீ காரணம்னு சொல்லலை நான் தான் காரணம் அம்மானு உன்மேல வச்ச அளவு பாசத்தை என் பொண்டாட்டி புள்ள மேல வைக்காம விட்டுட்டேன்.. இவ்வளவு நடக்குறது தெரிஞ்சும் நீ இன்னும் என் பிள்ளைய குத்தம் சொல்றியே.. உன் ஒரு வார்த்தைக்காக தான் எதுவும் விசாரிக்காம கூட கட்டி கொடுத்தேன்..

ஆனால் அவன் எப்படிப்பட்டவனு உனக்கு தெரியும் தானமா அப்பறம் ஏன்மா இப்படி பண்ண வலிக்கிதுமா ரொம்ப சாப்பிட முடியலைம்மா இன்னும் ஏன்மா இப்படி பேசுற என் புள்ள வாழ்க்கை போச்சுமா..... செத்துடலாம் போல இருக்குமா...

டேய் அப்பு என் ராசா எனக்கு அவனை பத்தி தெரியாதுடா.. அவ வந்து கால்ல வந்து விழுந்து அழுகவும் புத்தி அப்படி போச்சுடா... . என் அக்கா மகடா பொம்பளைப்பில்லை எனக்கு இல்லைடா அதான் அவ மேல கொஞ்சம் பாசம் அதிகம்.. அதுனால நம்ம குடும்பம் எப்போதும் ஒன்னா இருக்கும்னு நெனச்சு தான்டா ராசு இப்படி பண்ணேன்... என்னை மன்னுச்சுடுடா...

சித்ரா ராஜாவின் அழுகைக்கான காரணம் புரியவில்லை.. நிரலிக்கு பிடிக்காத திருமணம் அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்றே இதுவரை நினைத்து கொண்டிருந்தாள்..  இன்று கணவன் பேசியதை வைத்து பார்த்தாள் ஏதோ பெரிதாய் நடந்திருக்கும் போல என்பது மட்டும் புரிந்தது....

என்னங்க என்ன பேசிக்குறீங்க என்ன ஆச்சு எனக்கு ஒன்னும் புரியலை என்னனு சொல்லுங்க... சொல்றேன் சித்ரா.. கொஞ்ச நேரம் இரு அப்பறம் நிரலிக்கு அடுத்த லீவ் எப்போ.. இனி அடுத்த மாசம் தான்.. சரி நான் செய்த தவற நான் சரி பண்ண நினைக்குறேன் நம்ம நிரலி நமக்கு பொண்ணாவே இருந்துடட்டும் சித்ரா..

என்ன பேசுறீங்க நீங்க கல்யாணம் பண்ணி கொடுத்து வருஷம் மூணு ஆச்சு இப்போ போய் இப்படி வார்த்தை பேசிகிட்டு ஊரு உலகம் என்ன சொல்லும்னு யோசிக்காம சொல்றிங்க.. என்ன பெத்த புள்ளைங்க நீங்க ஆட்டிவைக்குற மரபொம்மைன்னு நினைச்சீங்களா..

நிரலி உங்க கிட்ட சொன்னாளா எனக்கு இந்த வாழ்க்கை புடிக்கலைனு.. நீங்க கல்யாணம் செய்துக்க சொன்னதும் பண்ணிக்கணும் வேண்டாம்ன்னு சொன்னா விட்டுடணுமா.. எதுவாக இருந்தாலும் அவளை கேட்டு முடிவு எடுங்க... சித்து ஏன் இப்படி எல்லாரும் என்னை வார்த்தையால கொல்றிங்க முடியலை என்னால தப்பு செய்திட்டேன் தான் அதை திருத்திக்க தானே நினைக்குறேன்...

தப்பு இன்னைக்கு சரி பண்ணிடுவீங்க சரி நாளைக்கு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க முடியுமா.. முடியும் சித்ரா கண்டிப்பா என்னால முடியும்... எப்படி பண்ணுவீங்க இப்போ முப்பது வயசுல ஒரு ஆளு அடுத்து என்ன நேரடியா அறுபதாம் கல்யாணம் பண்ணிவைப்பிங்களா இன்னொருத்தன் கூட..

சித்து என பாவமாய் தன் மனையாளியை பார்க்க அவளோ ne செய்யாததையா நான் சொன்னேன் என்பது போல ஒரு கோபமான பார்வை வீச.. நிரலி எனக்கும் பொண்ணு தானடி.. ஆமா நான் இல்லைனு சொல்லலையே...

பொண்ணு பொறந்ததும் சந்தோசமா தூக்குனீங்களே அன்னைக்கு உங்க பொண்ணு தான்.. அவளுக்கு ஆசையா பேரு வச்சீங்களே அன்னைக்கு அவ உங்க பொண்ணு தான்.. ஊர்ல எனக்கு பொண்ணு பொறந்துருக்குனு அவளை தலையில தூக்கி கொண்டு சுத்துனீங்களே அன்னைக்கு அவ உங்க பொண்ணு தான்... என்னைக்கு அவளை அவ விருப்பம் இல்லாம உங்க அப்பா  என்ற பாசத்தை கட்டமா ஆம்பளை என்ற வீரத்தை காட்டி அவளை அடுச்சு இதுக்கு சம்மதிக்க வச்சீங்களோ அன்னைக்கே அவளோட அப்பான்ற பந்தம் முடுஞ்சு போச்சு இனி என் பொண்ணு என் பொண்ணுன்னு சொல்லாதீங்க வார்த்தைக்கு உயிர் இல்லாம போய்டும் ....

சித்து நீயே உன்கையாலே என்னை கொன்னுடு இதுக்கு மேல ஒன்னும் சொல்லாத.. ஏற்கனவே நான் செத்துட்டேன் மேலும் மேலும் என்னை கொல்லாத..

அவரின் கண்ணீர் தான் சித்ராவை கொஞ்சம் நிதான படுத்தியது..  சரி நான் நிரலி வந்ததும் பேசுறேன்.. இல்லை இந்த வாரம் வீட்டுக்கு வர சொல்லி பேசுறேன்...

எதுக்குமா இப்போ இவளோ அவசரமா வர சொன்ன.. போன்ல சொல்லுன்னு சொன்னா வீட்டுக்கு வானு சொல்லிட்டு போன் வச்சுட்டா.. இத்துணை தடவை கூப்பிட்டும் எடுக்கலை.. யாருக்கும் ஒன்னும் இல்லைல என கேட்டுக்கொண்டே தனக்கு நேரெதிரில் அமர்ந்திருக்கும் தந்தையை பார்க்க... தன்னைப்பற்றி மறைமுகமாய் கேட்கப்பதை நினைத்து மனம் குமுறினார் ராஜா...

அதெல்லாம் ஒன்னும் இல்லைடா எல்லாரும் நல்லா இருக்கோம்.. சரி அப்பறம் எதுக்கு இப்போ.. உங்கிட்ட கொஞ்சம் பேசலாம்னு தான்டா... ஹான் சொல்லுங்க... நீ சந்தோசமா இருக்கியாடா.. ஏன்மா எனக்கு என்ன செம்மயா கல்யாணம் பண்ணி வச்சிக்கிங்க அப்பறம் எனக்கு என்ன கவலை சந்தோஷம்னா சந்தோசம்.. இந்த உலகத்துல என்னைவிட யாரும் அதிக சந்தோசமா இருக்கவே முடியாது...

அப்பறம் ஏண்டா அப்பா கிட்ட பேசாம சோகமாவே இருக்க... என்னமா செய்றது புருஷன் கொடுக்குற சந்தோஷத்துல மத்த எல்லாரும் மறந்து போய்ட்டாங்க.. என தன் தந்தையை ஆழ்ந்து பார்த்து கொண்டே கூற.. இதுவரை அவளை பார்த்திருந்தவர் தலையை குனிந்து கொண்டார்...

அவ்ளோதானேமா தெருஞ்சுகிட்டியா உன் சந்தேகம் தீர்ந்ததா விடு.. அம்மாடி நிரலி ஏன்டா பொய் சொல்ற என அதுவரை அமைதியாக இருந்தவர் கண்களில் கண்ணீரோடு தன் மகளை பார்த்து கேட்க.  அதுவரை கோபத்தோடு இருந்தால் கொஞ்சம் சந்தமாகிவிட்டு..

நான் ஏன் பொய் சொல்ல போறேன்.. எனக்கு எந்த பிரெச்சனையும் இல்லை இனி இதை பத்தி பேசாதீங்க.. அப்பறம் இது என்னடா என அவள் போனமுறை வந்த போது மறந்து விட்டு போயிருந்த டைரி இளா மூலம் தன்னிடம் வந்ததை எடுத்து கொடுக்க.. சித்ரா நிரலி இருவருக்கும் அதிர்ச்சி தான்..

இது எப்படி அப்பா கிட்ட என நிரலிக்கும்.. இது என்ன புதுசா இருக்கு என சித்ராவும் இரு வேறு மனதோடு அதிர்ச்சியில் இருந்தனர்....

Continue Reading

You'll Also Like

1.4K 148 3
our lovely darlings one shot 😍😍😍
1.5K 34 1
Hi my dear brothers and sisters and my lovely friends "Kathalukku language oru problem illa " ithu oru short story padichi parunga i hope you like it
149 12 9
story between lovers and family