நிரலி (நிறைவுற்றது)...

By incomplete_writer

14.3K 747 1.3K

இது முழுதும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம் மட்டுமே... பெண்ணவளின் வாழ்க்கை எப்படி தொடங்கி எங்கோ சென்று எதிலே... More

நிரலி-1
நிரலி -2
நிரலி-3
நிரலி-4
நிரலி-6
நிரலி-7
நிரலி-8
நிரலி-9
நிரலி-10
நிரலி-11
author note

நிரலி-5

1K 54 31
By incomplete_writer

இவள் அறைக்கு செல்வதற்குள்ளே அவன் குடி போதையிலும் நன்றாக சாப்பிடத்திலும் உறங்கி போனான் ... ஆனால் நிரலிக்கோ அந்த மது வாடையும் ஒப்பவில்லை மனமும் கேட்கவில்லை ஆனால் வேறு வழியும் இல்லை... அவன் கட்டிலில் படுத்திருந்ததால் அங்கு படுக்க விருப்பமிலத்தவள் படுக்க விரிப்பு கூட எடுக்காமல் வெறும் தரையில் படுத்துக்கொண்டாள்..  எங்கு தான் அருகில் சென்று அவன் எழுந்துவிட்டால் என்ன செய்வதென்று வெறும் தரையில் இருக்க   நடுக்கத்தில் உறக்கம் வராமல் ஏதேதோ நினைத்து கொண்டே கண்ணீரோடு உறங்கியும் போனால்..

இதே போல் தினமும்  அவன் உறங்கிய பின்னே அறைக்குள் வருவாள் ஐந்து  நாள் இது தொடர ஆறாம்  நாள் அவனோ உறங்காமல் அவள் வரும்வரை விழித்திருந்தான்... அறைக்குள் சென்றவளுக்கோ கை கால்கள் வலுவிழந்து நிற்கவும் முடியாமல் வெளியில் செல்லவும் முடியாமல் கண்ணீர் முட்டி கொண்டு வர கதவருகே நின்று கொண்டிருக்க....

அவளை நிமிர்ந்து பார்த்தவன் என்ன விடியுற வரை அங்க தான் நிற்க போறியா இங்க வா என கூப்பிட அவளோ தயங்கி தயங்கி அவனை பார்க்க....

ஒருதடவை சொன்னால் உடனே வரணும் திரும்ப திரும்ப பேச வைக்க கூடாதென சொன்னவன் சொன்ன வேகத்தில் அவள் அருகில் சென்று அவளை இழுத்து கட்டிலில் தள்ளினான்....

நிரலி பதறியடித்து கட்டிலில் இருந்து எழுந்து சுவற்றில் ஒன்றி நிற்க.. ஹே என்னை ரொம்ப கோபப்படுத்தாத இப்போ என்ன டி புருஷன் தானே நான் எதுக்கு இப்படி பண்ற என கூறி அவளை நெருங்க அவளுக்கு மது வாடை ஒப்பாமல்...

அ.. அது.. எனக்கு இந்த ஸ்மெல் குமட்டுது முடியலை ப்ளீஸ் மாமா கொஞ்சம் தள்ளி போங்க என்றிட அவ்ளோதான் தான் தாலி கட்டிய மனைவி தன்னை நிராகரிக்கிறாள் என்பது புரிய வேலனுக்கு கோபம் தலைக்கு ஏறியது  ...

இனி குடிக்காதீங்க எங்க அப்பா குடிக்கவே மாட்டாங்க என நிரலி கூறிட..  அப்போ உங்க அப்பனையே கல்யாணம் செய்துகிட்டு குடும்பம் நடத்த  வேண்டியது தானே எதுக்கு டி என்னைய கட்டிகிட்ட என விஷமிக்க வார்த்தை கொடுக்கென கொட்ட...

ஹையோ எதுக்கு இப்படி பேசுறீங்க நீங்க மனுஷன் தானே இல்லை மிருகமா.. மிருகம் கூட அது அது இனம் கூட தான் சேரும் உங்களலாம் எந்த ஜென்மத்துலயும் சேர்க்க முடியாது என்று காதை பொத்தி கொண்டு நிரலி கத்த......

ஆமா டி நான் மனுஷன் இல்லை தான் ஆனால் பாரு என்னை மிருகத்தோடயும் சேர்க்க முடியாதுனு சொல்லிட்டா.. இனி இந்த அற்ப பிறவி கூட தான் உன் வாழ்க்கை..

நான் குடுச்சால் உனக்கு புடிக்கலையா பக்கத்துல வந்தா கசக்குதா என கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தவன் அவளது இதழை சிறை செய்து வன்மையாக முற்றுகையிட வலி தாங்கமுடியாமல் நிரலி வேலணை தள்ள அவனோ கீழே விழாமல் நொடியில் கட்டிலின் விளிம்பை பிடித்து சுதாரித்து நின்றான்...

நிரலி இதழை தொட்டு பார்க்க அவனது வன்மையான முறையால் உதட்டின் ஓரத்தில் கிழிந்து ரெத்தம் கசிந்தது வலி தாங்காமல் கண்ணீர் சிந்த நிமிடத்தில் தன் பலம் கொண்டு அவளது கன்னத்தை பதம் பார்த்தான் வேலன்..

யாருகிட்டடி உன் வேலை காட்டுற கட்டுன புருஷன கீழ தள்ளுற அப்போ யாரு உன் பக்கத்துல வந்தால் புடிக்கும் சொல்லு டி சொல்லு என்று இன்னும் இரண்டு அடிகள் கொடுக்க சுருண்டு விழுந்தால் நிரலி..

அவளை இழுத்து கட்டிலில் தள்ளியவன் வன்மையாக அவளை ஆக்கிரமித்தான் அவனுக்குள்.. மனதால் அவனின் வார்த்தைகளால் சோர்ந்து போனவள் மேலும் அவனது சில பல அடிகளில் சுத்தமாய் சுருண்டு போனவள் இப்போது அவன் செயல்களை தடுக்க முடியாமல் கண்ணீரோடு போராடி கொண்டிருந்தாள்...

அவனை தடுக்க வழி தேடி தேடி சோர்ந்து தான் போனாள்.. அந்த பதினேழு வயதில் திருமணம் என்று ஒரு பெயர் சூடி அவளை ஒரு கொடூரனிடம் ஒப்படைக்க.. அவனோ அவனின்  செயல்களின் கொடுமை அதிகரித்து கொண்டே போனான்.. அவனின் வேகம் தாங்க  முடியாமல் கண்ணீரோடு கதறியும் அவன் தன்னை ஒரு சகமனுசியாக கூட மதிக்காமல் அவனின் இச்சைக்கு தன்னை கொடுமை படுத்துவதை ஒரு கற்பழிப்பு போன்றே கருதினாள்...

குடும்பம் தாம்பத்தியம் என்பது ஓரளவு புரியும் வயது தான் ஆனால் அதை தன் கணவன் என்னும் கொடூரன் கையாள்வதை கண்டு உயிரோடே செத்து தான் போனால்...

தனது கடைசி முயற்சியாக தன் முகத்திற்கு நேராய் இருந்த அவனின் முகத்தை கையில் ஏந்த அவனோ அவளது கைகளை தட்டிவிட்டு மீண்டும் தன் வேளையில் கவனமாக.... மீண்டும் அவனது முகத்தை கைகளில் எந்த இம்முறை அவளை ஒருகணம் அவனும் காண.. இவளோ கண்ணீரோடு வலிக்குது மாமா என்றிட அவ்ளோதான்  அதை காதில் வாங்கியவன் போன்று கூட அல்ல..

தனது உயிர்நீரை அவளுக்குள் சேர்த்தவன்... சரிந்து அவள் அருகில் படுத்து கொண்டு என்கூட வலிக்குதுனா.. யாரு கூட சந்தோசமா இருப்ப என்று மேலும் ஒரு வார்த்தை விட.. இவன் கேட்கும் கேள்விக்கும் அவன் கொடுக்கும் வலிகளே கம்மிதான் என்பது போல் கண்ணீர் வடித்தாள்...

சிலநிமிடம் அவன் உறங்கி போக நிரலி எழ முடியாமல் எழுந்து வந்து மீண்டும் கீழே படுத்து கொண்டாள்.. எங்கே மீண்டும் அவன் தன்னை ஏதும் செய்திடுவானோ என்ற பயமே அவளை உறங்க விடாமல் விரட்டி அடித்தது...

ஏனோ பெண்களின் நிலை மட்டும் இந்த விஷயத்தில் மாறாது போலும் என்றும்...

பாதி உறக்கத்தில் தன் உடம்பின் பாரம் அதிகரிப்பது போன்று இருக்க கண்விழித்து பார்க்க வேலன் அவளது உடைகளை அவசரமாய் அவிழ்த்தெறிந்தான்... எல்லா பலமும் இழந்தவள் அதற்கு மேல் அவனை தடுக்கவா முடியும்...

மீண்டும் அவனது முறையில்லா  உறவை வெறுப்போடு சகித்து கிடக்க அவனோ தன் வேலை முடிந்ததும் மேலும் எழுந்து சென்று கட்டிலில் படுத்து கொண்டான்...

காலையில் எழுந்தவள் தன் கோலத்தை கொண்டு நொந்து அழுதால்.. ஏனோ தனக்கென பெரிதாய் திருமண கனவுகள் இல்லையென்றாலும் பெண்களுக்கான சாதாரண ஆசை தன் கணவன் தன்னை துவண்டு விழும் போது அரவணைக்க வேண்டும் என்பது தான்..

ஆனால் அவளுக்கு கிடைத்தவனோ தன் எச்சை தீர்ந்த பின் அங்கு நிரலி என்று ஒருவள் இருப்பதை கூட கணக்கில் சேர்க்காமல் இருந்தான்...

ஆறு மணி அளவில் எழுந்து முகம் கழுவி கொண்டு வெளியில் வந்தவள் வேலனின் தாயாரிடம் அத்தை உடம்பெல்லாம் வலிக்குது ஏதோ உடம்பு சரி இல்லாத போல இருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வந்து வேலை பார்க்கவா என்று கேட்டிட அவ்ளோதான்...

வேலனின் தாயார் கொதிகொதித்து போனால்... ஆட தெரியாத சிறுக்கிக்கு தெரு கோணலாம்... வேலை பார்க்காம இருக்குறதுக்கு உடம்பு சரி இல்லைனு பொய்யா சொல்ற.. என கேட்டு அடிக்க வர...

ஜெயந்தி பாவம் டி அவளுக்கு தான் உடம்பு முடியலைன்னு சொல்றளா அதுக்கு ஏன் கோபப்படுற நீ பார்க்காத வேலைய இன்னைக்கு மட்டும் நீ பாரேன் என அப்போது தான் வாயை திறந்தார் வேலனின் தந்தை சிங்காரம்..  யோவ் கைய விடு இல்லைனா இந்த அடி உனக்கு விழும் என்றிட... அவரோ கப்சிப்பென வாயை மூடிக்கொள்ள... நிரலி அவர் அடிப்பதற்குள்  நான் வேலை பார்க்கிறேன் என கூறி அணைத்து வேலைகளையும் பார்க்க தொடங்கினாள்..

அதன் பின் தான் நிரலியின் தந்தை வந்து சென்றது....

மறுநாள் நிரலியை அழைத்து செல்ல அவரது தந்தை வந்திருக்க அவளோ தான் இனி படிக்கவில்லை என்று மறுத்துவிட...

அதன்பின் வேலனின் தாயார்.. என்னமா கண்ணு இப்படி பேசுற பொம்பள பிள்ளைக்கு படிப்பு தான் முக்கியம் உன் மாமன் உனை படிக்க வைக்க ரொம்ப ஆசைப்படுறான் அவன் தான் படிப்பு செலவு எல்லாம் செய்வேன்னு சொன்னான்.. ஆனால் தம்பி தான் எல்லாம் நானே செய்றேன்னு சொல்லிடுச்சு என கூற நிரலி ஒரு நம்பாத பார்வை அவரை பார்த்துவிட்டு...

இல்லைப்பா நான் இனி படிக்கலை நான் இங்கே இருக்கேன்.. அதான் கல்யாணம் செய்து வச்சுட்டீங்க உங்க கடமை முடுஞ்சது இனி நான் படிக்கறது வீட்லே இருக்கது எதுவா இருந்தாலும் அது எங்க குடும்ப விஷயம் நீங்க தலையிட வேண்டாம் என்று கூறிட.. ராஜா தன் மகளை பாவமாக ஏக்கத்தோடு பார்க்க.. அவளோ நீங்க இது பத்தி தான் பேச வந்திருந்தால் இனி இதைப்பத்தி பேசவேண்டாம் கிளம்புங்க என்றிட...

பாவி என் ஆசைக்கு கொல்லி வச்சுடுவா போல என நினைத்து கொண்ட வேலனின் தாயார்... அம்மாடி நிரலி அப்பாவா இப்படிலாம் பேசக்கூடாது நீ போய் உனக்கு தேவையான எல்லாம் எடுத்து வை என்றிட இல்லை அத்தை நான் போகலை என கூறியவள் அவளது அறைக்குள் சென்று மறைந்தாள்...

ராஜா போகும் தன் மகளையே பார்த்து கொண்டிருக்க.. எப்பா ராஜா நீ இங்க உக்காரு நான் போய் புள்ளைய கூப்பிட்டு வாரேன் என்று உள்ளே சென்றார் ஜெயந்தி...

அடியே எதுக்கு டி இப்போ படிக்கலைனு சொல்ற என ஜெயந்தி நிரலியை அதட்ட.. இல்லை அத்தை மாமா தான் உன் அப்பா வந்து கூப்பிட்டால் போக கூடாது நீ படிக்க வேண்டாம்னு சொன்னாங்க என்று தலையை குனிந்து கொண்டே கூற... அவன் சொன்ன உனக்கு எங்க போச்சு புத்தி...

புத்தி இருக்கு தான் ஆனால் உடம்புல சக்தி இல்லையே அவனிடம் அடி வாங்க... நேத்து நைட் முழுதாய் குடித்து வந்தவன்.. நிதானமின்றி அவளை தன் ஆசைக்கு எடுத்து கொண்டவன் நிரலியிடம் சொன்னது உன் அப்பன் நாளைக்கு வந்து உன்னை கூப்பிடுவான் ஆனால் நீ உனக்கு படிக்க இஷ்டம் இல்லைனு சொல்லிடனும் என்றிட...

இல்லை மாமா நான் போய் படிக்குறேன் எனக்கு படிக்க ஆசை என கூற.. உனக்கு நேத்து கொடுத்தது மறந்து போச்சா.. நான் என்ன சொல்றேனோ அதான் செய்யணும் எதிர்த்து பேசக்கூடாது என கூற.. மாமா இது மட்டும் ஓத்துக்கோங்க எனக்கு படிக்க ரொம்ப ஆசை என கூற அடுத்து அவளிடம் வேலனின் அடியும் உதையும் தான் பேசியது...

Continue Reading

You'll Also Like

14.5K 167 25
இது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும்...
11.9K 1.9K 24
கதிர் முல்லை எப்போது இணைவர். Km story
16.5K 611 19
a suspense police love story ..read பண்ணி பாருங்க😊
40 2 1
read and write ✍️