நிரலி (நிறைவுற்றது)...

By incomplete_writer

14.3K 747 1.3K

இது முழுதும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம் மட்டுமே... பெண்ணவளின் வாழ்க்கை எப்படி தொடங்கி எங்கோ சென்று எதிலே... More

நிரலி-1
நிரலி-3
நிரலி-4
நிரலி-5
நிரலி-6
நிரலி-7
நிரலி-8
நிரலி-9
நிரலி-10
நிரலி-11
author note

நிரலி -2

1.4K 85 563
By incomplete_writer

நிரலி பிறந்த மூன்று  வருடத்தில் அவள் செய்யும் சேட்டையில் வீட்டில் பிடிக்காதவர்களும் அவளின் சிறு சிறு குறும்புகளை ரசித்தபடியே இருந்தனர்...

சித்ரா மீண்டும் கருவுற்றிருக்க இம்முறை ஆண்பிள்ளை பிறக்கும் என்று குடும்பத்தாரோடு சேர்ந்து சித்ராவும் ஆசைப்பட.. ராஜா எந்த பிள்ளை என்றாலும் என் பிள்ளை தான் என்று எந்த கவலையுமின்றி நிரலி மேல் உயிரே வைத்து அந்த ஊரையே வலம் வந்து கொண்டிருந்தார்...

பிரசவவலி எடுக்க மீண்டும் பெண் பிள்ளை பிறக்க... வீட்டினர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிப்போன சித்ரா தன்னையே வெறுத்து கொண்டு அந்த பச்சிளம் பிள்ளையை தூக்க கூட இல்லாமல் ஏன் அதன் பிஞ்சு முகத்தை கூட பார்க்காமல் வீம்பு பண்ண...

ராஜா தன் மனைவியிடம் சித்ரா இதல்லாம் ரொம்ப தப்பு எந்த பிள்ளை என்றாலும் நம்ம உயிர் கொண்டு உருவாகியது அதனின் முகத்தை கூட பார்க்காமல் இப்படி உக்காந்துருக்க.. பிள்ளை அழுகுது பாரு முதல பசி ஆத்து என கூற சித்ரா தேம்பி தேம்பி அழ...

அப்பா ஏன் அம்மா அழறாங்க என தத்தி தத்தி தன் மழலை மொழியால் நிரலி கேட்க.. அது ஒன்னும் இல்லாம உங்க அம்மாக்கு பைத்தியம் புடுச்சுருக்கு அவளை விடு உனக்கு குட்டி பாப்பா புடுச்சுருக்க என தன் மகளை மடியில் அமர்த்தி கொண்டு கேட்க....

எனக்கு ரொம்ப புடுச்சுருக்குப்பா ஆனால் பாப்பா ஏன் என்ன மாதிரி அமைதியா இல்லாம அழுதுகிட்டே இருக்கு என கேட்க.. அது ஒண்ணுமில்லைடா பாப்பாக்கு பசிக்குது நீங்க போய் வெளில பாட்டியோட இருங்க நான் அம்மா கூட பேசிட்டு வரேன் என கூற தன் தங்கையின் பிஞ்சு விரல்களை ஒருமுறை தொட்டுவிட்டு ஓடி மறைந்தாள் நிரலி...

சித்து முதல பாப்பாவ பாரு அழகுற அப்பறம் எதுவாக இருந்தாலும் பேசலாம் என கூற... என்னங்க எனக்கு பயமா இருக்கு நமக்கு ஆம்பிளைப்பில்லை இல்லைனு என சொன்னதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருக்க முதல பிள்ளைய பாரு என கடுமையாக பேச.. சித்ரா மனமே இல்லாமல் கணவனுக்கு கட்டுப்பட்டு குழந்தையை கவனித்தால்....

கணவன் எவ்வளவு ஆறுதல் மொழிகள் கூறியும் சித்ரா மனதில் இருந்த ஆண் பிள்ளையின் ஆசை சற்றும் குறையவில்லை... பெண்ணோ ஆணோ இரண்டு பிள்ளை போதும் என்று முடிவெடுத்திருந்த ராஜாவின் மனதை கரைக்க எண்ணி ஏதேதோ பேச நாளடைவில் எந்த முன்னேற்றமும் இல்லை... பின் தன் அம்மாவை பேச சொல்லலாம் என எண்ணி தாயை வீட்டுக்கு வர வைத்திருந்தாள்..

வீட்டுக்கு மாமியார் வந்திருக்க வாங்க அத்தை எப்படி இருக்கீங்க என கேட்ட படி நிரலியை மடியில் அமர்த்திக்கொண்டு தனது இரண்டாவது மகளை கொஞ்சிக்கொண்டிருக்க... தம்பி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என கூற மனைவியும் முகத்தை குனிந்த தலை நிமிராமல் இருக்கவும் என்ன ஏதோ மனைவி சொல்ல முடியா விஷயம் போல என நினைத்து சொல்லுங்க அத்தை என கேட்க...

அது ஒன்னும் இல்லை மாப்பிளை நேத்து போய் என் மகளோட ஜாதகம் பார்த்துட்டு வந்தேன்.... நிச்சயம் அடுத்த பிள்ளை சிங்கக்குட்டி தான்... நீங்க ஏதோ ரெண்டு பிள்ளை போதும்னு சொல்டிங்கனு சித்து சொன்னா.. அதான் என ராகமிழுக்க... ஒஹ்ஹஹ் என்று மட்டும் கூறிய ராஜா வேறொன்றும் கூறாமல் பிள்ளைகளை கீழே மெத்தையில் கிடத்தி அவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்களை போட்டுவிட்டு...

ஒரு நிமிஷம் அத்தை நில்லுங்க வரேன் என கூறிவிட்டு உள்ளே சென்ற ராஜா ஒரு பெரிய பெட்டி எடுத்து கொண்டு வந்து... நேரே தன் மனைவியை தாண்டி மாமியாரிடம் சென்றவர்... அத்தை இதுல உங்க பொண்ணு பொருள் எல்லாம் இருக்கு அப்பறம் இன்னைக்கு இல்லை என்னைக்கு வேண்டுமானாலும் நீங்க கொடுத்த பொருள் எல்லாம் வண்டி வச்சு ஏத்திக்கோங்க அப்பறம் உங்க பொண்ணுக்கு தரலாமா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிவச்சு எத்துணை ஆம்பிள பிள்ளை வேணும்னாலும் பெத்துக்க சொல்லுங்க எனக்கு என் ரெண்டு பொண்ணுக போதும் என கூறிவிட்டு வாசலை நோக்கி கைகாட்ட...

சித்ராவும் அவளின் தாயாரும் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்... ராஜா கூறிவிட்டு ஒன்றும் நடவாதது போல் தன் பிள்ளைகளோடு விளையாட சென்றார்... பின் சித்ரா ஓடி வந்து ஹையோ நான் தெரியாம ஆசை பட்டுட்டேன் எனக்கு நீங்களும் நம்ம ரெண்டு பிள்ளைகளும் மட்டும் போதுங்க என கூற...

அவளை மேலும் கீழும் பார்த்த ராஜா சரி ஆனால் இனி இது போல எதாவது லூசு தனமா பேச கூட எதாவது லூச கூட்டிகிட்டு வந்த நான் மனுசனா இருக்க மாட்டேன் என கூற... இல்லை இல்லை இனி அப்படி நெனைக்கமாட்டேன் ஏனோ ஊர்ல எல்லாரும் அப்படி சொல்ல புத்தி கொஞ்சம் பின்ன போச்சு நமக்கு ரெண்டு பிள்ளைங்க போதும் என கூறி தனது இளைய மகளை சித்ரா தூக்கி கொள்ள நிரலியை ராஜா தூக்கி கொண்டு நேராய் மாமியாரிடம் சென்று இனிமேல் எங்க குடும்ப முடிவு எடுக்குறத பத்தி பேசுறத இருந்தால் நீங்கள் இந்த பக்கம் வராமல் இருப்பதே நல்லது... என கூறிவிட்டு சென்றுவிட்டார்...

அதன் பின் யாரும் அவரிடம் இன்னொரு குழந்தை பற்றி பேசுவது கிடையாது   ... தனது இரண்டாவது குழந்தைக்கு இழையினி என பெயர் சூட்டிருக்க வருடங்கள் அதன் போக்கில் யாருக்கும் காத்திராமல் பதினைந்து வருடங்கள் கடந்திருந்தது...

நிரலி தன் பெயருக்கு ஏற்றார் போல் வீரமங்கையாக இருந்தாலும் அப்பா என்று வந்துவிட்டால் இன்றும் மூன்று வயது குழந்தை போல தான் தந்தை சொல் சொல் மீறிடத பெண்..தனக்கு விவரம் தெரிந்த பின் தங்கை பிறந்தால் அந்த பச்சிளம் பால்மார குழந்தை மேல் அன்று வைத்த பாசம் ஆண்டுகள் பல கடந்தும் அல்ல அல்ல குறையாமல் அதற்கும் மேல் அதிகரித்து கொண்டே போனது... தங்கைக்கு சிறு கஷ்டம் என்றாலும் உயிர்துறக்கவும் தயங்கமாட்டாள்...

எந்த கஷ்டம் இஷ்டம் என்றாலும் முதலில் தந்தையிடம் மட்டுமே சொல்வாள் அதே போல் தந்தை ஒரு முடிவெடுத்தால் அதை தாண்டி எதுவும் செய்யமாட்டாள்.. மொத்தத்தில் தன் வாழ்க்கையில் நல்லது செய்வது தன் தந்தை ஒருவர் மட்டுமே என எண்ணி தன் மொத்த வாழ்க்கையும் ஒப்படைத்து விட்டாள்.

தன் தந்தையாலே நாளை தன் நிம்மதி பறிபோகும் என உணர்ந்திருந்தால் அப்படியே அப்பாவை மலைபோல் நம்பியிருக்க மாட்டாள்...

ஆனால் இழையினி கொஞ்சம் வித்தியாசம் தான் ரொம்ப பயந்த சுபாவமும் இல்லாமல் தைரியமும் அதிகம் இல்லாமல் சாதாரணமாய் இருந்தால்... அப்பாவிடம் செல்லம் தான் இருந்தும் அம்மாவிடம் கொஞ்சி கெஞ்சி சில நேரம் மிஞ்சியும் தனது காரியத்தை செய்து கொள்வாள்.. அப்பா அம்மா சொன்னால் கூட சில நேரம் எதாவது மறுப்பவள் அக்கா ஒன்று சொன்னாலும் அது இழையினிக்கு பிடிக்கவில்லை என்றாலும் அக்கா பேச்சை தட்டமாட்டாள்... தன் தமக்கைக்கு நிகராய் அவளும் அதீத பிரியம் வைத்திருந்தாள்.. 

நிரலி பதினெட்டு வகை இளமங்கையாய்  ஊரை சுற்றிவர தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் முதலாமாண்டு காலடி எடுத்து வைத்திருக்க வேறு வழி  இல்லாமல் ஹாஸ்டல்லில் தங்கி படிக்க வேண்டியிருக்க.. ராஜா தான் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய அவரது மனைவி அவரை கடிந்து கொண்டு சும்மா புள்ளை படிக்க போகும் போது அழுது அவளை படிக்க விடாமா பண்ணிடுவீங்க போல என கூறி அவரை தேத்தி  மகளை விடுதியில் சேர்த்துவிட்டு அனைவரும் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால் நிரலி அனைவர்க்கும் ஆறுதல் கூறி தன் தங்கையை அணைத்து பெற்றோர்களை ஒழுங்கங்க பார்த்தும் கொள்ளும்படி கூறி மேலும் சில பல அறிவுரை கூறி அனைவர்க்கும் டாட்டா கூறி வழிஅனுப்பிவிட்டு சென்றாள்...

நிரலி கல்லூரி சேர்ந்த இரண்டு மாதத்தில் திடீரென ராஜாவின்
தாயார் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கபட்டார்... இருந்தும் வயது முதிர்ந்ததால் படுத்த படுக்கை ஆகிப்போனார்..

இனி தன் வாழ்வு  மாறப்போவது அறியாமல் நிரலி கல்லூரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள்....

Continue Reading

You'll Also Like

11.2K 486 8
ஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்...
20.6K 808 7
தாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.
8K 304 3
கணவன் மனைவிக்கிடையேயான காதல் உரையாடல்கள் - Inspired By true events