நேற்று இல்லாத மாற்றம் |Comple...

By safrisha

49.4K 2.1K 162

"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம... More

-1-
-3-
-4-
-5-
-6-
-7-
-8-
-9-
-10-
-11-
-12-
-13-
-14-
-15-
-16-
-17-
-18-
-19-
-20-
-21-
-22-
-23-
-24-
-25-
-26-
-27-
-28-
-29-
-30-
-31-
-32-
-33-
-34-
-35-
-36-
-37-
-38-
-39-
-40-
-41-
-42-
-43-
-44-
-45-
-46-
-47-
-48-
-49-
-50-
51
52
53
Author's note
Announcement

-2-

1.8K 56 7
By safrisha

அவன் அருகே பதுமை போன்ற அழகுடன் ஒருத்தி தன் மொபைல் போனை காட்டியபடி ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவனுக்குத்தான் அவள் சொல்வது எதுவும் செவிகளில் விழவில்லை. கண்ணை எடுக்காமல் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்க

"ஹெலோ!!!! எக்ஸ் க்யூஸ்மீ மிஸ்டர்..!!" என அவள் தன்னால் இயன்றவரை பலமாக அழைக்க

'ஓஹ்! என்கிட்ட தான் ஏதோ சொல்றாங்க' என உணர்வு பெற்று

"Sorry?" என கேள்விக்குறியாக அவளை பார்க்க

"கென் யூ டு மீ அ பேவர் ப்ளீஸ்?"

அவனும் விழிகளாலே ஆமோதிக்க ஆங்கிலமும் சிங்களமும் கலந்த மொழியில் மணமக்களை போட்டோ எடுத்து தரும்படி தன் மொபைலை அவனிடம் நீட்டினாள்.

அதன் பின்பே ரய்யான் அங்கிருந்த கூட்டத்தையும், இருவருக்குமான உயர வித்தியாசத்தை கவனித்தான். அவளது முழு உயரமும் அவனது தோள்பட்டையை கூட எட்டவில்லை. ஆனாலும் அந்த வித்தியாசம் க்யூட் ஆக இருந்தது. தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.

அவள் கேட்டது போல சில போட்டோக்களை எடுத்துக் கொடுத்து விட்டு பதிலுக்கு அவளின் நன்றியை பெற்று கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அதன்பிறகு அவனைப் பிடித்திருந்த சோர்வு, களைப்பு, தலைவலி எல்லாம் போன இடம் தெரியவில்லை. சுவிட்ச் போட்டது போல உற்சாகம் அவனை தொற்றிக் கொண்டது.

அவனது மனமோ தான் செய்வது சரியா பிழையா என்றெல்லாம் ஆராயவில்லை. அங்கிருந்து வந்ததில் இருந்து அவன் விழிகள் மீண்டும் மீண்டும் அவளை காணவே ஏங்கின.

ஒருமுறை தாயாரிடம் பேசுவதற்கு செல்வதுபோல பெண்கள் பகுதிக்குள் நுழைந்து விழிகளால் அவளை தேடினான். ஆனால் அவள் சிக்கவில்லை.

வெளியில் வந்தவனுக்கு மறுபடியும் உள்ளே போக வேண்டும் அவளை சந்திக்க வேண்டுமென மனது துடிக்க ஆரம்பித்தது. சுற்றத்தை எண்ணி சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான்.

நேரம் கடந்து செல்ல திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஒவ்வொராக விடைபெற ஆரம்பித்தனர். ஓரிரு வார்த்தை பேசி அவர்களை வழியனுப்புவதில் ஈடுபட்டாலும் விழிகள் மட்டும் அவள் தரிசணதுக்காகவே தவமிருந்தன.

இறுதியாக மணமக்களது வீட்டு ஆட்களும், நெருங்கிய ஒரு சில நண்பர்களும் மட்டுமே மண்டபத்தில் எஞ்சி இருந்தனர். 
மண்டபத்தின் வாசலிற்கு அருகில் ரய்யானும் அவனது நண்பர்கள் சிலரும் கதையளந்து கொண்டிருக்கையில் அவனுக்கு தெரிந்த உருவம் ஒன்று அவனை கடந்து சென்றதை உணர்ந்து திரும்பி பார்த்தான்.

அவன் மனதை கொள்ளை கொண்ட அழகி ஒரு காரில் ஏறுவது தெரிந்தது. அவன் பேசலாமா வேண்டாமா என மனதுக்குள் வாக்குவாதம் நடத்திக்கொண்டு இருக்கும் போதே கார் மண்டபத்தின் நுழைவாயிலை தாண்டி மறைந்தது.

ஏமாற்றத்துடன் திரும்ப அருகே இருந்த நண்பன்
"என்னடா தெரிஞ்சவங்களா?"
என்றிட

"ம்ப்ச்... தெரிஞ்சுக்கலாம்னு தான் ட்ரை பண்ணேன்.. போய்ட்டா.." வருத்ததுடன் ரய்யான் தன்னை மறந்து சொல்லிவிட நண்பர்களோ அவன் விளையாட்டாய் சொல்வதாக எண்ணி அவனை கேலி செய்தனர்.

"விடு விடு.. அது போனா என்ன கலியாண ஹோல்ல இன்னும் நெறைய பேர் இருப்பாங்க.. வாங்க போய் பார்க்கலாம்.." என்றான் மற்றொருவன்.

"டேய் நான் சீரியஸா பேசிட்டு இருக்கன்டா.. " என்று ஆரம்பித்து உள்ளே நடந்ததை அவர்களிடம் பகிர்ந்து கொண்டான்.

"துரோகி அவ்ளோ நேரம் அவனோட தானே நானும் சுத்திட்டு இருந்தேன்... உள்ள போற டைம் பார்த்து நம்மல கலட்டி விட்டுடு போய்டான்.." மறுபடியும் அதே நண்பன் குறைகூற

"கூட போயிருந்தா மட்டும் என்ன பண்ணி இருப்ப?" என மற்ற நண்பன் கேலி செய்ய

"எங்களுக்கும் போட்டோ எடுக்க தெரியும்..." என்றவனை
ரய்யான் முறைத்துப் பார்த்தான்.

"ரய்யான்! இந்த கலியாண மண்டபத்துல பார்க்குற புள்ளைகல மட்டும் நம்பவே கூடாது டா... எல்லாம் புல் மேக்கப். ஒரு மூஞ்சியும் ஒரிஜினல் இல்ல... உஷார இருந்துக்கடா கவுந்துராத.." அதே நண்பன் அலோசனையும் வழங்கினான்.

அதன்பின் அந்த பேச்சு அப்படியே விடுபட்டது.

***

திருமணத்திற்காக ஒரு வாரம் மட்டுமே ரய்யான் விடுப்பு போட்டிருந்ததால் அடுத்த வாரமே பணிக்கு திரும்ப வேண்டிய நிலை.

அதன் பிறகு அந்த அழகியை பற்றி நினைக்கக்கூட முடியாத அளவுக்கு பணிச்சுமை அவனை இருக்கமாக வைத்திருந்தது.

ஒருமாதம் ஓடி ஓய்ந்த பின்னர் ஒரு புதன்கிழமை போய விடுமுறை வரவே நண்பர்களுடன் எம் சீ யில் உலாவி விட்டு வரலாம் என்று கிளம்பி சென்றான்.

அவனுக்கு தனிப்பட்டு எதுவும் வாங்வோ அல்லது வேறு தேவையோ இருக்கவில்லை. நண்பர்கள் செல்லும் இடமெல்லாம் அவனும் சென்று கொண்டிருந்தான்.

அப்படியே சென்று கொண்டிருந்த வேளை யாரோ தன் முதுகில் தட்டுவது உணர்ந்து திரும்பி பார்க்க அவனது இமைகள் சில நொடிகள் இமைக்க மறந்தன.

ஆம் அவள்! அந்த அழகியே தான்! அன்று போல இன்றும் தன் மொபைலால் அவன் முதுகில் தட்டியது.

அவர்கள் சந்தித்துக் கொண்ட தளத்தில் உள்ள கொபி ஷொப்பில் ஒரே மேசையில் அந்த அழகிக்கு நேர் எதிர் இருக்கையில் அமர்ந்திகருந்தான் ரய்யான்.

அவனால் நடப்பதை நிஜம் என்று ஏற்றுக் கொள்ளவே பல வினாடிகள் தேவைப்பட்டது.

"ஹெல்லோ! வெயர் வ யூ லொஸ்ட்?!" என்று தன் கையை அசைத்து அவளே அவனை நிகழ்வுக்கு மீட்டெடுத்தாள்.

"நோ.. ஜஸ்ட் திங்க்கிங் அபௌட் ஸம்திங்.." என சமாளித்து விட்டு

"உங்களை இங்க பார்ப்பேன்னு நெனைக்கவே இல்ல.."

"ஸேம் ஹியர்.. யூ ப்ரொம் Kandy, ரைட்? டூ யூ வேர்க் ஹியர்?"

"நேடிவ் கெண்டி தான்..
யாஹ் ஐ வேர்க் இன் எம்.ஏ.எஸ்.."

"வாவ்..! எம்.ஏ.எஸ் ல ஜொயின் ஆகனும்னு மை ட்ரீம்.. ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. ஒன்லைன் இன்டர்வியூ ல ஸெலக்கட் ஆகிட்டேன்"

"என்ன டிபார்ட்மெண்ட்?"

"ப்ரொடக்ஷன்"

"குட்.. எனிவேய் ஓல் தி பெஸ்ட்"

'என்னடா ரய்யான் இப்ப அவளுக்கு வேலையா வாங்கி குடுக்க போற? அவள பத்தி கேளுடா அட்ரஸ் மொபைல் நம்பர் ஏதாவது உனக்கு யூஸ் ஆகுற மாதிரி கேளு' என மனசு எடுத்து கொடுக்க.

"அன்னைக்கு வெட்டிங்ல எப்டி..
ப்ரைட் ஸைட் ரிலேஷனா ?"

"அக்ச்சுவலி நொட்.. ப்ரைட்டல் ட்ரெஸ்ஸிங்கு வந்தது என் ப்ரெண்ட் தான்..நான் அவள் கம்பெனிக்காக வந்தேன்..."

"ஓஹ்! "

"நான் இங்க சார்டட் அக்கவுண்ட்டிங் முடிச்சிட்டு ஒரு கம்பெனில பார்ட் டைமா வேர்க் பண்ணிட்டு சிமா படிச்சிட்டு இருக்கன்.."

"ஆஹ்! குட்.. உங்க ஊர்? "

"எனக்கு நேடிவ் Kalutara.. இங்க ப்ரெண்ட்ஸோட ஸ்டே பண்ணி இருக்கன்..ப்யூச்சர்ல இங்கே ஸெட்ல் ஆகனும்னு தான் ஆசை.." அவள் வாயை விட விழிகளே அதிகம் பேசின.

"ஓஹ்! நைஸ்!"

"நீங்க? "

"நானும் ப்ரெண்ட்ஸோட தான் ரூம் எடுத்து தங்கியிருக்கன்.. பட் ப்யூச்சர் பத்தி இன்னும் டிசைட் பண்ணல" என அவளை பார்த்த படியே சொல்ல இருவர் பார்வையும் சந்தித்து மீண்டன.

ரய்யான் இரண்டாவது சந்திப்பில் அவளிடம் தன்னை பறிகொடுத்தான். ஆனால் அவளிடம் சொல்லத்தான் தைரியம் வரவில்லை.

இப்போதே சொல்லி துளிர் விட்டிருக்கும் நட்பையும் கெடுத்து விடக்கூடாது என்பதும் ஒரு காரணம்.

இருவரும் அழைப்பேசி இலக்கங்களை பரிமாறி கொண்டார்கள். நம்பர் ஸேவ் செய்து கொள்வதற்காக இருவர் குரலும் ஒரே சமயத்தில் "உங்க நேம்?" என சேர்ந்து ஒலிக்க இருவருமே சிரித்து விட்டார்கள்.

"மை நேம் இஸ் Shireen.." என அவள்  முதலில் சொல்ல அவனும் அவன் பெயரை சொன்னான்.

"நைஸ் நேம்" பாராட்டுதலுடன் பெயரை போனில் பதிவேற்றம் செய்தபடியே "இனி மொபைலால் உங்க முதுகுல  தட்ட தேவையில்லை"

"நீங்க தட்டினாலும் எனக்கு எந்த ப்ரொப்லமும் இல்ல.." அவனும் வெட்கமே இல்லாமல் சொல்ல அவளும் சிரித்தபடி விடை பெற்றாள்.

அன்றைய இரவு ரய்யானுக்கு தூங்கா இரவாகிப் போனது. அவளை பற்றி பெரிதாக எதுவும் தெரியாவிடினும் மீதமுள்ள வாழ்க்கை அவளுடன் தான் என்று அவன் மனது தீர்மானித்து விட்டிருந்தது.

இரவு முழுவதும் அவள் பேசியது சிரித்தது என டீவியில்  கிரிக்கெட்டில் ஒளிபரப்புவது போல அவளின் ஒவ்வொரு அசைவையும் ரீவைண்ட் செய்து ரசித்தான்.

அதன் பின்னர் அவளை சந்திக்க முடியவில்லை. இருந்தாலும் வட்ஸ்அப்பில் சாட் செய்தான். அவளும் அவனுக்கு தவறாது ரிப்ளை செய்தாள். அதுவே அவனை அடுத்த கட்டத்திற்கு செல்ல தூண்டியது.

Thanks for reading!
If u like this story pls support me with ur votes and comments

Continue Reading

You'll Also Like

2.2K 176 20
Here is my second story Oru Kutty love story Love...... Love na Ypavume sweet ah pesitu Ypo paru love dialogue ah pesitu irukukavangaluku than v...
284K 9K 38
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.
111K 7.8K 35
Hai thangangala..............mature content.....core story partially based on few true incidents.....dont get more attached to the reel charecters...
49.4K 2.1K 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் ப...